vaiyapuripillai_230(1891-1956)

-2010 

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவரின் பெற்றோர் சரவணப்பெருமாள் பாப்பம்மாள். பாளையங்கோட்டையில் பள்ளிப்படிப்பை முடித்தவர். திருநெல்வேலி கல்லூரிப் படிப்பில் சென்னை மாகாணத்திலேயே தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்று சேதுபதி தங்கப்பதக்கம் பெற்றார். தமிழ் ஆர்வம் அதிகம் இருந்தாலும் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கறிஞராகப் பணியாற்றினார். உ.வே.சா.விற்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்து வெளியிட்டார். இலக்கியங்களுக்குக் கால நிர்ணயம் செய்ததில் இவருக்குப் பெரும் பங்குண்டு. இவர் தமிழ் ஆராய்ச்சியில் விஞ்ஞான பூர்வமான பார்வையோடு ஆய்வு செய்தவர். சங்ககால மக்கள் அறிந்த மற்றும் பயன்படுத்திய உலோகங்களின் அடிப்படையில் காலநிர்ணயம் செய்வது சரிதான் என்றும், அப்படி தவறு என்று நிரூபணம் ஆகும் வரை ஏற்றுக் கொள்வதுதான் நியாயமாக இருக்கும் என்றார்.

அதே நேரம் இந்தக் கால நிர்ணயத்தை தேவநேயப் பாவாணர் போன்றோர்கள் வையாபுரிப்பிள்ளை தமிழ் இலக்கியங்களின் காலத்தைச் சரியாகக் கணிக்கவில்லை என்றும். கிறிஸ்துவுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியத்தைப் பிற்பட்ட காலத்தது என்று கூறுவதாகவும் கண்டித்தனர். ஆனால் வையாபுரிப்பிள்ளையோ தமது ஆய்வின் முடிவுகளை முற்றுப்பெற்றதாகக் கூறவில்லை. மேலும் இவர் திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத்தலைவராக இருந்த காலத்தில் மலையாள மொழி லெக்சிகன் பதிப்பிக்கப்பட்டது. இவரின் ஆய்வு மாணவர்தான் வ.அய். சுப்பிரமணியம். தமிழின் பழம்பெருமைக்கு எதிரானவர் வையாபுரிப்பிள்ளை என்று திராவிடக் கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இரசிகமணி டி.கே.சி.யுடன் இணைந்து திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர். கம்பனை ஆதரித்தவர் என்பதால் இருட்டடிப்பு செய்யப்பட்ட பல தமிழறிஞர்களில் ஒருவர் எஸ். வையாபுரிப்பிள்ளை. பாரதியாரிடமும்,வ.உ.சி.யிடமும் நெருக்கமான அறிமுகம் இவருக்கு இருந்தது. வ.உ.சி. சிறைவாசத்திற்குப் பிறகு அரசியலில் வெறுப்புற்று இருந்த நேரத்தில் ஒலைச்சுவடியிலிருந்த இளம்பூரணரின் தொல்காப்பிய உரையைப் பதிப்பிக்கும் நோக்கத்தோடு படியெடுத்தார். அப்படிப் படியெடுத்ததை வையாபுரிப் பிள்ளையிடம் காட்டியதைப் பற்றி வ.உ.சி. குறிப்பிட்டுள்ளார். 1936 முதல் 1946 வரை சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித்துறை தலைவராகப் பணியாற்றினார். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியுடன் வையாபுரிப்பிள்ளையின் பங்களிப்பு முடிந்துவிடவில்லை. நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியவர். மனோன்மணியம் உரையுடன் தொடங்கிய அவர் 1955ல் திவ்யப் பிரபந்தத்தை உரையுடன் பதிப்பித்துத் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றினார். கம்பராமாயணத்துக்கு உரை எழுதிப் பதிப்பிக்க வேண்டும் என்கிற அவரது ஆவல் மட்டும் நிறைவேறாமலே போய்விட்டது. இவரின் மறைவு பற்றி ஸ்ரீ வையாபுரிப் பிள்ளை காலமானது தமிழ் உலகிற்கு ஈடுசெய்யமுடியாத நஷ்டம் என்று தினமணி நாளிதழ் 18.2.1956 அன்று தலையங்கம் எழுதியது.

 

1.எஸ்.வையாபுரிப்பிள்ளையின் பதிப்பு நூல்கள்

1. 1922 மனோன்மணீயம்

2. 1925 இராஜாராஜ தேவருலா

3. 1927 துகில்விடு தூது

4. 1928 கோதை நாச்சியார் தாலாட்டு

5. 1930 நாமதீப நிகண்டு

6. 1931 அரும்பொருள் விளக்க நிகண்டு

7. 1931 களவியற்காரிகை

8. 1931 பிங்கலந்தை (முற்றுப்பெறாதது)

9. 1932 தினகர வெண்பா

10. 1932 குருகூர்ப்பள்ளு

11. 1932 கம்பராமாயணம் - புத்தகாண்டம் - முதல் மூன்று படலங்கள்

12. 1932 திருக்றுங்குடி அழகிய நம்பியுலா

13. 1932 கபாலீசர் தோத்திரம்

14. 1932 கற்பகவல்லி தோத்திரம்

15. 1933 நெல்விடு தூது

16. 1933 திருப்பணி மாலைகள்

17. 1933 திருமுருகாற்றுப்படை (புதியவுரை)

18. 1933 பூகோள விலாசம்

19. 1933 திருமந்திரம்

20. 1933 தொல்காப்பியம் - பொருள் - இளம்பூரணம் பகுதி 2

21. 1933 சங்கநூற் புலவர்கள் பெயரகராதி

22. 1934 சித்தாந்த சாத்திரங்கள்

23. 1934 பொதிகை நிகண்டு

24. 1934 பணவீடு தூது

25. 1934 மதுரைக் கோவை  

26. 1934 முப்பந்தொட்டியுலா

27. 1934 தொல்காப்பியம் - பொருள் - நச்சினார்க் கினியம்

28. 1936 தொல்காப்பியம் பொருள் இளம்பூரணம்

29. 1936 தமிழ்ப் போரகராதி (ஆறு தொகுதிகள்)

30. 1936 தெய்வச்சிலையார் விறலிவிடு தூது

31. 1937 கம்பராமாயணம் - பாலகாண்டம் (முதல் 7 படலங்கள்)

32. 1937 அருள் முருகாற்றுப்படை

33. 1937 பொருள் முருகாற்றுப்படை

34. 1937 அணி முருகாற்றுப்படை

35. 1937 வரு முருகாற்றுப்படை

36. 1937 திருவெழுகூற்றிருக்கை

37. 1937 சக்தி வகுப்பு

38. 1937 கள வகுப்பு

39. 1937 சொரூப வகுப்பு

40. 1937 கர வகுப்பு

41. 1938 புறத்திரட்டு

42. 1939 கயாதரம்

43. 1939 சாத்தூர் நொண்டி

44. 1939 கைலாச நிகண்டு (முற்றுப் பெறாதது)

45. 1939 தமிழ்ப் பேரகராதி (இணைப்புப் பகுதி)

46. 1940 சங்க இலக்கியம் - பாட்டும் தொகையும்

47. 1941 சீவக சிந்தாமணி

48. 1941 நரி விருத்தம் (சீவக சிந்தாமணிப் பதிப்பின் இணைப்பு)

49. 1941 ஜீவசம்போதனை (முற்றுப்பெறாதது)

50. 1943 நவநீதப் பாட்டியல்

51. 1943 திருமுருகாற்றுப்படை (உரையாசிரியருரை)

52. 1944 நான்மணிக்கடிகை

53. 1944 இன்னா நாற்பது

54. 1944 திரிகடுகமும் சிறுபஞ்சமும்

55. 1945 பராங்குச நாடகம்

56. 1949 இனியவை நாற்பது

57. 1951 இராமப்பய்யன் அம்மானை

58. 1951 இரவிக்குட்டிப்பிள்ளை போர் (இராமப்பய்யன் அம்மானைப் பதிப்பின் இணைப்பு)

59. 1955 திவ்வியப் பிரபந்தம் - முதலாயிரம்

60. 1956 திருவாய்மொழி

வையாபுரிப்பிள்ளை எழுதிய நூல்கள்

1. 1930 ஆராய்ச்சியுரைத் தொகுதி

2. 1946 Research in Dravidian Lan­guages

3. 1947 திராவிட மொழிகளில் ஆய்வு

4. 1947 இலக்கியச் சிந்தனைகள்

5. 1947 தமிழின் மறுமலர்ச்சி

6. 1947 தமிழ்ச் சுடர்மணிகள்

7. 1949 தமிழர் பண்பாடு

8. 1950 கம்பன் ஆராய்ச்சிப் பதிப்பு

9. 1950 இலக்கிய உதயம் மி

10. 1951 உரைமணிமாலை

11. 1952 இலக்கிய உதயம் II

12. 1952 இலக்கிய தீபம்

13. 1954 இலக்கிய மணிமாலை

14. 1955 கம்பன் காவியம்

15. 1956 இலக்கணச் சிந்தனைகள்

16. 1956 சொற்கலை விருந்து

17. 1956 சொற்களின் சரிதம்

18. 1956 திராவிடமொழிகளில் ஆராய்ச்சி

19. 1956 History of Tamil Language and Literature

20. 1957 தமிழ் இலக்கிய சரிதத்தில் காவியகாலம்

21. 1958 இலக்கிய விளக்கம்

22. 1959 அகராதி நினைவுகள்

23. 1967 கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை (கவிமணியின் நூல்களுக்கு வையாபுரிப்பிள்ளை தந்துள்ள முன்னுரைகளின் தொகுப்பு)

24. 1944 சிறுகதை மஞ்சரி

25. 1958 ராஜி (நாவல்)

வையாபுரிப்பிள்ளை எழுதிய கட்டுரைகள்

1. அகநானூறு காதலும்

2. அகராதி அனுபவங்கள்

3. அகராதி நினைவுகள்

4. அகராதியாளர்

5. அச்சு வித்தையின் வரலாறு, (கலைமகள், 1923) தொகுதி:1)

6. அண்டுதல் (திரிகடுகம் சிறுபஞ்ச மூலம் பதிப்பின் முன்னுரையில் இடம்பெறும் பகுதி: 58)

7. அண்மை விளி

8. அதர்வண வேதம்

9. அதியமான் அஞ்சி

10. அபிதம்மபிடகம்

11. அரிக்கமேடு

12. அரியநாயக முதலியார் (ரோஜப்பூ, 1951: சக்திகாரி யாலய வெளியீடு)

13. அவதாரங்களும் தென்னாட்டுத் தொடர்பும்

14. அழகுத் தெய்வம்

15. ‘அன்’ ஈறு

16. ஆதார மொழித்திட்டம்

17. ஆயிரத்து ஓர் இரவுகள் (லெ. நடராசன் நூலுக்குத் தந்த முகவுரை)

18. ஆரண்யகங்கள்

19. ஆற்றல் வாய்ந்த புரட்சி (புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (1953) நூலில் இடம் பெற்றுள்ள சிறு மதிப்பீடு)

20. ஆனால் (திரிகடுகமும் சிறுபஞ் சமூலமும் பதிப்பின் பிற்சேர்வுப் பகுதியின் மூன்றாம் பாகம்)

21. இரவிக்குட்டிப்பிள்ளை போர்

22. இராகவையங்கார், மு.

23. இராம காதை (பால காண்டப் பதிப்பு விழா, தலைமையுரை)

24. இராமசரிதமும் தமிழ்நாடும்

25. இராமலிங்க சுவாமிகள்

26. இராமாயணப் பதிப்பு முயற்சிகள் (இராம காதை, பாலகண்டம், அணிந்துரை பதிப்பாசிரியர் சொ. முருகப்பா)

27. இராமாயணம்

28. இருவகை இலக்கியம்

29. இலக்கணம் 1,2,3 (இலக்கிய மண்டபக் கட்டுரைகள்)

30. இலக்கணம் கி.பி. 1555-ல் அச்சியற்றியது, (சிறு குறிப்பு)

31. இலக்கியத்தில் மொழிநடை

32. இலக்கியத்தில் மொழி வழக்கு

33. இலக்கியத்தின் பயன்

34. இலக்கியத்தின் முதல் தோற்றம்

35. இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி

36. இலக்கிய மரபுகள்

37. இலக்கியமாவது யாது?

38. இலக்கியமும் சமூகமும்

39. இலக்குமணப் பிள்ளை, இசைத்தமிழ்ச் செல்வர்

40. இலக்குமணன்

41. இனித்தோன்றுவது அருமை (செந்தமிழ்செல்வி 25:2)

42. உத்தம சகோதரன்

43. உபநிஷதங்கள்

44. உப புராணங்கள்

45. உரைமணிகள் - முன்னுரை (க.தே.வி)

46. உவமை மரபு

47. உறுப்புச் செய்யுள்,

48. உன் (திரிகடுகமும் சிறுபஞ் கமூலமும் பதிப்பில் உள்ள பிற்சேர்வின் இரண்டாம் பகுதி)

49. ஊராண்மை

50. எகிப்து

51. எருமணம்

52. எழுபொறி நாட்டத்து

53. எனது பூங்கா, முன்னுரை

54. எஜுர் வேதம்

55. ஒரு குறிப்பு பொருளியல் (செந்தமிழ், தொகுதி 23 பகுதி 12)

56. ஓர் உண்மை ஞானி

57. கண் வட்டம்

58. கதைப்பாட்டு

59. கந்தருவர்

60. கபாலீசர் தோத்திரம் (முன்னுரை)

61. கபிலர்

62. கம்ப சித்திரம் (கல்கத்தா தேசிய நூலகத்திலுள்ள நோட்டுப்புத்தகத்தில் உள்ளது)

63. கம்பர் கவியுலகு

64. கம்பர் - 1. காலம்

65. கம்பர் - 2. திருநாள்

இராமாயணப் பதிப்பு விவரம்

67. கம்பராமாயணம் (ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்க வெள்ளிவிழா மலர்)

68. கம்ப ராமாயணமும் ராமாயணமும்

69. கம்பன் ஆராய்ச்சிப் பதிப்பு

70. கம்பன் கவிச்சக்ரவர்த்தி

71. கம்பன் காவியம்

72. கம்பனும் தமிழும்

73. கம்பனைக் கற்கும் நெறிகள்

74. கல்லூரி

75. கலிங்கத்துப் பரணியில் நகைச்சுவை

76. கலியுகப் பெருங்காவியம்

77. கலையும் பண்பாடும்

78. கவிதை

79. கழகம்

80. களம்

81. கற்புத் தெய்வம்

82. கற்றதனால் ஆயபயன்

83. கனகசபைப் பிள்ளை, வி.

84. காதல் பிறந்த கதை முன்னுரை (க.தே.வி)

85. காந்தி ஜெயந்தி

86. காப்பிய உவமை

87. காலச் சக்கரம்

88. காவிய காலம்

89. காவியங்களின் ஒடுங்கு தசை

90. காவியங்களின் பொது இயல்பு

91. காவியங்களின் வரலாறு

92. காவியம்

93. காவிரிப் பூம்பட்டினம்

94. கீதையும் நாமும்

95. கும்ப கர்ணன்

96. குமர குருபரர்

97. குறுந்தொகை

98. குறுந்தொகைச் செய்யுளில் ஒரு சரித்திரக் குறிப்பு

99. கூத்தும் இசையும்

100. சங்க இலக்கியங்கள் - பாட்டும் தொகையும்

101. சங்க இலக்கியங்கள்

102. சங்க காலம்

103. சத்துருக்கன்

104. சடையப்ப வள்ளல்

105. சமயமும் இலட்சியங்களும்

106. சற்குணர், ஆசிரியர்

107. சாதுகை மாந்தர்

108. சாம வேதம்

109. சாமிநாதய்யர், உ.வே.- தொண்டின் பெருமை

110. சாமிநாதய்யர், உ.வே. - வாழ்க்கையும் மதிப்பும்

111. சாமிநாதய்யர், உ.வே. - நினைவு நாள்

112. சிதம்பரநாத முதலியார், டி.கே.

113. சிதம்பரனார், வ.உ.

114. சிந்தாமணி முகவுரையிற் குறித்த மூன்று செய்யுட்களின் உரைகள்

115. சிலப்பதிகார ஆராய்ச்சி

116. சிலப்பதிகாரத்தில் கண்ட இலக்கண வழக்கு

117. சிலப்பதிகாரத்தில் கண்ட ஓர் இலக்கண வழக்கு

118. சிலப்பதிகாரத்திற் சில இலக்கண வழக்குகள்

119. சிலப்பதிகாரம் 1 புகார்க் காண்டம் ஆர்.கே.சண்முகம் செட்டியார் பதிப்பு தொகு.

120. சிலப்பதிகாரம் 2

121. சிவ சுவாமி ஐயர், ஸர்.பி.எஸ். (சதாபிஷேக விழா)

122. சிவப்பிரகாச சுவாமிகள், துறையூர் (பதிப்பு)

123. சிறு குழந்தைகளுக்குச் செய்யுட் பாடங்கள்

124. சீதையின் காதல் (கல்கத்தா தேசிய நூலகத்திலுள்ள நோட்டுப்புத்தகத்திலுள்ளது 12-15)

125. சீதைவனம் போதல் (கல்கத்தா தேசிய நூலகத்திலுள்ள நோட்டுப்புத்தகத்திலுள்ளது 12-15)

126. சீவக சிந்தாமணி

127. சீனம்

128. சுதேசமித்திரன் - பொன் திருவிழா (கலை மகள் தொகுதி II 1932)

129. சுந்தரம் பிள்ளை, - வாழ்க்கை

130. சுந்தரம் பிள்ளை, ஆசிரியர்- தமிழ்த் தொண்டு

131. சுந்தரம் பிள்ளை, ஆசிரியர்- நாடகக் கவிஞர்

132. சுப்ரமண்யபாரதி, தேசிய கவி-வாழ்க்கை

133. சுப்ரமண்யபாரதி, தேசிய கவி-நான் கண்ட பாரதி

134. சுப்ரமண்யபாரதி, தேசிய கவி-உள்ளமும் கவிதையும்

135. சூத்திரங்கள்

136. சூரியன் (கலைமகள்)

137. சேரநாடும் செந்தமிழும் (முன்னுரை)

138. சைவ சமயத்தைச் சார்ந்த ஓர் உலா நூல்

139. சைவர் மகாநாட்டுத் தலைமையுரை 1946

140. சொல்லாக்கம்

141. சொல்லின் ஒலி வடிவும் வரி வடிவும்

142. சொல்லின் வளர்ச்சி

143. சொல்லும் பொருளும்

144. சொல்லும் மொழியும்

145. சொல் வரலாற்று நியதி

146. சொல் வரலாற்று விநோதங்கள்

147. தத்துவ சாஸ்திரமும் இலக்கணமும்

148. தம்ம பதம்

149. தமிழ் அகராதி

150. தமிழ் இலக்கிய மகாநாட்டுத் தலைமையுரை

151. தமிழ் இலக்கிய சரிதத்தில்

 

காவிய காலம்-முன்னுரை

152. தமிழ்க் கல்வியும் வசனத்தின் மூல நியமங்களும்

153. தமிழ்நாடும் கிரேக்கமும்

154. தமிழகத்தில் தேசிய வரலாறு

155. தமிழ் இலக்கியத்தில் தேசியம்

156. தமிழ் இலக்கியத்தின் தொன்மை-கர்ணபரம்பரை

157. தமிழ் இலக்கியத்தின் தொன்மை -வரலாற்றுச் செய்திகள்

158. தமிழ் இலக்கியத்தின் தொன்மை-வெளிநாட்டார் தொடர்பு

159. தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி

160. தமிழ் பாட்டும் இசையும்

161. தமிழ்ப் மொழிப் பற்றும் பிற மொழி வெறுப்பும்

162. தமிழகத்தில் திருமணம்

163. தமிழர் பண்பாடும் இலக்கியமும்

164. தமிழிற் சொல் வளர்ச்சி

165. தமிழில் நாட்டிய நூல்கள்

166. தமிழில் வசன நடை

167. தமிழின் மறுமலர்ச்சி

168. தமிழும் அகராதியும்

169. தமிழும் எதிர்காலமும்

170. தமிழும் எதிர்காலமும்

171. தமிழும் பிராகிருதமும்

172. தமிழும் மலையாளமும்

173. தமிழும் வைதிக வார்த்தைகளும்

174. தளவாய் அரியநாயக முதலியார்

175. தாந்திரிக இலக்கியங்கள்

176. தாம்பிரபர்ணி

177. தாமோதரம் பிள்ளை, சி.வை

178. தாய்மொழி

179. திராவிட மொழியாராய்ச்சி

180. திராவிட மொழிகளில் ஆராய்ச்சி (நாகபுரி தலைமையுரை)

181. திராவிட மொழிகளில் ஆராய்ச்சி 1 (லட்சுமணபுரி)

182. திருக்குற்றாலப் பள்ளு,

183. திருக்குறள்: காலிங்கர் உரை

184. திருத்தக்கதேவர்-ஓர் அமிர்த மேகம்,

185. திருநாராயணையங்கார் பிரிவு அனுதாபக் குறிப்பு

186. திருமாலும் கிள்ளி களிறும்

187. திருமுருகாற்றுப்படை

188. திருமுறைகளைச் சாராத போலி இலக்கியங்கள்

189. திருவள்ளுவர் - 1 வாழ்க்கை வரலாறு

190. திருவள்ளுவர் - 2 திருநாள்

191. திருவள்ளுவர் - 3 காலம்

193. திருவள்ளுவர் - 4 நூற்பெயர்

194. திருவள்ளுவர் - 5 நூல் அமைப்பு

195. தினசரி வாழ்க்கையும் தமிழும் ஒரு விவாதம்

196. தேசிய விநாயகம் பிள்ளை, கவிமணி

197. தே.வி.யின் கீர்த்தனங்கள் முன்னுரை

198. தைந்நீராடல் 60-68

199. தைமாசப் பிறப்பு

200. தொகை நூல்கள் - தொகை நூல்களின் வரலாறு

201. தொகை நூல்கள் - புறத்திரட்டு என்னும் தொகை

202. தொகை நூல்கள் - மறைந்து போன தமிழ் நூல்கள்

203. தொகை நூல்கள் - முழுவதும் அகப்படும் நூல்கள்

204. தொகை நூல்கள் - பாடநிச்சயத்திற்குப் பயன்படும்

205. தொகை நூல்களின் காலமுறை

206. தொண்டி நகரம்

207. தொல்காப்பியர் - பிறப்பகம்

208. தொல்காப்பியர் - சமயம்

209. தொல்காப்பியர் - காலம்

210. தொல்காப்பியரும் மொழி வளர்ச்சியும்

211. தோடு II 313-318

212. நகைச்சுவை

213. நந்திக் கலம்பகம்

214. நமது முதற்கடமை (நாவலர் நினைவு மலர்)

215. நவீன கீதை

216. நாகரிக நங்கை மான்மியம்

217. நாடகக் கலையின் வரலாறு

218. நான்மணிக்கடிகை

219. நிகண்டுகள் - அரும்பொருள் விளக்கம்

220. நிகண்டுகள் - நாமதீபம்

222. நிகண்டுகள் - பொதிகை

223. நிகண்டுகள் - நிகண்டு சூடாமணி

224. நூதன ஆங்கிலப் பேரகராதி

225. நூல் நிலயப் பிரசாரம்

226. நெடுநல் வாடையும் நக்கீரரும்

227. பக்திக் கனியின் தீஞ்சாறு

228. பக்திப் பெருவெள்ளம்

229. பக்தியும் தெய்வ வரலாறுகளும்

230. பக்தி வெள்ளத்தின் விளைவு

231. பஞ்சதந்திர மொழிபெயர்ப்பு

232. பட்டினப் பாலை பற்றிய ஓர் சாஸனச் செய்யுள்

234. பண்டன்று பட்டினங் காப்பு

235. பண்டைத் தமிழ்நாடும் சமயமும்

236. பண்டைத் தமிழக வாழ்க்கை

237. பத்துப்பாட்டும் அவற்றின் கால முறையும்

238. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலக்கியம்

239. பதிற்றுப்பத்தின் கடவுள்

240. பதின்மூன்றாம் புறப்பாட்டும் உரையும்

241. பதினாறாம் நூற்றாண்டில் இலக்கியம்

242. பதினெண் கீழ்க்கணக்கு - கீழ்க்கணக்கில் அடங்கிய நூல்கள்

243. பதினெண் கீழ்க்கணக்கு - கீழ்க்கணக்கு என்பதன் பொருள்

244. பதினெண் கீழ்க்கணக்கு - பதினெண் கீழ்க்கணக்கின் காலம்

245. பதினெண் கீழ்க்கணக்கு - காலத்தை அறுதியிடும் சான்றுகள்

246. பதினெண் கீழ்க்கணக்கு - நூற்பெயர் விளக்கம்

247. பதிணென் கீழ்க்கணக்கு - பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் பதிப்பு முயற்சிகள்

248. பரிபாடலும் நகைச்சுவையும்

249. பரிமேலழகர்

250. பல்லவர் மீது சாசனப் பாடல்கள்

251. பலவகை இலக்கணங்களின் அவசியம்

252. பவணந்தி முனிவர்

253. பாணினீயம் முனிவர்

254. பாபிலோனியா

255. பார்த்திபன் கனவு, முன்னுரை

256. பாரத தேசம்

257. பாரதி வெண்பா

258. பாரதி யுகம்

259. பாரதியும் தமிழும்

260. பாரஸீகம்

261. பாலஸ்தீன்

262. பாலி மொழியும் தமிழும்

263. பாலையின் அரங்கேற்று மண்டபம்

264. பிராம்மணங்கள்

265. புக்கக வாழ்வு

266. புகழேந்தியார்

267. புத்த பகவான் அருள் மொழிகள்

268. புத்தாண்டில் புது முயற்சி

269. புதிய இலக்கணம்

270. புதிய இலக்கிய முறை

271. புதுமைப் பித்தன்

272. புராணங்கள்

273. புறநானூறும் தமிழரும்

274. புனர் ஜன்மம் (வானொலி உரை)

275. புனைந்தான் மௌலி

276. பேச்சும் மொழியும்

277. பொழுது

278. பௌத்த வடமொழி இலக்கியங்கள்

279. மகாத்மா காந்தி, முன்னுரை

280. மகாத்மியங்கள், தோத்திரங்கள், தாரணிகள், தந்திரங்கள்

281. மகாபாரதம்

283. மதனநூல் வரலாறு

284. மதுரையும் தமிழ் இலக்கியமும்

285. மறுமலர்ச்சியும் கவிமணியும்

286. மறைந்துபோன ஒரு காவியம்

287. மாணிக்கவாசகர் - கர்ண பரம்பரை வரலாறு

288. மாணிக்க வாசகரும் மலைநாடும்

289. மாயாசனகப் படலம்

290. மீனாட்சி சுந்தரம்பிள்ளை, மகாவித்வான்

291. முத்தொள்ளாயிரத்தின் காலம்

292. முத்தொள்ளாயிரம்

293. முத்தொள்ளாயிரக் கவிநயம் - காதற்கனல்

294. முத்தொள்ளாயிரக் கவிநயம் - கனவைப் பற்றிய கனவு

295. முத்தொள்ளாயிரக் கவிநயம் - வண்டொன்று வந்தது.

296. முன்னிலைப் பெயர்

297. மொழிநூல் விநோதங்கள்

298. மொழி பற்றிய ஆராய்ச்சி

299. மொழியின் அதியற்புத இயல்பு

300. மௌரியர் தென் இந்தியப் படையெடுப்பு

301. ராகவய்யங்கார், ரா. மகாவித்வான்

302. ராதாவும் கிருஷ்ணனும்

303. ரிக்வேதம்

304. ரெவரென்ட் பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

305. வடநாட்டில் கண்ணன்

306. வடமொழியும்

307. வர்ணனை மரபுகள்

308. வரலாற்று இலக்கணம்

309. வள்ளுவர் - தெய்வ ஒளி 1953, வள்ளுவர் வாய்மொழி

310. வள்ளுவரும் மனுவும்

311. வளரும் தமிழ்

312. வளரும் மொழி: உரைநயம்

313. விடுதலை வேண்டும்

314. விநய பிடகம்

315. வியாகரணம்

316. விர்கீலியன்

317. விருந்து

318. வீட்டு வைத்தியம் (வானொலி உரை)

319. வீர விளக்கான வ.வெ.சு.ஐயர்

320. ஸ§த்த பிடகம்

321. ஜைனரும் இலக்கியமும்

322. A Note on Jeevasambodnai

323. Art and Education (Radio Talk)

324. Date of Manikka Vasagar

325. Didactive literature in Tamil

326. Hints for the Textual Criticism of Kamban (Paper manu script, Calcutta National Library)

327. History of Tamil Lexicography

328. History of Tamil language and Litera­ture. part I beginning to 300AD

329. History of Tamil language and Litera­ture - upto 10th

330. Kamban as edited by T.K.C.

331. Kamban

332. Kamban's place in the development of the Tamil language and literatre (paper manuscript, Calcutta National Library)

333. Namadeepa Nighhantu (Foreword)

334. On Film

335. On the study of Kamban (paper manuscript, Calcutta National Library)

336. On the study of Pœtry (paper manuscript, Calcutta National Library)

337. Pataliputra in a Tamil; classic

338. Presintial Address: Lucknow, Oriental Conference (Recent Progress in Reseach studies)

339. Presidential Address: Nagpur, oriental Conference.

340. Ramayannam Ammanai-A Historical Ballad (Foreword)

341. Ramayanam with commentry by K. Srinivasa Iyengar and S.Krishnaswamy Iyengar (Review)

342. Shenbaga Raman Pallu, Editor: Maria John Kalingarayar (Forward)

343. Side Lights on Tamil Authors (The Annals of Oriental Research)

344. Silappathikaram

345. Sita in Despair (Paper manuscript, Calcutta National LibrarY)

346. Sri Puranam, Editor. V.Venkatarajulu reddiyar (Fore Word)

347. The Age of Kamban - A Rejoinder

348. The early Histroy of the Vellar Basin by Dr. Arokiya Swamy (Reiew)

349. The Epic (paper manuscript, Vellar Basin by Dr. Arokiya Swamy (Review)

349. The Epic (paper manuscript, Calcutta National Liberary)

350. The life in Ancient city of Kaveripatnam)

351. The Pœt Know him - Kavimani (Radio Talk)

352. The Saiva Mutts.

353. Tolkappiyar and Patanjali

354. Tolkappiyar's Progressive view of language (Proceedings of the oriental conference, 1947)

355. Valluvar & Caste System

356. Word Study and Chronology in Tamil literature
Pin It