ஞாநி குமுதம் இதழில் இலங்கையில் நடைபெற்ற அனைத்து இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA - 2010) விழாவைப் புறக்கணித்து இருப்பதை தவறு என 'ஒ' பக்கங்களில் கண்டித்து இருக்கிறார். கமலஹாசன் முதல் இராமநாராயணன் வரையான படைப்பாளிகள் இலங்கை IIFA - 2010ஐப் புறக்கணித்து இருப்பது மிரட்டல் அரசியலுக்குப் பயந்துதான் என திசை திருப்புகிறார்.
இலங்கை IIFA-2010 ல் தாங்களும் கலந்து கொள்வதில்லை, மற்ற நட்சத்திரங்களும் கலந்து கொள்ள வேண்டாம். அவ்வாறு கலந்து கொண்டால் அவர்களின் படங்களை தென் இந்தியாவில் புறக்கணிக்க வேண்டியிருக்கும் என்ற முடிவை கீழ்கண்ட, தமிழகத்தைச் சேர்ந்த மற்றும் தென்னிந்திய திரைப்பட சங்கங்களும் இணைந்து கூட்டறிக்கை விடுத்தன.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்
தென்னிந்திய நடிகர் சங்கம்
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம்
தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்
சின்னத்திரைக் கலைஞர்கள் சங்கம்
தென்னிந்திய திரைப்படப் பத்திரிகைத் தொடர்பாடல் சங்கம்
இத்தனை சங்கங்களையும் மிரட்டி அடி பணிய வைக்குமளவு பலம் கொண்ட கட்சி தமிழகத்தில் இல்லை என்பது ஞாநி அவர்களுக்குத் தெரியும். ஆளும்தரப்பு இதனை செய்திருக்கும் என்ற சந்தேகம் ஞாநிக்கு வந்திருக்காது என்று நம்புவோம். அப்படி எதாவது கட்சிகள் முயன்றிருந்தால் குறிப்பிட்ட சங்கங்களிடமிருந்து சிறு சலசலப்பாவது எழுந்திருக்கும்.
உண்மையில் ஈழத் தமிழனின் உரிமைக்கான போராட்டம் எந்தத் தீர்வையும் பெற்றுத் தராமல் படுகொலைகளுடனும், சிறைபிடிப்புகளுடனும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்ற வலி ஞாநி போன்ற மேல்தட்டு பத்திரிகையாளர்களையும், சில அரசியல்வாதிகளையும் தவிர்த்து எல்லாருக்குமே இருக்கிறது.
அதனால் தான் IIFA- 2010 ல் கலந்து கொள்வதற்கான அழைப்பை தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த திரைத்துறையினர் தாங்களாகவே புறக்கணித்து இருந்தனர். ஞாநியை போன்ற, ஈழப் பிரச்னையில் தவறான கருத்துடைய பத்திரிகையாளர்களாலும், ஆங்கில செய்தி ஊடகங்களில் ஈழம் பற்றிய இருட்டடிப்பு செய்திகளாலும் ஈழத்தமிழ் மக்களுக்கு நிகழும் கொடூரங்கள் வட இந்திய திரைத்துறையையும், மக்களையும் சென்றடையவில்லை.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கூறி IIFA -2010ல் கலந்து கொள்ளும் இந்தித் திரையுலக பிரபலங்களைக் கலந்து கொள்ள வேண்டாம் எனக் கேட்டு இங்கிருக்கும் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டம், கூட்டறிக்கை என்பவற்றுடன், தனிநபர்களும் திரைத்துறையினர் மூலமாக முயற்சிகள் மேற்கொண்டனர். அதன் பலனாகத் தான் IIFA -2010ல் முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ளாமல் பொலிவிழந்தது.
மற்றபடி எல்லாக் காலங்களிலும் கலைஞர்களும், படைப்பாளிகளும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக தங்களது தார்மீகக் கடமைகளை உணர்ந்து குரல் கொடுத்தே வந்துள்ளனர். என்ன காரணத்தினால் ஞாநி மறந்து போனார் என்று தெரியவில்லை.
அடுத்து 'ஓராண்டுக்கு முன் ஏராளமான ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு இராஜபக்ஷே அரசு, புலிகள் அமைப்பு இருவரின் தவறான அரசியலுமே காரணம் என்பதை மனசாட்சியுடன் சிந்திக்கும் எல்லாருமே ஏற்றுக்கொள்வார்கள்' என்று எழுதியுள்ளார். அவர்களின் தவறான அரசியல் மட்டுமா காரணம்?
ஞானியின் மனசாட்சி எப்பொழுதுமே அவரைக் கேள்வி கேட்காது போலும். சிங்கள அரசு பயங்கரவாதம் என்ற சொல்லைப் பயன்படுத்தி ஈழத்திலிருந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களையும், பத்திரிக்கையாளர்களையும் வெளியேற்றி சாட்சியங்களில்லாமல், எந்தவித போர்நெறிகளையும் பின்பற்றாமல் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் குறைத்து 80 ஆயிரம் பேர் மட்டுமே இருப்பதாகக் கூறி 18 மாதங்களுக்கு மேலாக உணவு, மருந்துப் பொருட்களைத் தடை செய்து மருத்துவமனைகள், மக்கள் வாழும் பாதுகாப்பு வலயம் மீது குண்டு போட்டு, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பொதுமக்கள், போராளிகள் என சகட்டுமேனிக்குப் பாவித்து, இவ்வாறு ஒரு அரசு தனது உள்நாட்டுப் போரை முடிக்க முடியும் என்பது, இந்த நுற்றாண்டின் எவ்வளவு பெரிய கேவலம்.
புலிகள் இயக்கம் எவ்வளவு முற்றுமுழுதான பயங்கரவாத அமைப்பாக இருந்தாலும், அவர்களே மக்களை பலவந்தமாக சிறைபிடித்து இருந்தாலும், அந்த மக்களை மீட்கவே இந்தப் போரை நடத்துகிறோம் என சிங்கள அரசு சொன்னாலும், குறைந்தபட்சம் ஒரு தற்காலிக போர் நிறுத்தமாவது ஏற்படுத்தி போர்க்களத்திலிருந்து பொதுமக்களையாவது சர்வதேச சமூகம் அப்புறப்படுத்தி இருக்க வேண்டும்.
அந்த மக்களுக்கு ஏற்பட்ட உயிர்சேதத்திற்கும், அங்கஹீனத்திற்கும், மனச்சிதைவுக்கும், பறிக்கப்பட்ட வாழ்வுக்கும் எதுவுமே செய்ய முடியாத சர்வதேசமும், ஐநாவும், கள்ள மௌனம் சாதித்த இந்தியாவும், நாடகதாரிகளாய் மாறிப்போன அரசியல்வாதிகளை நம்பி, ஒற்றுமையாய்ப் போராடாமல் போன நாங்களும், இத்தகைய அறிவியல் யுகத்திலும் சர்வதேசத்திலிருந்து தொடர்புகள் துண்டிக்கப்பட்டு உணவு, மருந்து மறுக்கப்பட்டு பதுங்கு குழிக்குள் துரத்தப்பட்ட ஈழ மக்களுக்காக உண்மையை எழுதாத நீங்களும் என நீளும் பட்டியலில் எல்லோரும் குற்றவாளிகள்தான், ஆனால் அதனை அறிய ஞாநியின் மனசாட்சி சுத்தமாக சிந்திக்க வேண்டும்
அடுத்து இந்தக் கொடூரங்கள் முடிந்து ஓராண்டு கழித்து இப்போது கொழும்பில் இந்திய திரைப்பட விழா நடத்தக்கூடாது என்று கோரிக்கை எழுப்புவது அர்த்தமற்றது என்று எழுதியுள்ளார். இலங்கையின் எந்தக் கொடூரங்களும் முடிந்துவிடவில்லை ஞாநி அவர்களே! ஈழ மக்களின் அரசியல் அபிலாஷை எதுவும் நிறைவேறவில்லை. அந்த மக்கள் உரிமை கேட்டதாலே சொந்த மண்ணிலேயே அகதிகளாய் வாழ்கின்றனர். இன்று இலங்கையின் தமிழர் வாழும் வடக்கு தெற்கு பிரதேசங்கள் இராணுவ சிறைகளாகவும், அகதி முகாம்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. எந்த நேரமும் யாரையும் ராணுவம் கைது செய்து, சித்ரவதை செய்யலாம், காணாமல் போகச் செய்யலாம் என்ற நிலையே உள்ளது. அங்கு வாழும் எல்லா தமிழனையும் சிங்களத் துப்பாக்கி சந்தேகக் கண்கொண்டு கண்காணித்தபடியே உள்ளது.
இப்பொழுதும் அகதிமுகாம்களில் உள்ள மக்களை தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சந்திக்க முடியாதபடி உள்ளது. கைது செய்யப்பட பத்தாயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளை ஓராண்டு ஆன பின்னரும் செஞ்சுலுவைச் சங்கங்களே சந்திக்க முடியாதபடி நிலைமை உள்ளது.
போரின் போதும், போரின் பின்னும் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டி மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. அதற்கு அத்தாட்சியாக தொடர்ந்து அவர்கள் புகைப்படங்களையும், காணொளிகளையும் வெளியிடுகின்றனர். நடந்த போரில் ஐ.நா.வின் செயலற்ற தன்மையைக் கண்டித்திருப்பதோடு, இதற்கு இலங்கை தண்டிக்கப்படவில்லை என்றால் உலகிலுள்ள மற்ற நாடுகளுக்கும் தங்கள் நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களை ஒடுக்க ஒரு மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும் என தொடர்ச்சியாக போர்க்குற்ற விசாரணைகளுக்கு வலியுறுத்துகின்றன. இதிலிருந்து நீண்ட காலம் தப்பிக்க முடியாது.
இவ்வளவு போர்க்குற்றங்களையும் புரிந்த இராஜபக்ஷே நீங்கள் கூறும் அந்த சாதாரண சிங்களர்களின் வாக்குகளால் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து, தமிழின சுத்திகரிப்பையும், தமிழர்களின் நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றார். எனவே ஈழ மக்களுக்கான உரிமை கிடைக்கும் வரை இலங்கையை தனிமைப்படுத்தும் போராட்டம் தொடரும்.
இனவெறி அரசை தனிமைப்படுத்த இதுபோன்ற முறையைப் பயன்படுத்துவது புதிதல்ல. இனவெறி தென் ஆப்பிரிக்க அரசை வழிக்குக் கொண்டு வர கிரிக்கெட்டில் இருந்து அந்த அணியை விளக்கி வைத்ததும் உதவியது.
மற்றபடி ஈழ தமிழினத்தைத் தேவையில்லாமல் சிங்கள இனத்துடன் ஒப்பிட்டு எழுதி உள்ளீர்கள் . இவ்வளவு பெரிய இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர் ஆட்சியில் எல்லா குடும்பங்களும் நேரடியாக பாதிக்கப்படவில்லை. ஆனால் ஈழ உரிமைப் போராட்டத்தில் ஒவ்வொரு குடும்பமும் ஒரு விலை கொடுத்துள்ளது. எனவே சுதந்திரத்திற்காகவும், உரிமைக்காகவும் போராடுவதை விட ஒரு சிறந்த வாழ்க்கை இருக்க முடியாது என்பதை ஏற்றுகொள்வீர்கள் என நம்புகிறோம்.
சிங்கள அரசு தனது போர்க் குற்றத்தை மறைத்து, தமிழர்க்கு எந்த உரிமையும் தராமல் இழுத்தடித்துக்கொண்டு இருப்பதைத் தடுக்கவே, இது போன்ற புறக்கணிப்புகள். ௦தனிப்பட்ட சிங்களர்கள் மேல் வெறுப்பில்லை. இங்கு நடிக்கின்ற சிங்கள நடிகைகளோ அல்லது தொழில் செய்யும் தனி நபர்களோ எங்களது இலக்கல்ல. உண்மையில் விடுதலைப் புலிகளும் சாதாரண சிங்கள மக்கள் தங்கள் இலக்கல்ல என்பதை அனுபவத்தில் உணர்ந்தே இருந்தனர். அதனால்தான் நான்காம் கட்ட ஈழப் போரில் சர்வதேச அனுமதியுடன் வகைதொகையின்றி ஈழ மக்களை சிங்கள அரசு கொன்றொழித்த போதும், விடுதலைப் புலிகள் சிங்கள மக்களை தாக்கவில்லை. மற்றபடி ஒவ்வொரு இனத்திற்கும் சில பெருமைகள் உண்டு. அந்த வகையில் சிங்கள இனத்திற்கு உள்ள பெருமைகளையும் ஏற்று கொள்கிறோம்.
இப்பொழுதும் நேர்மையான, துணிச்சலான பத்திரிக்கையாளர் என்றால் சிங்களப் பத்திரிகையாளர் லசந்த பெயர் தான் நினைவுக்கு வருகிறது. உங்களைப் போன்றவர்களை நினைத்தால் எரிச்சல்தான் வருகிறது. என்ன செய்ய?
- வெ.தனஞ்செயன் ( இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )
| நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க... |
கீற்று இணையதளத்திற்கு படைப்புகளை அனுப்ப இங்கே அழுத்தவும். வேறு எந்த இணையதளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். வெளியாகும் படைப்புகளில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அந்தந்த ஆசிரியரின் சொந்தக் கருத்துக்களே! நாகரிகமற்ற/பிழையான பின்னூட்டங்கள் குறித்து editor@keetru.com-க்குத் தெரியப்படுத்தினால், அவை நீக்கப்படும். br> br> |
-
|2010-06-11 04:11:38 R Nagarajமீண்டும் திசை திருப்பும் வேலை என்பது தெரிகிறது.. ஞாநியைப் பற்றி அனைவருக்கும் தெரியும்... ஊரிஞ்ச பாப்பானுக்கு பூணுல் எதுக்கு என்ற சொலவடை இருப்பதைப் போல... ஆனால் அதே சமயம் புலி ஆதரவு ஈழ ஆதரவு என்று சொல்லிக் கொண்டே கஸ்பர் கனிமொழி (சுபவீ அதை ஆதரிக்கிறார்) ஆகியோர் நாம் என்ற சிதம்பரம் மகனைக் கொண்ட அமைப்பு மூலம் இலங்கை மறு கட்டமைப்பு என்று ராசபச்சேயிடம் ஒரு ப்ராஜக்ட் நீட்டுகிறார்களே...அதைப் பற்றியும் பேசவேண்டியதுதானே...
-
|2010-06-11 04:13:32 சர்வசித்தன்அப்பட்டமான மனித உரிமை மீறல்களையும், தொடர்ந்து முப்பது வருடங்களுக்கும் மேலாகத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறைகளுக்கும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் காரணமாயிருந்த ஓர் அரசினைக் கண்டிக்காது, அதற்கு ‘ஒத்தூதும் அல்லது ‘ஓ போடும்’ தனி நபர்களோ, நாடோ, குழுவோ அனைத்துமே பயங்கரவாதிகள் தாம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுபவர்களை மட்டும் பயங்கரவாதிகள் எனப் பட்டம் சூட்டித் தங்கள் பதவிகளையும், பொருள் வளத்தையும் காப்பாற்றிக் கொள்பவர்கள் அத்தனை பேருமே மனித விழுமியங்களை மதிக்காத மாக்களே! ‘ஞானி’யும் இதில் சேர்ந்து கொண்டிருப்பது வேதனையானது!
-
|2010-06-11 04:14:13 சின்னப்பயல்மிகச்சரி... "ஈழ உரிமைப் போராட்டத்தில் ஒவ்வொரு குடும்பமும் ஒரு விலை கொடுத்துள்ளது."
-
|2010-06-11 10:36:56 murugankalingnral manitha neyathdan nadakkavendum. enppadukoliyai mudimarikum villavukku o podum parpaniyam jananayaka verothamanathu
-
|2010-06-11 17:58:44 பகலவன்இந்த ***** **** ஞானி ஒரு தமிழகத்தில் ஒரு தலைசிறந்த எழுத்தாளர் என்று ஒரு போலி முத்திரையை குத்திய பார்ப்பானியம் இன்று மட்டுமல்ல என்றுமே தமிழகத்திற்கு துரோகம் தான் செய்து வருகிறது என்று எப்போது தான் இந்த கேடுகெட்ட தமிழினத்திற்கு புரியபோகுதோ இல்லையோ..... பகலவன்
-
|2010-06-14 10:23:16 saravananNo brahmin will support EElam Tamilians. N.Ram, Cho, Subramanai samy and Gnani are out and out anti-EElam Tamilians. Now Srikkant, former captain of cricket team and now chief selector has joined this set. Srikant has no business or necessacity to meet Raja bakshey. He has no official business. But he meets the and shakes his hands.Let us boycott Srikant also.
-
|2010-06-14 10:24:05 SrinivasanFor more details refer to following link http://www.naamtamilar.org/textnews_detail.php?id=1544
-
|2010-06-14 10:36:54 ம பொன்ராஜ்"ஞானி சொல்வதில் எவ்வித தவறும் இல்லை. நடைமுறை எதார்த்தத்தை அவர் பதிவு செய்துள்ளார். ஞானியை பற்றி குறைகூறுபவர்கள், அவர் வைத்த வாத்ததிற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ தயாராக இல்லை என்பதே நிதர்சனம். ஏனெனில் உண்மை என்னவென்று அவர்களுக்கும் தெரியும் அல்லவா ?" -- இது போல நஞ்சு தடவின சொல்பிரயோகங்களை உபயோகித்து ஞானியை தூக்கி பிடிக்க நான் (செலக்டிவ் அம்னீசியா உள்ள)'இந்தியனோ', அல்லது 'சிங்களனோ' அல்ல..... நான் ஒரு 'தமிழன்'
-
|2010-06-14 10:38:31 Sakya MohanMr Danajayan, I don't know why you want to curtail the democratic rights of individuals. No way Brahmans are the perpetrators of any violence in Tamil Nadu or in any part of Sri Lanka. Only the non-brahman caste hindus are the real perpetrators of caste violence against Dalits in Tamil Nadu and the Untouchables in Tamil-speaking areas of Sri Lanka. Gnaani has not committed any filthy caste violence like how the Tamil Thevar castes are forcing Dalits to eat their human waste (Pee in Tamil). First clean up your ass and then go to another person's... You Tami caste guys should stop caste atrocities on Dalits in Tamil Nadu and then think of other areas. I don't find any fault on Gnaani who as so-called Paarpaan did never have any encounter with Dalit people but you non-paarpaan comprador sudras are raping Dalit women and forcing Dalits to eat you human waste. Sakya Mohan Philadelphia
-
|2010-06-14 10:41:12 Karlஞானி அப்படி எழுதியது வருந்ததக்கது. அதற்கு நல்ல பதிலையும் இங்கே வழங்கியதை பாராட்டுகிறேன். அதே சமயம், இங்கே சிலர் எதர்க்கேடுதாலும் "பார்பனரே" காரணம்... என்று எழுதுவது முட்டாள்தனமாக படுகிறது (நான் பார்பனீயத்தை எதிர்கிறேன். ஆனால் அதில் கருத்து மற்றும் தனி மனிதர்களை தவிர்த்து.... ஏன் தமிழர் என்று கூறீக்கொள்ளும் கருணாநிதி துரோகம் செய்யவில்லையா? திருமா அணி மாறியவுடம் இடத்தை மாற்றிக் கொள்ளவில்லையா? பெரியார் ராஜாஜியுடம் நட்பாக இருந்ததில்லையா? எதற்கெடுத்தாலும் "பார்ப்பான்" என்று சொட்டை காரணம் கூறுவதை விட்டுவிட்டு "தமிழர்" என்று கூறிக்கொண்டு ஏமாற்றுபவரை அடையாளம் கண்டு திருந்தி கொள்ளட்டும். நாடகம் ஆடுபவர்களைவிட ஞானி போல் கருத்தை (ஏற்றுகொள்ள முடியாத நிலையிலும்) கூறுபவர்கள் எதிரிகள் அல்ல. அவர் தனது கருத்தை மாற்றிகொள்வார் என நம்புகிறேன்.
-
|2010-06-15 03:07:52 தமிழர்களில் ஒருவன்உங்கள் பதிவை முழுமையாக படித்தேன். சந்தோசம். ஞானியை கேள்வி கேட்க போகிறீர்கள் என்று எதிர்பார்த்தேன். கொஞ்சம் ஏமாற்றம் தான். இது தான் என்னுடைய கருத்து என்று துணித்து சொல்லும் துணிச்சல் அவரிடம் இருக்கிறது. அதற்காக அவர் சொல்வது சரி என்று நான் சொல்லவில்லை. உண்மையை சொல்ல போனால் அவர் எப்படி இவ்வளவு நாள் இந்த தொழில் (பத்திரிகை) செய்கிறார் என்பதில் எனக்கு அதிக சந்தேகம் உண்டு. இதே போன்று உங்களால் தமிழகத்தின் முக்கிய புள்ளி ஒருவரிடம் கேள்வி கேட்க முடியுமா? நீங்கள் மனசாட்சி பற்றி கேள்வி கேட்க வேண்டியது அவரிடம் தான். ஒருவேளை ஞானியை போன்ற சிறு குருவிகளை பற்றி கேள்வி கேட்டல் மட்டும் போதுமென்று இருந்துவிட்டீரா இல்லை நமக்கேன் வம்பு என்ற தமிழனின் மாண்பு தடுத்து விட்டதா? திரை துறையில் இலங்கையை தனிமை படுத்து 110 கோடி நஷ்டம் ஏற்படுத்த முடிந்த உங்களால் கிரிக்கெட்டில் தனிமை படுத்த முடிந்ததா ?? அல்லது உங்கள் பருப்பு அங்கே பிசிசிஐ முன்னால் வேகாது என்பது தெரிந்ததாலா?!! அது போகட்டும், தேடப்படும் குற்றவாளி, பிரதமருடன் கை குலுக்கி சென்றதை வேடிக்கை பார்த்தவர்களிடமிருந்து இதை எப்படி எதிர் பார்க்க முடியும்? மற்றபடி என் மக்களுக்கு தேவை அன்பும் ஆதரவும் மட்டுமே. எதுகை மோனையில் ஒருவரை ஒருவர் திட்டி கொள்வது தமிழர் பண்பு அன்று. இதனை ஞானி போன்றோர் மறந்தாலும் உங்களை போன்றவர்களாவது மறக்காமல் இருக்கட்டும். இருக்கும் மக்களுக்காவது அன்பு கொடுப்போம்.
-
|2010-06-15 10:34:13 Rameshஞானி சொல்வது இருக்கட்டும்.. எதெற்கெடுத்தாலும் பார்ப்பனர் என்று பார்ப்பனரையே குறை கூறுகிறீர்களே.. பார்ப்பனர் நாட்டின் மொத்த சனத்தொகையில் மிகச்சிறிய சதவீதம்தான்.. பெரும்பான்மையினராக இருக்கிற மற்ற சமூகத்தினர் ஈழத்தமிழருக்கு ஆதரவாகத்தானே(?!) இருக்கிறார்கள், உங்கள் கூற்றுப்படி.. அப்படியானால் அப்படி அனைவரையும் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டியதுதானே.. செய்ய மாட்டீர்கள்.. செய்யவும் முடியாது.. காரணம் பார்ப்பனர்களை மட்டும்தான் உங்களைப் போன்றவர்களால் எதிர்க்க முடியும்.. அவர்கள்தான் வன்முறையில் இறங்கி எதுவும் செய்ய மாட்டார்கள்.. மற்ற சாதியினரையோ, மற்ற சமூகத்தினரையோ இழிவாக சாதியைச் சொல்லி எதிர்க்க உங்களுக்குத் துணிவோ, திராணியோ இல்லை.. முடிந்தால் உண்மையில் ஈழத்தமிழர் பிரச்சனயில் தடைக்கற்கள் எதுவெனத் தீர ஆராய்ந்து அந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர ஆத்திரப்படாமல் அமைதியாக ஆலோசியுங்கள் தோழர்களே.. ஆத்திரப்பட்டு வார்த்தைகளை இறைப்பதாலும், பார்ப்பனர்களைத் திட்டுவதாலும் மட்டும் சரியான தீர்வு காண முடியாது.. அதேபோல் எக்காரணம் கொண்டும் போராட்டம் என்ற பெயரில் வன்முறையைத் தூண்டாதீர்கள்.. தோழர்களே!..
-
|2010-06-16 12:22:46 மால்கம் X இராசகம்பீரத்தான்ஞானி அவர்களை பற்றிய விமர்சணத்திற்காக இங்கு பார்பாணியத்தை ஏன் தாக்குதல் வேண்டும் என்போரின் குரல் நியாயமானதே. அனால், யாரோ புரியும் தலித்களுக்கு எதிரான வண்முறைக்களுக்கும், பாலியல் வண்கொடுமைகளுக்கும் எப்படி பார்பணர்கள் காரணமாக இருக்கும் என கேட்கும் சாக்கிய மோகன், கார்ல், இரமேசு அவர்களின் வருத்தங்கள் நியாயம் மற்றவை. வரலாற்றில் எந்த பார்பாணும் இது வரை நேரடியாக எந்த கொடுமைகளையும் நடத்துவது இல்லை, ஆனால் எல்லா விழைவுகளுக்கும் மூல காரணமாய் இருப்பது பார்பாணியமே. அவர்கள் திட்டமிட்டு நடத்தும் சூழ்சிகள் காலங்கள் கடந்தும் பிரதிபலித்து கொண்டே இருக்கும். அந்த சூழ்சிகளின் மூலதனமாய் இருப்பது ஒவ்வொரு பார்பாணும் கொண்டாடும், தூக்கி பிடிக்கும் ஆச்சாரங்கள், மணு தர்ம சாஸ்திரங்கள் தான். இந்த மணு சாஸ்திரத்தின் விழைவு தான் நம் சொந்த மக்களையே வெருப்புணர்சியுடன் பார்க்க வைக்கிறது ,அதுவும் பல நூற்றாண்டுகள் கடந்தும், எங்கள் சொந்த இனத்தையே பல் வேறு கூறுகளாக்கி, எங்கள் நிழல்களையே எதிரியாக்கியது. அதன் விழைவுதான் இன்று வரை நடக்கும் இனக்கலவரங்கள், மதக் கலவரங்கள், சாதிய கொடுரங்கள். அதற்கு காரணமான பார்பாணியத்தை எப்படி எதிர்காமல் இருக்க முடியும்? மணுதர்மத்தை காக்க எத்தனை அநீதிகளையும் கடைபிடிக்கலாம் என்ற பார்பண சூத்திரங்களை இன்றலுவும் தனது உயிர் கொள்கையாய் கடைபிடிக்கும் பீ.ஜே.பி,ஆர் எஸ்.எஸ் ,சங்க பரிவார்களின் மக்கள் விரோத போக்கும், சூழ்சிகளுடனும் அரசியல் செய்துவறும் இன்றைய சூழலில் அதற்கு காரணமான பார்பாணியத்தை எப்படி எதிர்காமல் இருக்க முடியும்? எதில் இல்லை பார்பாணியத்தின் சூழ்ச்சி? இலங்கை தமிழர் படுகொலையில் இல்லையா பார்பாணிய சூழ்ச்சி , ஆதிவாசிகளின் காடுகளை அழித்து ஆதிவாசிகளை கொன்றழிக்கும் வேட்டையில் இல்லையா?, காசுமீரத்து மக்களை கொன்று குவிப்பதில் இல்லையா?., பெரும் முதலாலிகளின் பொருளாதார சுரண்டல்களில் இல்லையா பிராமாணியம்?..போலி எண்கவுண்டர்களிலும், குண்டு வெடிப்புகளுக்கும் ,மத கலவரங்களுக்கும் பார்பாணியத்தின் பங்கு இல்லையா?.... ஆக மொத்தம் கொல்லபடுவதும் கொல்வதும் நாங்கள் மட்டுமே, அரங்கேற்றம் மற்றும் பார்பானியம், மணு சாஸ்திரங்கள். குசராத் முசுலீம்களை கொன்று குவித்தது உணர்ச்சி பெருக்கெடுத்த இந்து மக்கள் தான், நான் இல்லை என நரவேட்டை மோடி சொல்ல முடியுமா? இல்லை போபால் விச வாயுவு படுகொலையில் எனக்கு சம்பந்தம் இல்லை, அது தொழில் நுட்ப கோலாறு என ஆண்ட்ரூ வாட்சன் கூற முடியுமா? லட்சம் தமிழர்களை கொன்று குவித்த இராசபக்சே நான் கொலை குற்றம் புரிய வில்லை ,என் இராணுவம்தான் செய்த்து என தப்பிக்க முடியுமா? அது போலத்தான் இங்கு சாதியால், மதத்தின் பெயரால், பொருளாதார உயர்வு தாழ்வால் ,சமுகத்தின் ஏற்ற தாழ்வால் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் பொருப்பு பார்பாணியம் தான், அந்த பார்பாணியத்தை தூக்கி கொண்டு பெருமை கொள்ளும் பார்பணர்கள் தான் குற்றவாளிகள். எந்த முற்போக்காளனும் மகாகவி பாரதியை எதிர்பவர்கள் இல்லை, அவருக்கு பார்பாணிய முத்திரை பதிப்பது இல்லை. மாறாக பாரதியை கொண்டாடும் சமுதாயம் தான் எங்கள் தமிழ் சமுதாயம் அதற்கு காரணம் என்ன தெரியுமா? நீங்கள் தூக்கி பிடிக்கும் ,உயிருக்கு இனையாக நினைக்கும் ,எங்களின் வாழ்வாதாரத்தை அழித்தொழிக்கும் சாதிய முறைகளை, வருணாசரமத்தை, மணு சாஸ்திரத்தை வாழ் நாள் முழுவதும் எதிர்த்தால் தான்.அவன் ஒரு துளியளவு கூட வருணாசரமத்தை அவன் வாழ்கையில் கடைபிடித்த்து இல்லை, ஆதி தமிழனுக்கு பூணுல் போட்டு நீயும் பிராமணனே என தைரியமாக கூறியவன், காக்கைகளையும் ,குருவிகளையும் தனது சாதியாக கொண்டாடிய மாமனிதன் அவனை இந்த சமுதாயம் உள்ளவரை கொண்டாடும். நீங்களும், ஞானிகளும் ஒரு பாரதியாய் வாழ்ந்து பாருங்கள், ஒவ்வொரு பார்பாணும் அவன் கடைபிக்கும் வருணாசிரமத்தை விட்டு வெளிவரட்டும் இனி காக்கை குருவிகள் மட்டுமல்ல பார்பணனும் எங்கள் சாதி என உங்களை கொண்டாடுவோம்.
-
|2010-06-22 15:15:26 பாண்டிநாடன்ஞாநிக்குச் சரியாகவே பதிலளித்துள்ளார் தனஞ்செயன். மற்ற விடயங்களிலெல்லாம் எதிரும் புதிருமாக இருந்தாலும் ஈழம் சார்ந்து மட்டும் அ.மார்க்சும் ஞாநியும் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள்.
-
|2010-06-23 05:57:07 kananஇந்திரா காந்தி ஈழவிடுதலை போராளிகளுக்கு பயிற்சி கொடுத்து ஆயுதம் கொடுத்து அமரிக்க நடமாட்டத்தை இலங்கையில் நிறுத்த ரசியாவிற்கு இந்தியா உதவிபுரிந்ததே தவிர தமிழன் சுதந்திரம் இந்தியாவின் திட்டத்தில் இல்லை ஆபரேசன் புளுதண்டர் மற்றும் மாலைதிவு எல்லாவற்றிலும் அடியாளாகவே நம்மை உபயோகப்படுத்தியதை யாரும் மறுக்கமுடி லஷ்கர் இ தொய்பாவை பாகிஸ்தான் இவ்வாறு உருவாக்கியே இன்றும் காஷ்மீர் பிரச்னையை கையாள்கிறது அதுபோலவே அன்று இந்திரா காந்தியும் கொஞ்சம் மனச்சாட்சியுடன்கூடிய திட்ட வரைவை வைத்திருந்தார் பூகோள அரசியலில் ரசியா செல்லாக்கசாகிப் போன்பின் அமரிக்க வாலாகிப்போன இந்தியா எப்படியும் தமிழர் தரப்பை கொச்சைப்படுத்தி நியாயமில்லா போராக சித்தரிக்கவே மல்லுக்கட்டும். ஒருகாலத்தில் ரசியா சேகுவாரா போராளிகளிற்கு இந்தியாவை எதிருங்கள் என்று இலங்கையில் பயிற்றுவித்திருந்தது நோக்கம் இந்தியாவின் அழிவு இல்லை இலங்கை அரசை பிரச்சனைக்குள்ளக்கவே, அன்று இலங்கை அரசு தனது பூரண ஆதரவை அமரிக்காவிற்கு வழங்க முடியாது சிக்கலுக்குள்ளாக்க பட்டிருந்தது, என்று எமது அடிப்படை உரிமைப்பிரச்சனை பெரிய பெரிய எசமான்கள் கைகளில் போய் சேர்ந்ததோ நமது சுதந்திரத்துக்கு அன்றே புதைகுழிநடுகல்லு பொளியப்பட்டுவிட்டது எமது இனம் அனைத்தையும் இழந்து அவமானப்பட்டு நடுத்தெருவில் கூனிக்குறுகி பெற்ற குழந்தைகளின் முகத்தில் முளிக்கமுடியாத பேடிகளாய் ஒவ்வொருகுடிமகனும் உடைந்துபோனான் ஞானி உணருவார் அவர் மருத்துவமனையில் இருந்துமீண்டு வந்த கடனை அடைக்க 200 ஒ பக்கங்கள் எழுதவேண்டும் என்று சொல்லியிருந்தார் எழுத்தாளன் ஒருவனுக்கு ஒரு இருதய அடைப்பை 200 பக்கங்களே சரிசெய்யும், அதுபோல பிணமான தாயின் முலைசூப்பிய பச்சிளங் குழந்தையின் பசி தன் கோரப்பற்களை ஒருநாள் காட்டும் அன்றும் ஆண்டவரே பொறுத்துக்கொள்ளும் அமென்.
-
|2010-06-24 13:47:20 alexஞானி சொல்வது இருக்கட்டும்.. எதெற்கெடுத்தாலும் பார்ப்பனர் என்று பார்ப்பனரையே குறை கூறுகிறீர்களே.. பார்ப்பனர் நாட்டின் மொத்த சனத்தொகையில் மிகச்சிறிய சதவீதம்தான்.. பெரும்பான்மையினராக இருக்கிற மற்ற சமூகத்தினர் ஈழத்தமிழருக்கு ஆதரவாகத்தானே(?!) இருக்கிறார்கள், உங்கள் கூற்றுப்படி.. அப்படியானால் அப்படி அனைவரையும் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டியதுதானே.. செய்ய மாட்டீர்கள்.. செய்யவும் முடியாது..
-
|2010-06-26 09:20:53 IBU PARISGAANI ELUTHIYATHU SARIYE. ELLA THAMILARUKKU AATHARAVAAGA ORU KOOLI PADAI URUVAAGI IRUKKIRATHU.
-
|2010-06-29 05:14:03 aathmaarthithananjeyan sollvadhu sariya thavaraa enbadhu orupuram irukkattum. avarai kurai solvadarkku munbagha arasanghanghalaiyum adhan mathiya maanila arasiyal vadhighalaiyum solvadharkku edhuvume illaiya..?
-
|2010-07-04 10:49:52 thamizhselvanattaikalidam raththa dhaanaththai patri pesamudiyadhu intha akkrahaara communistgalidam manithaneyathai patri pesa mudiyadhu poli podhuvudamaivaadhi parpana gnani ozhiga!
-
|2010-07-06 12:17:03 thamilanபிராமணன் ஒரு செத்த பாம்பு யார் உயிர் ரோடு இருக்கிறார்கள் என்றால் சாதி ஹிந்துக்கள் தான் அந்த சாதியை சொன்னால் கீற்று டாட் காமிலே எடிட் பண்ணி விடுவார்கள் அந்த அளவிற்கு அந்த சாதி மேல் பயம் எல்லா எழுத்தாளர்களுக்கும் உண்டு . உண்மையை சொன்னால் உரிக்க தான் செய்யும்
-
|2010-07-10 04:30:46 kabilankarunanidhi and veeramani did nothing in favour of srilankan tamils and they are not bramins,and no non-brahmins questioned about traitor karuna who enjoys minister post in srilanka govt. karuna was also a part in rajiv gandhi's massacre as he was a commander in LTTE In 1991.
| < முன் | அடுத்தது > |
|---|








