கீற்றில் தேட...

தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் சரிவதில்லை. பாலூட்டும்போது ப்ரா அணியாமல் இருந்திருக்கலாம். சில தாய்மார்கள் வெறும் நைட்டி மட்டும் போட்டு உள்ளே ப்ரா அணியாமல் விடுகின்றனர். இதனால் தான் வெகு விரைவாக மார்பகங்கள் சரிந்து விடுகின்றன. இதற்கு க்ரீம், மாத்திரை, மருந்து எதுவும் பலனளிக்காது. மாறாக அவை சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தக்கூடும். பிளாஸ்டிக் சர்ஜரி மட்டுமே நிரந்தரத் தீர்வு. ஆனால் அதற்கு அதிக செலவாகும். தோற்றத்தை சரிப்படுத்த வேண்டுமானால், கம்பிகள் பொருத்தப்பட்ட ப்ரா கிடைக்கிறது. அதை உபயோகிக்கலாம். காம்புகளைச் சுற்றி ஏற்படும் சுருக்கத்திற்கு தோலில் போதுமான எண்ணெய்ப் பசை இல்லாததே காரணம். விக்விட் பாரஃபி எண்ணெய் நல்ல பலனளிக்கும். இதை காலையும் மாலையும் காம்புகளைச் சுற்றித் தடவினால் நாளடைவில் சுருக்கம் மறையும்.