மானிடவியல்,மனித இனம் பற்றிய கல்வித்துறை ஆகும்.இது மனித குலத்தைச் சமூக-பண்பாட்டு நிலையிலும்,உயிரியல் நிலையிலும்,கடந்த கால மக்களையும்,சமகால மக்களையும் (அதாவது எல்லாக் காலத்து மக்களையும் எல்லா இடங்களின் மக்களையும்) ஆராயும் பரந்த விரிந்த இலக்குடையதாக உள்ளது.

இது இரண்டு வகைகளில் முழுதளாவிய தன்மை கொண்டது: இது எல்லாக் காலங்களையும் சேர்ந்த எல்லா மனிதர்களையும், மனித இனத்தின் எல்லா அம்சங்களையும்பற்றிக் கருத்தில் கொள்கிறது.பண்பாடு பற்றிய எண்ணக்கருவும்,மனித இயல்பு,பண்பாடே என்னும் கருத்தும் ;அதாவது மனித இனம் உலகத்தைக் குறியீட்டுமுறையில் விளங்கிக் கொள்வதற்கும்,சமுதாய ரீதியில் குறியீட்டுமுறையில் பயிலவும் பயிற்றுவிக்கவும், அக்குறியீடுகளின் அடிப்படையில் உலகத்தையும் மனிதனையும் மாற்றிக்கொள்வதற்கும் ஏதுவாக முழுமை யான தகுதியை வளர்த்துக்கொண்டுள்ளது என்னும் கருத்துமே மானிடவியலின் அடிப்படையாகும்.

மானிடவியல் பாரம்பரியமாக நான்கு துறைகளாக வகுக்கப்படுகிறது:

உடல்சார் மானிடவியல்:இது உயர்பாலூட்டி நடத்தைகள்,மனித பரிணாமத்தில், குடித்தொகை மரபியல் என்பவை பற்றி ஆராய்கின்றது;இத்துறை சில சமயங்களில் உயிரியல்சார் மானிடவியல் எனவும் வழங்கப்படுகின்றது.

பண்பாட்டு மானிடவியல்: (சமூக மானிடவியல் அல்லது சமூகப் பண்பாட்டு மானிடவியல் எனவும் அழைக்கப்படும்).பண்பாட்டு மானிடவியலாளரின் ஆய்வுக் களம் சமூக வலையமைப்பு, சமூக நடத்தைகள்,உறவுமுறை வடிவங்கள், அரசியல், நம்பிக்கைகள், உற்பத்தி வடிவங்கள், பரிமாற்றம்,நுகர்வு மற்றும் ஏனைய பண்பாட்டு வெளிப்பாடுகள் என்பவற்றை உள்ளடக்கும்;

மொழிசார் மானிடவியல்:இது காலம் மற்றும் இடம் சார்ந்த நிலையில் மொழிகளின் வேறுபாடுகள், மொழியின் சமூகப் பயன்பாடு, மொழிப் பண்பாடு என்பவற்றுக்கிடையிலான தொடர்பு என்பவை பற்றி ஆய்வு செய்கின்றது; தொல்பொருளியல்: இது மனித சமூகங்களின் பொருள்சார் எச்சங்களை ஆராய்கிறது.

இது பொதுவாக ஒரு தனியான துறையாகவே கணிக்கப்படுகின்றது.

உலக மக்களின் பரிணாம வளர்ச்சி, சமூக நிறுவனங்களின் தோற்றங்கள், வளர்ச்சி பற்றிய ஆய்வுகள் மேலை நாடுகளில் தோற்றம் கொண்டதும் 19ஆம் நூற்றாண்டில் தான். மார்கன் போன்ற அறிஞர்களால் தொடங்கப்பட்ட இந்த ஆராய்ச்சி யானது ஏங்கல்ஸ் போன்றோரால் விரிவுபடுத்தப் பட்டது.20ஆம் நூற்றாண்டில் லெவிஸ்ட்ராஸ் போன்றவர்களால் அறிவியல்ரீதியான தகுதியையும் பெற்றது.

தமிழ்ச் சமூகக் களங்களில் இடம்பெறும் மானிடவியல் ஆய்வுகள் தமிழர் மானிடவியல் ஆகும்.இத்துறையில் முன்னோடியாக விளங்கி யோர் ஐரோப்பியர்களே ஆவர். இவ்ஆய்வுகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலோ அல்லது பிற ஐரோப்பிய மொழிகளிலோ இருந்தன. பின்னர் தமிழர்களும் மானிடவியல் அணுகுமுறை களையும், இத்துறையின் கோட்பாடுகளையும் தமிழ்ச் சூழல் களஆய்வுகளுக்குப் பயன்படுத்தினர். முதலில் தமிழியல், நாட்டார் வழக்காற்றியல் துறைகளிலும் பின்னர் சாதி, சாதியம், சமூக அசைவியக்கம், அலைந்து சூழ்வியல் எனப் பல களமுனைகளிலும் மானிடவியல் பயன்படுகின்றது. நூலாசிரியர் பக்தவத்சல பாரதி தமிழகத்தில் உள்ள மானிடவியல் ஆய்வாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்.

தமிழர் மானிடவியல் பற்றிய ஆய்வுகளுக்கும், தமிழில் மானிடவியல்பற்றிய தகவல்களுக்கும் பக்தவத்சல பாரதி அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கவை.அவரின் தமிழர் மானிடவியல்,மானிடவியல் கோட்பாடுகள் நூற்கள் இத்துறையில் தகுந்த விரிந்த புரிதலைத் தரவல்லவை.

“பண்பாட்டு மானிடவியல்”, “தமிழர் மானிடவியல்” போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "தமிழர் மானிடவியல்"என்னும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மானிடவியல் (சமூகவியல், புவியியல், நிலவியல்) என்னும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.,

தொல்குடியினரின் அறிவுத்திறனையும் விஞ்ஞானத்தின் அறிவுத்திறனையும் ஒப்புமை கொண்டவையாகக் கண்டறிந்த முதல் அறிஞர் லெவி-ஸ்ட்ராஸ்தான். அதாவது, தொல்குடி யினரின் தொன்மங்கள், வெறும் கதையாடல்கள் அல்ல, மாறாக இந்தத் தொன்மங்கள், கதையும் அறிவுத்திறனும் இணையும் களங்கள் என்று முதன்முதலில் எடுத்துக்காட்டியவர் லெவி-ஸ்ட்ராஸ்தான்.

அந்த அளவுக்கு லெவி-ஸ்ட்ராஸ்,தம்முடைய வாழ்நாளின் பெரும்பகுதி பல்வேறு கண்டங்களில் அலைந்துதிரிந்து, தொல்குடியினர் இடையே உள்ள வகைப்படுத்தும் திறனை ஆராய்ந்திருக் கிறார். தொல்குடியினர்பற்றிய லெவி-ஸ்ட்ராஸின் சிந்தனை, கடந்த பல பத்தாண்டுகளில் எந்த வளர்ச்சியுமற்றுத் தோல்வியைச் சந்தித்தது. தம்மை ஓர் மார்க்சியரென்று சொல்லிக்கொண்ட லெவி-ஸ்ட்ராஸின், சிந்தனைத் தளமே இலக்கு அற்றது; எவ்விதப் பொருள்கொள்ளலுமற்றது. ஆகவே மார்க்சிய விஞ்ஞானப் பார்வையும் அவரிட மில்லை.

ஆனால் அறிவுலகின் இவருடைய அமைப்பியல் வாத சிந்தனை அடைந்த வெற்றிக்கு மாறாக,நவீன விஞ்ஞான உலக மனித சமூகம் பழங்குடியினருக்குச் சங்கம் வைத்து வாழ்வாதார உரிமைக்காகப் போராடி வருகின்றது.

பண்பாட்டு மானிடவியல் என்பது விஞ்ஞானத்துக்கு எதிரான கருத்தாக்கம் ஆகும்; மானிடவியல் ஆய்வு விஞ்ஞானப்பூர்வமற்றது.தொல்குடியினர்,பழங்குடியினர் என்ற கருத்தாக்கமே தவறு. எவ்வளவு பழமைவாய்ந்தவர் பழங்குடியினர்? அல்லது பழங்குடியினர் இன்றைக்குமுள்ளனர். போன்ற கேள்விகளெல்லாம் மானிடவியலாளரிடமில்லை. லெவி-ஸ்ட்ராஸ் சொன்ன முற்கால,புராதன பழங்குடியினர்,தொல்குடியினர்,நாகரிகத்திற்கு முந்தைய காட்டுமிராண்டி மூளை அமைப்பும் நாகரிகமடைந்த பிற்கால வேட்டைச் சமூகக் குடியினரின் மூளை அமைப்பும் ஒன்று போலுள்ளன,ஒத்துப்போயின,என்பனபோன்ற கருத்தாக்கமெல்லாம் தவறாகிப்போனது.

சிந்தனையாளர்களைத் தனிப்பட்ட ஒரு மேதையைப் போலச் சித்திரிக்காமல் அவரது கால, தேச,வரலாற்றுச் செய்திகளுடன் விமர்சனக் கண்ணோட்டத்தில் எழுதியிருப்பது சிறப்பு. மானிடவியல், சமூகவியல், தத்துவவியல் போன்ற துறைகளுக்கு வரலாற்றுப் பின்னணி உள்ளது; இது சிந்தனையாளர்களின் கருத்தாக்கங்களைப் பெரிதும் வரையறுக்கிறது. எனவே, அவர்களது கருத்துகளை விவரிக்கும் பொழுது அவர்தம் துறையின் சமூகப் பின்னணி, அவர்தம் தேடல்களின் நோக்கம் அத்தேடல்களுக்கு அவர்கள் தரும் விளக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆக்கபூர்வமான கேள்விகளை எழுப்பியிருக்க வேண்டும்.

ஆசிரியர் முன்வைக்கும் விமர்சனங்கள் :"சாதி யமைப்புகள் 'மூடிய'சமூக அமைப்பு கொண்டவை.இதில் எந்த ஒரு வகையான தகுதிப் பெயர்வை அடைந் தாலும் ஒரு முதலியார் ஒரு முதலியாராகவே இருக்க முடியும்."

"கீழ்ச்சாதியினர் உயர்குடியாக்க முறையினால் தகுதி உயர்வை ஏற்படுத்திக் கொண்டால் அவர்கள் அனை வரும் மேல்சாதியினராக மாறிவிடுகின்றனரா?கீழ்ச் சாதிகள் காணாமல் போய்விட்டனவா?"

"பிராமணர்கள் ஒரு தளத்தில் நவீனத்துவத்தின் மையத்தை நோக்கி நகர்வதும், மறுதளத்தில் கீழுள்ள சாதிகளின் பண்பாட்டை நோக்கி நகர்வதுமான இருதிசை மாற்றங்களைக் கொண்டுள்ளனர்." போன்றவை.

மண ஒப்பந்தக் கோட்பாடு அல்லது பரிமாற்றப் பொதுக் கோட்பாடு என்பது, உறவுமுறைத் தொடர்புகளை ஆய்வு செய்வதற்கான ஒரு அமைப்பு சார்ந்த வழிமுறையின் பெயராகும். கிளாடே லெவிஸ்ட்ராஸ் எழுதிய உறவுமுறையின் தொடக்கநிலை அமைப்புக்கள் (Elementary Structures of Kinship) ) என்னும் நூலில் இருந்தே இது உருவானது. தமிழர் முறைமணங்கள் என்பது ஓர் ஆடவன் தனது தந்தையின் சகோதரி மகளை மணப்பதும், தனது அக்காள் மகளை மணப்பதும்,தனது தாயின் சகோதரன் மகளை மணப்பதுமான உறவுமுறைத் திருமணங்களாகும். இம்முறை தெற் காசியரிடம், குறிப்பாக, தமிழரிடம் பெரிதும் காணப்படுகிறது. தமிழ் பேசும் சாதிகளிடையே குடும்ப உறவுகள் எத்தன்மையில் இருந்தன என்பதை எட்கர் தர்ஸ்டன் தென்னிந்திய மானிட இன இயல்,குலங்களும் குடிகளும் போன்ற நூல்களில் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.

சமூக விளைவுகள்:"இவ்வகைத் திருமண முறையில் மணப்பெண் பகிர்வு ஒற்றைத் திசையில் சுழன்று வருவதால் பெண் கொடுப்போர், பெண் எடுப் போர் ஆகியோரிடையே உயர்வு தாழ்வு ஏற்படும்.இது ஒரே சமூகத்திற்குள் படிநிலை அமைப்புக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார் லெவிஸ்ட்ராஸ்."அதேவேளை "பெரிய வட்டத்தில் மணப்பெண் பரிமாற்றம் நிகழ்வதால் சமூகத்தின் கால்வழிக் குழுக்களிடையே ஒத்துழைப்பும் நல்லிணக்கமும் மிகுதியாக இருக்கும் என்கிறார் லெவிஸ்ட்ராஸ்".--பக்தவத்சல பாரதி. (2005). மானிடவியல் கோட்பாடுகள். புதுவை: வல்லினம் பதிப்பகம். பக்கம் 127.

லெவி-ஸ்ட்ராஸ§ம் அமைப்பியலும்

சசூருடைய அமைப்பிய மொழியியல் கோட் பாடுகளை மானிடவியலில் பொருத்திப் பார்த்து வளர்த்தெடுத்ததே லெவிஸ்ட்ராஸின் அமைப்பிய மானிடவியல் கோட்பாடுகள் ஆகும்.மறுக்கப்பட்டவையெல்லாம் பொய்ப்பிக்கப் பட்டவை அல்ல.அப்படிப்பார்த்தால் மறுக்கப் படாத எந்தக் கோட்பாடுமே சமூக அறிவியல் தளங்களில் இல்லை என்பதை இத்துறைகளில் அறிமுகம் உள்ளவர்கள் அறிவார்கள்.லெவி ஸ்ட்ராஸ் மிக விரிவாக ஆதார பூர்வமாக மறுக்கப் பட்டாலும்கூட [அவர் தன் முடிவுகளை செவ்விந்தியர்களைச் சார்ந்தே உருவாக்கினார்.] அவரது கோட்பாடு அழிந்துபோவது இல்லை.

ஏன்,எங்கல்ஸின் எல்லாக் கோட்பாடுகளும் மறுக்கப் பட்டுவிட்டனவே.அவர் காலாவதியானவரா என்ன?மறுக்கவே படாத எந்தச் சிந்தனை உலகில் உள்ளது?

சமூக அறிவியல் தத்துவம் போன்ற துறைகளில் கோட்பாடுகள் என்பவை 'பார்வைகள்' மட்டுமே. அவை நிரூபிக்கப் பட்டவை அல்ல. ஆகவே நிராகரிக்கப்பட்ட வையும் அல்ல. மறுப்பு என்பது இத்துறைகளில் உள்ள இயங்கியல் வளர்ச்சியின் விளைவேயாகும். ஒன்றையன்று மறுத்தே இவை முன் நகர முடியும். ஏங்கல்ஸ் மறுக்கப்பட்டார். ஆகவே நிகழ்ந்தது என்ன?

ஏங்கல்ஸ் தந்தைவழிச் சமூகங் களுக்கு முந்தையதாகத் தாய்வழிச் சமூகங்கள் இருக்குமென்பதை ஓர் உலகளாவிய சமூகவியல் விதியாகக் காண முயல்கிறார்.இது மறுக்கப் பட்டது. ஆனால் தாய்வழி சமூக அமைப்பு உண்மையிலேயே இருக்கும் இடத்தில் அவரது ஆய்வுமுறை பயன் தருவதே.மறுக்கப்பட்டமையால் ஸ்ட்ராஸ் மானுடவியல் ஆய்வுகளில் மேற்கோள் காண்பிக்கப்படாமல்இல்லை.ஏங்கல்ஸின் சமூகப் பரிணாமவாதமும் சரி,ஸ்ட்ராஸின் அமைப்புவாதமும் சரி கருவிகள் மட்டுமே.ஒரு குறிப்பிட்ட நோக்கை உருவாக்க,ஒரு இடத்தை விளக்க அவர்கள் உதவுகிறார்கள். ஏங்கல்ஸில் இருந்து அந்தக் கோணத்தைத் தொடங்கலாம்.

பேராசிரியர் பக்தவத்சல பாரதியின் பிற நூல்கள் :

'ஒரு மொழியின் வளர்ச்சியும் சிதைவும் அம் மொழியின் தொன்மை சம்பந்தமானது மட்டுமே அல்ல... இந்த நவீன யுகம் தாண்டிய எதிர்காலப் பயன்பாட்டுக்கு அது எந்த அளவு உதவப் போகிறது என்பதுதான் ஒரு மொழியின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது.’

- லெவிஸ்ட்ராஸ் (மொழியியல் - தொன்மையியல் அறிஞர்)

லெவி-ஸ்ட்ராஸின் முக்கிய முடிவுகள் யாவை?

தொன்மம் குறித்து அமைப்பியலாளரின் அணுகுமுறை :

தொன்மம் என்பது மொழியைப் போன்ற, மொழி வடிவிலான ஒன்று. நம்முடைய உலகத்தை நாம் புரிந்துகொள்ள முயல்கிறோம் என்பதாய் இவை வருகின்றன.எனவே இவை எப்போதும்இயக்கத்தில்இருப்பவை,மாறிக்கொண்டிருக்கின்றவை,இன்னும் சொல்லப்போனால் தீர்க்க முடியாததாய் வருகிற புதிர்களைத் "தீர்க்க"முயல்கிற விடாப்பிடியான முயற்சிகள் இவை, எனவே சில சமயம் உறைந்தும் போய்விடக்கூடியவை. இவற்றின் இயக்கத்தின்போது இவை கொண்டுவரும் இருமை-எதிர்வுகள்,முரணி யக்கங்கள் போன்றவை தம்மைத் தாண்டிய புதிய முரண் பாடுகளைத் தோற்றுவிக்கின்றன.

இந்த இருமைத்தன்மை மற்றும் அதன் இயக்கத் துக்குப் பின்புலமாக இருப்பவை,மனித மனத்தின்,மனித மூளையின் அடிப்படைகளாக அமைந்த இருமைத் தன்மைகளே எனலாம். ஆக, மூளைக்குப் பகுதிகள் இரண்டு, உடலில் கண்கள் இரண்டு, கை-கால்கள் இரண்டு என மனித உடற்கூற்றிலேயே சில இடங்களில் பொதிந் திருக்கிறது இந்த இருமைத்தன்மை. இவ்வகையில் மனித ஆன்மா என்பதை algebra கணிதவியல் போன்ற ஒரு சட்டகத்தில் வைத்துக் கண்டுவிடலாம் என்பதும் லெவி-ஸ்ட்ராஸின் அதீதமான, சர்ச்சைகளைக் கிளப்பிய ஒரு கூற்று.

ஆக,மனிதன் இந்த இருமைத் தன்மையை இயங்க வைத்துத் தீர்க்க முயன்று வெற்றியும் கண்டு தோல்வியும் அடைந்து செல்லும் பொருள்பொதிந்த, பிளவுண்ட, கூட்டுப்பிறவி என்கிறார் லெவி-ஸ்ட்ராஸ். நம்முடைய சித்தர் மரபை ஒத்திருப்பதுபோலத் தெரிகிறது, இந்த முடிவு. இப்படி அடைந்துகூறும்போது எளிதாகத் தோன்றுகிற இந்த முடிவை அடைய, லெவி-ஸ்ட்ராஸ் ஆராய்ந்தவை அதிகம் தொன்மங்கள்,செலவழித்தவை ஏராளமான ஆண்டுகள்.அமைப்பு என்பது பல உறுப்புகளை உடையது.இவ்வுறுப்புகள் ஒன்றாக இணையும் போது இணைதல் என்ற செயல் காரணமாகத் தனித்து இருந்தபோது இருந்த இயல்பிலிருந்து மாறு படுகிறது.இந்த மாறுபாட்டால் புதிய பொருள் உண்டாகிறது.இந்த இணைதல் பற்றியும் அதனால் ஏற்படும் விளைவு பற்றியும் விளக்குவதே அமைப்பியல் எனலாம்.

அமைப்பியல் நோக்கில்:அமைப்பியல் என்றவுடன் பெர்டினாண்ட்டி சசூரின் அமைப்பியலா? லெவிஸ்ட்ராஸின் அமைப்பியலா?விளாடிமீர் பிராப்பின் அமைப்பியலா?ருஷ்ய நாட்டு உருவ வியலார் குறிப்பிடும் அமைப்பியலா?என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருக்க வேண்டாம்.அமைப்பியல் என்பது மொழியை அடிப்படைச் சிந்தனை முறையாகக் கொண்டது.“மொழி என்பது சப்த குறிகளின் இணைப்பாலான அமைப்பு;மொழி என்பது இடுகுறி அர்த்தம் கொண்ட குறிகளாலான தொகுப்பு” என்கிறார் சசூர்.

லெவி-ஸ்ட்ராஸின் தொன்மக்கதை அணுகலில் ஏதாவது ஒர் எதிரிணை இருப்பதுதான் அமைப்பு -- மேல்-கீழ்; இங்கே-அங்கே; நல்ல-கெட்ட; ...இப்படிப்பட்ட எதிர் முரண்கள் கொண்ட ஒர் அமைப்பு உலகத்தில் இருக்கிறது, அதுதான் நம்மை இயக்குகிறது என்றார். மேலும் உள்ளுறைத் தன்மையும் வெளிப்படும்தன்மையும் என்று கூறப்படுகின்ற ஒர் மொழியியல் கருத்தாக்கம் கூட அமைப்பியலின் அடிப்படைப் பண்பாகக் கொள்வர்.ஆனால் தெரிதா இன்னும் அதிகமான பொருள் உலகம் ஒரு பிரதியின் தளத்துக்குள் இருக்கும் என்று கூறி, வரலாறு, அரசியல், பழக்க வழக்கம் என்று மிகவும் பரவலான பல விஷயங் களைக் கொண்டுவருகிறார்.

நவீன மொழியியல் கோட்பாடுகளின் மாதிரியில் இலக்கிய விமரிசனம் செய்வதே அமைப்பியல் விமரிசனம். பாரிஸில் இருந்த பல இலக்கிய ஆய்வாளர்கள் மொழியியல்வாதி சசூரின் சிந்தனைகளை மாதிரியாக வைத்து இலக்கி யத்தை அணுகும் முறையை உருவாக்கினர். அது அமைப்பியல் இலக்கிய விமரிசனம் எனப் பெயர் பெற்றது. எல்லாம் சில குறிகளைப் பல்வேறு இணைவு விகிதத்தில் கொண்டிருக்கும் அர்த்த உற்பத்திக்கான ஊடகங்களாய்ப் பார்க்கப்பட்டன.மனித உணர்வுகள்,தனிப்பட்ட ரசனை போன்றன இலக்கியத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இலக்கியம், முதல் வகை மொழி ஒழுங்கின் மீது அமைந்திருக்கும் இரண்டாம் வகை மொழி ஒழுங்கு என விளக்கப்பட்டது.

1970 வாக்கில் பிரான்சில் அமைப்பியல் கொடி கட்டிப் பறந்தபோது அதனை மதிப்பிழக்க வைத்தது பின்-அமைப்பியல் என்றால், 1966-இல் அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில் தெரிதா அவர்கள் லெவி ஸ்ட்ராஸின் அமைப்பியலை விமர்சித்து மதிப் பிழக்க வைத்துள்ளார்.அமைப்பியலின் மையத்தைச் சுட்டி அது விஞ்ஞானத்துக்கு எதிரான கருத்து என விவாதித்தார். கட்டுப்படா வித்தியாசங்களின் முடிவுறா விளையாட்டை மொழியியல் ஏற்பதில்லை என்றார் தெரிதா. மையத்தைக் கட்டவிழ்க்க வேண்டும் என்றார். இங்கு ‘ பின்-அமைப்பியல்’ வாதம் கிளப்பப்படுகிறது. மார்க்சிய விஞ்ஞானச் சிந்தனை அடிப்படையில் மானிடவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்:அதாவது, ஏட்டிலேறிய வரலாறு அனைத்தும், வரலாற்றிற்கு முற்பட்ட சமுதாயம் குறித்து, எழுத்தில் பதிவாகியுள்ள வரலாற்றிற்கு முன்பு நிலவிய சமூக ஒழுங்கமைப்பு குறித்து, 1847இல் அனேகமாய் ஏதும் அறியப்பட்டிருக்கவில்லை.

அதற்குப் பிற்பாடு,ஹாக்ஸ்த்ஹாவுசன் ரஷ்யாவில் நிலம் பொதுவுடைமையாய் இருந்ததென்று கண்டு பிடித்தார்;டியூட்டானிய இனங்கள் யாவுமே நிலத்திலான பொதுவுடைமையாகிய இந்த சமூக அடித்தளத்திலிருந்துதான் வரலாற்றை ஆரம் பித்தன என்று மௌரர் நிரூபித்துக்காட்டினார்;இந்தியாவிலிருந்து அயர்லாந்து வரை எங்குமே நிலத்தைப் பொதுவுடைமையாய்க் கொண்ட கிராம சமுதாயங்கள்தான் சமுதாயத்தின் புராதன ஆதி வடிவமாய் இருக்கிறது அல்லது இருந்திருக்கிறது என்பது நாளாவட்டத்தில் தெரியலாயிற்று.

இவற்றுக்கு எல்லாம் மணிமுடி வைத்தாற்போல்,கணம் என்பதன் மெய்யான தன்மையையும் அதற்கும் பூர்வகுடிக்குமுள்ள உறவையும் மார்கன் கண்டுபிடித்ததானது, இந்தப் புராதனக் கம்யூனிச சமுதாயத்தின் உள்ளமைப்பை அதன் தூய வகை யிலான வடிவில் தெளிவாய்ப் புலப்படுத்திற்று. இந்தப் புராதன சமுதாயங்களின் சிதைவைத் தொடர்ந்து சமுதாயமானது பாகுபாடற்றுத் தனித்தனியான, முடிவில் ஒன்றுக்கொன்று பகை மையான வர்க்கங்களாய்ப் பிரிய முற்படுகிறது.இந்தச் சிதைவு நடந்தேறிய நிகழ்ச்சிப்போக்கினை ''குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்'' என்ற நூலில் (இரண்டாம் பதிப்பு, ஷ்டுட்கார்ட், 1886) நான் விரித்துக் காட்ட முயன்றிருக்கிறேன்.” (1888-ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்புக்கு எங்கெல்ஸ் குறிப்பு.)

Pin It