தடைபட்ட மின்சாரம்
தருவித்த அமைதியை,
எடுத்துரைக்க வந்துவிடுகிறது
எப்போதும் ஒரு காகம்!

 

தனிமையின்  சுதந்திரத்தில்,
காதலை கொண்டாடும்,
காதலியின் 
இலக்கனமில்லா
மெல்லிய நடனத்தை,
ஒளிந்திருந்து  ரசிக்கும்,
காதலனாக்கியது என்னை,
மின்விசிறி இல்லா
அறையில் மிதக்கும்,
ஊதுபத்தி  புகை!

- பொ.வெண்மணிச் செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It