அவமானப்படுத்தப்படும் பேராசான் மார்க்ஸ்
மனிதகுலம் படைத்தளித்திருக்கும் கருவூலங்கள் யாவற்றையும் பற்றிய அறிவைப் பெற்று உங்கள் சிந்தனையை நீங்கள் வளமாக்கிக் கொள்ளும் போது மட்டுமே உங்களால் கம்யூனிஸ்ட் ஆக முடியும். - வி.இ.லெனின்.
1
நான் அதிகம் தேடலுடன் என்னை பிணைத்திருந்த காலத்தில்தான் லெனினின் மேற்படி வாசகத்தை படிக்க நேர்ந்தது. அந்த நேரத்தில் மார்க்சியம் தொடர்பான நூல்களைத்தான் தேடித் தேடிப் படிப்பதுண்டு. அந்த நேரங்களில் அவ்வாறு படிப்பதில் ஒரு இனம்புரியாத பெருமிதமும், பூரிப்பும் இருந்ததும்...








