கீற்று இணையதளம் இதுவரை shared server-ல் இயங்கி வந்துள்ளது. அதாவது ஒரே server-ல் கீற்று போன்ற பல இணையதளங்களுக்கு இடம் அளிக்கப்பட்டிருக்கும். இந்த வகையில் server-க்கு நாம் கட்ட வேண்டிய தொகை குறைவாக இருக்கும். அதே நேரத்தில் நமது இணையதளத்தின் பயன்பாட்டு அளவு (CPU usuage, Memory usuage & MySQL usuage) வரம்பிற்குட்பட்டதாக இருக்க வேண்டும். அண்மைக்காலமாக அந்த வரம்பைத் தாண்டி கீற்று இயங்கி வருகிறது. காரணம் கடந்த நான்கு மாதங்களாக அதிகரித்து வரும் கீற்று வாசகர்களின் எண்ணிக்கை, ஐந்து ஆண்டுகளில் வெளியான படைப்புகள், சிற்றிதழ்கள் அனைத்தையும்...






