I
1897 ஆண்டு சென்னையில் விக்டோரியா பப்ளிக் ஹாலில் முதன் முறையாக ஒரு சினிமா திரையிடப்பட்டது.அடுத்த 19 ஆண்டுகளில் -1916இல் நடராஜ முதலியாரும் தர்மலிங்க முதலியாரும் சேர்ந்து கீசகவதம் படத்தைச் சென்னையிலேயே தயாரித்தார்கள்.இன்று இந்திய சினிமாவில் தமிழ்ச் சினிமாவின் வகிபாகம் மிக முக்கியமானதாக மாறிவிட்டது.ஆண்டுக்கு 100க்குக் குறையாத எண்ணிக்கையில் தமிழ்த் திரைப் படங்கள் வெளியாகின்றன.
இக்கட்டுரையில் தமிழ் சினிமாவின் கலா பூர்வமான செய்திகளைப் பற்றிப் பேசப் போவ தில்லை. அதன் வியாபாரத்தன்மைகள்...








