பெண்ணை முதலமைச்சராகக் கொண்ட உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பான, பிரகாசமான வாழ்க்கையைப் பெறுவோமென்ற நம்பிக்கையை வைத்திருந்தார்கள். ஆனால் அவர்களுடைய நம்பிக்கையில் மண்ணை அள்ளித் தூவியது போல அங்கு பசியும் பட்டினியும் தாண்டவ மாடுகிறது. உத்திரப்பிரதேச மாநிலத் தின் தலைநகரான லக்னோவைப் புதுப்பிக்கும் செயலில் முதலமைச்சர் மாயாவதி வெகு மும்மரமாக ஈடுபாடு கொண்டிருக்கிறார். மாநகரத்திலுள்ள வரலாற்றுச் சின்னம் என்று சொல்லப் படும் பல கட்டிங்களை புதுபிக்கும் முயற்சியில் பொதுநலத் திட்டத்திற்காக ஒதுக்கி வைத்திருந்த நிதியின் பெரும் பங்கை இதற்காக செலவழித்தி ருக்கிறார்.  

ஆங்காங்கே பகுஜன் சமாஜ் கட்சியின் மறைந்த தலைவரான கான்ஸி ராமுடன் தன்னுடைய சிலையையும் இணைத்து ஆறு சிலைகளைத் திறந்து வைத்திருக்கிறார். இது போதாதென்று அம்பேத்கர் நினைவாலயத்தில் பளிங்கு கற்களால் வடிவமைத்த அறுபது யானைச் சிலைகளை திறந்து வைத்திருக் கிறார். சிலைகளை திறப்பதற்கென்று மட்டும் மொத்தம் 151 கோடி செலவு செய்திருக்கிறார். 

அந்தக் காலத்து அரசர்கள் சிலை களை எழுப்பி வரலாற்றுப் பெரு மையை பெற்றது போல தானும் பெற வேண்டுமென்று மாயாவதி மக்களு டைய பணத்தை சூரையாடியிருக் கிறார். அவர்கள் கிராமத்து பெண்களின் மனவேதனையை புரிந்து கொள்ள வில்லை. அவர்கள் படும் அவதியைப் பற்றி சிந்தித்தும் கவலைப் படாமல் கோடிக்கணக்கில் விரயம் செய்திருக் கிறார். விவசாயத்தை நம்பியிருக்கும் கிராம மக்களின் வரண்டு போன தரணி யும், பாளம் பாளமாக வெடித்து கிடக் கும் பூமியும் தண்ணீருக்காக ஏங்கித் தவிக்கிறது. பசியினாலும், பட்டினி யாலும் துவண்டு போன பல குடும்பங் களின் மனக்குமுறல்களை சட்டை செய்யாமல் தன்னுடைய வேட்கையை நிறை வேற்றிக் கொள்வதில் மாயாவதி மும்மரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். மின்சார வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் தவிக்கும் அப்பாவி கிராமத்து மக்களின் போராட் டம் என்றும் முடிவற்ற போராட்டமாக இருந்து வருகிறது.  

குடிநீருக்காக மைல்கணக்கில் கால்நடையாகவே பயணம் செய்து தலையிலும், இடுப்பிலும் தண்ணீர் குடங்களைச் சுமந்து கொண்டு செல்லும் கிராமத்து பெண்களின் அன்றாட வாழ்க்கையின் இன்னல்களை வார்த் தைகளால் வர்ணிக்க இயலாது. பசியும் பஞ்சமும் நிலவுவதால் பள்ளிக்கு செல் லும் சின்னஞ்சிறு பெண் குழந்தைகள் வீட்டு வேலைச் செய்து தினந்தோறும் அல்லல்படுகிறார்கள். ஒருவேளை சோற்றுக்காக செய்ய இயலாத வேலை களைக்கூட கிராமத்து பெண்கள் எப் போதும் செய்வதற்கு தயாராக இருக் கிறார்கள். 

வயிற்றுப் பிழைப்பிற்காக அங் குள்ள பெண்கள் தங்களுடைய கருப் பையை வாடகைக்கு விட்டுப் பிழைக் கிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லா தவர்கள் தங்களுடைய கணவரின் உயி ரணுக்களை இன்னொரு பெண்ணின் கருப்பையில் பொருத்தி, அவர்கள் குழந் தையைப் பெற்றுத் தருகிறார்கள். சொற்ப வருமானத்திற்காக கிராமத்து பெண்கள் வாடகைக்கு தங்களுடைய கருப்பையை விற்றுப் பிழைக்கும் காட்சி வேதனையளிப்பதாக உள்ளது. 

- வறுமையில் வாடி வதங்கும் பெண்களின் வாழ்க்கை உத்திரப்பிரதேச மாநி லத்தில் அதிகரித்துக் கொண்டே செல் கிறது. மாநில அரசோ அதனை கண்டு கொள்ளவில்லை. கேள்விக் குறியாக யிருக்கும் தங்களது வாழ்க்கைக்கு ஏதா வது நல்ல வழி பிறக்காதா? என்று நம்பிக்கையோடு கிராமத்து பெண் களின் மனம் ஏங்கிக் கொண்டிருக்கிறது. மாயா வதி அரசு ஏழை கிராமத்துப் பெண்களின் இந்த மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். தன்னோக்கு ஆடம்பர பகட்டு நடவடிக்கைகளை நிறுத்தி மக்கள் நலத் திட்டங்களை உரு வாக்கி அவற்றை செயல்படுத்த வேண்டும். 

Pin It