ஆண்களுக்கு மீசை எத்தனை கம்பீரமோ, அத்தனைக்கும் மார்பகங்கள் பெண்களுக்கு அலங்காரமும், கவர்ச்சியுமாகும். பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின் அதிக கவனிப்புக்கு உரிய உறுப்பாக இருப்பவை மார்பகங்கள்.

                பெண்களின் மார்பகங்களின் சிறப்பை அன்றைய காவியங்கள் வானளாவ வர்ணித்தன. இலக்கியத்தில் மார்பகத்தை “கொங்கை” என்று குறிப்பிட்டது. பின்பு மாங்கனி எனவும், மாதுளை பழம் எனவும் அழ குற வர்ணித்து, கொங்கையின் ரகத்தை அறிவுக்கு மாயைப் பொரு ளாய், இச்சைக்கு போதையூட்டும் அங்கமாய் மேற்கோள் காட்டின.

                இன்றைய சமூகப் படைப்புகள் அமோகமாய் புகழ் கின்றன. நாளைய விஞ்ஞான பேரூலகம் உயர்வாகப் போற் றும் ஏன்? மனித இனம் இம்மண்ணில் உள்ளளவும் பெண் ணின் மார்ப கத்தை மெச்சிப் பேசும் என்ப தில் வியப்பில்லை.

குறையில்லாத மார்பகங்கள்

                மார்பகங்கள் அழகாக இருக்கவேண்டும் என்றால் அவை உருண்டு இருக்கவேண்டும். திரட்சியாய் இருக்கவேண்டும், சதைப் பற்றுடன் இருக்கவேண்டும், கொழுத்து இருக்கவேண்டும், அதுமட்டுமல்ல நிமிர்ந்து தொய்வில்லாமல் விறைப்புடன் இருக்கவேண்டும்.

                ஆனால் இன்று பலருக்கு கவலைக்குரிய உறுப்பாக இருக்கிறது. டீன் ஏஜ் பெண்கள் என்றால் சிறியதாக இருக்கிறது என்றும், ஒன்றுக் கொன்று அளவில் மாறுபாடு இருக்கிறதென்றும் நினைக்கிறார்கள். திருமணமான பெண்கள் என்றால் சரிந்து, தொங்கி காணப்படுகிறது என்று கவலைப்படுகிறார்கள். பெண்களின் இத்தகைய கவலைகள் நீங்க வேண்டுமானால் மார்பகங்கள் பற்றிய உடலியல் உண்மைகளை புரிந்து கொள்ளவேண்டும்.

மார்பகம் - உடலியல் இயக்கம்

     மார்பகங்கள் என்பவை கொழுப்பு திசுக்களால் சூழப் பட்ட பால்சுரப்பு நாளங்களை உள்ள டக்கியவை. செடி யைப் பிடுங்கிப் பார்த் தால் அதன் அடியில் எவ்வாறு வேர்கள் பல கிளைகளாக பர விச் செல்லுமோ அதை போன்று தான் மார்பக காம்பின் அடிப்பகுதியில் பெரிதும், சிறிதுமாக எண்ணற்ற பல கிளை நாளங்கள் உள்ளன. இவற்றை சூழ்ந்து தான் மார்பகத் தசை பெருகும்.

     மார்பகங்களில் இருக்கும் கொழுப்பை பொறுத்துதான் அதன் அளவும், வடிவமும் அமைகிறது. மார்பகம் பெரியதாக இருந்தால் அதில் அவரது குழந்தைக்கு அதிகம் பால் சுரக்கும் என்பதும், மார்பகம் சிறியதாக இருந்தால் குறைந்த அளவே பால் சுரக்கும் என்பதும் தவறானது. மார்பக அளவிற் கும், சுரக்கும் பாலின் அளவிற்கும் சம்பந்தம் இல்லை.

இரண்டு மார்பகமும் ஒரே மாதிரி இருக்குமா?

     இளம்பெண்களில் பலர் தங்களது மார்பகங்களில் ஒன்று சிறியதாகவும், இன்னொன்று பெரியதாகவும் இருப்பதாக கருதுகிறார்கள். அது உண்மைதான். அதற்கு காரணம் இரண்டு மார்பகமும் ஒரே நேரத்தில் சமமாக வளர் வதில்லை. ஒரு மார்பகம் வளரத் தொடங்கும் காலகட்டத்தில் இன்னொரு மார்பகம் வளர்ச்சியை நிறைவு செய்திருக்கும். அதனால்தான் இந்த சிறிய வித்தியாசம். இதற்கு கவலைப்பட வேண்டிய தில்லை.அளவு, வடிவத்தில் பெரிய அளவில் வித்தியாசம் இருந்தால் மட்டும் டாக்டரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.

பாலூட்டினால் மார்பக அழகு கெட்டு விடுமா?

     பாலூட்டினால் பெண்களின் மார்பக அழகு கெட்டுவிடும் என்று பொதுவாக சொல்லப் படுகிறது. இது முற்றிலும் தவறானது. சொல்லப் போனால் குழந்தைக்கு தாய் பாலூட்டுவதால் அவள் உடல் பெரிதும நலமடைகிறது. இதுதவிர பிரசவம் ஏற்பட்டால் கர்ப்பபை சுருங்கிவிடுகிறது அல்லவா? பெரும்பாலும் அது நியதியான முறையில் சுருங்குவதில்லை. அப்படி சுருங்கிப் பழைய நிலையை அடைய பால் சேகரிப்பு பைகள் வேலைகள் செய்யவேண்டும்.

 தங்கள் மார்பு அழகு குன்றிவிடுமோ, உடல் வனப்பு மங்கிவிடுமோ என்று தவறாக கருதி, ஊறிவரும் அமுதத்தைத் தனக்குள் அமுக்கிவைத்தால் விளைவது நன்மை அல்ல, தீமைதான்.

மார்பகத்தின் பால் எப்படி உற்பத்தியாகிறது.

     அமுத கலசமான மார்பகங்களில் பைகளைப் போன்ற அமைப்புகள் இருக்கின்றன. அவற்றில் தான் பால் உற்பத்தியாகின்றது. அவற்றையெல் லாம் இணைக்கும் குழாய்கள் வழியாகப் பால் முகப்புக்கு வருகிறது. இரத்தத்தைப் பாலாக மாற்றும் இந்த பைகளுக்கு “ஆல்வியோலி” என்பது பெயர். பால் சேகரித்துக் கொண்டு வரும் குழாய் களுக்கு “மில்க் டக்ட்ஸ்” என்பது பெயர். ஒரு மார்பகத்திற்குள் 17 பால் உற்பத்தி பைகள் இருக்கின்றன.

     ஒவ்வொரு “ஆல்வியோலி”யிலும் ஆயிரக் கணக்கான நுண்ணிய தசைகள் இருக்கின்றன. இவற்றில்தான் இரத்தம், பால் துளியாக மாறிச் சேகரமாகிறது. இப்படிச் சேகரமாகும் பால், காம்பு முனைக்கு கொண்டு வரப்படுகிறது. அவசிய மானபோது திறந்து விடுவதற்கான வால்வுபோல, காம்புகள் தடுத்து நிறுத்திக் கொண்டு அழைப்புக் காக காத்திருக்கின்றன. கர்ப்ப காலத்தில்தான் மார்பகங்கள் பெருக்க தொடங்குகின்றன. கருப் பைக்குள் இருக்கும் குழந்தைக்கும் ஹார்மோன்கள் தொடர்பை ஏற்படுத்தினாலும் மார்பகங்களுக்கு, பால் குழாய்கள் பொங்க ஆரம்பிக்கும். மார்பகங்களின் மீது தோலடியில் உள்ள இரத்த நரம்புகள் கனத்துப் படரும தாதுப் பொருள்களைத் தாங்கிக்கொண்டு உற்பத்திக்கு தயாராகும். பெண் பிரசவித்ததும், அவளுடைய மார்பகங்களின் குமிழ் முனையி லிருந்து ஒருவித ஹார்மோன், பால் உற்பத்தி செய்யலாம் என்று கட்டளை பிறப்பிக்கிறது. உடனே பால் உற்பத்தி தொடங்குகிறது.

குறைபாடுடைய மார்பகங்களை எப்படி சரி செய்வது?

     பல பெண்கள் செழித்த மார்பகங்கள் அமைய மருந்து, மாத்திரைகள் உள்ளனவா என்று கேட்கிறார்கள். இருக்கத்தான் செய்கிறது. மார்பகங்கள் கொழுப்பு தசைகளால் ஆனவை என்பதால் நிறைய சத்துணவு சாப்பிட்டால் இயற்கையாகவே அவை பெரியதாக வாய்ப் பிருக்கிறது. ஒரு சில விசேஷ பயிற்சிகள் செய்தும் மார்பகங்களை பெரியதாக்கவோ, தொங்கிய மார்பகங்களை சரிசெய்யவோ முடியும்.

     ஹார்மோன் மருந்து மாத்திரைகளால் மார்பகங்களை பெரியதாக்க முடியும். ஆனால் அவை அளவுக்கு மீறி பெருத்துவிடும். வலி வரக்கூடும். சில பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்கிறார் கள். இந்த அறுவை சிகிச்சையின்போது மார்பகத்தின் அடிப்பகுதியில் திறப்பை உருவாக்கி, அதன் வழியாக சிலிக்கான் பையை செலுத்தி உள்ளே வைத்து தைத்துவிடுவார்கள். அதனால் மார்பகங்கள் தொய்வு இன்றியும், பெரியதாகவும் காணப்படும். ஆனால் குழந்தைக்கு பாலூட்ட முடியாது. மேலும் பல பின் விளைவுகளும் ஏற்படும்.

     இயற்கையாகவே மார்பகங்கள் பெரியதாக அமையப்பெற்ற பெண்கள் அதனால் பெரும் அவஸ்தைப் படுவதுண்டு. சிறியதாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கான மருந்துகள் ஹோமியோபதியில் உள்ளது.

ஹோமியோபதி மூலம் முழுநிவாரணம்

     மார்பகங்களை எடுப்பாகவும், அழகாகவும், திரட்சியாகவும் மாற்றுவதற்கு ஆபத்து இல்லாத சுலபமான நிச்சயமான பலன் கிடைக்கக் கூடிய ஒரே முறை ஹோமியோபதிதான். தற்போது ஹோமியோபதியில் பல மருந்து கம்பெனிகள் தயாரிப்பில் வெளிவரும் கிரீம்களும் கிடைக்கிறது.

     எப்படிப்பட்ட குறைபாடு கொண்டு மார்பகமாய் இருந்தாலும், அதை உன்னத நிலை அடைந்துள்ள இன்றைய ஹோமியோபதி மற்றும் மாற்று மருத்துவங்கள் சரிசெய்துவிட முடியும். அறுவை சிகிச்சையின்றி குணப்படுத்த அருமை யான ஹோமியோபதி மருந்துகள் உள்ளன.அருகிலுள்ள தகுதியும், அனுபவமும் உள்ள ஹோமியோபதி மருத்துவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.

எச்சரிக்கை - ஏமாற்றும் விளம்பரங்கள் :

     தற்போதைய நாட்களில் அனைத்து முன்னனி பத்திரிகை, புத்தகங்கள், இதழ்களிலும், எடுப்பான மார்பகம் வேண்டுமா? என பல்வேறு தலைப்புகளில் விளம்பரங்கள் வந்து கொண்டு இருக்கிறது. இவை அனைத்தும் வெளிமாநிலங் களை சார்ந்த நிறுவனங்கள் பெயர்கள், தொலைபேசி எண்கள் இருக்கும். தொடர்பு கொண்டால் உங்கள் முகவரியைப் பெற்றுக் கொண்டு, ஒருவாரத்தில் ஒரு பார்சல் வரும், அவர்கள் கூறிய தொகையை விட அதிக பணம் செலுத்தி பார்சலை வாங்கவேண்டும். அப்படி வாங்கி திறந்து பார்த்தால் உள்ளே ஒரு குப்பியில் ஏதோ ஒரு பவுடரும், டப்பாவில் ஏதோ ஒரு கிரீமும் இருக்கும். வேறு பலருக்கு மரப்பொடியும் வருகிறது. எனவே இந்த விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம்.

(மாற்று மருத்துவம் ஜனவரி 2012 இதழில் வெளியானது)

Pin It