தமிழகத்தின் சமூகநீதி வரலாறு மிக நீண்டது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன், அதற்காகவே தொடங்கப்பட்ட இயக்கம்தான் திராவிட இயக்கம். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் ஆகிய மூன்று தளங்களிலும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு தேவை என்னும் கோரிக்கை, படிப்படியாகத்தான் நடைமுறைக்கு வந்தது. இன்னும் கூட அதில்நாம் முழுமையை எட்டவில்லை. அதற்குள்ளாகவே ஆயிரத்தெட்டு தடைகளைச் சந்திக்க வேண்டி வருகிறது.
அப்படிப்பட்டத் தடைகளில் ஒன்றுதான், நுழைவுத் தேர்வு என்பது. ஆண்டின் இறுதியில் நடைபெறும்...








