உண்மை வரலாறுகளை திரித்து அதில் பொய்யான கருத்துகளை புகுத்துவதை வரலாற்றுப் புரட்டு என்று கூறுவர். இந்த வரலாற்றுப் புரட்டு களை தங்கள் பிரச்சாரப் பலத்தின் மூலம் மக்களை நம்ப வைத்து அதனை வரலாற்று ஏடுகளில் பதிய வைப்பதில் சங்பரிவாரத்தி னர் திறமை சாலிகள்.

இந்தியாவை அறுநூறு ஆண்டு காலம் ஆட்சி செய்தவர்கள் முஸ்லிம்கள். முஸ்லிம்களுடைய வரலாறுகளை, அடையாளங்களை இந்துத்துவா விற்கு சாதகமாக மாற்றுவது, அதனை அழிப்பது, அதன் மூலம் முஸ்லிம்களை மூன்றாந்தர குடிமக் களாக ஆக்குவது என்று கங்கணம் கட்டி சங்பரி வாரம் வேலை செய்து வருகிறது.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன் முதலில் போர்க்குரல் எழுப்பிய சுதந்திரப் போராட்டத் தைக் கூட சுதந்திரப் போராட்டமாக பதிவு செய் யாமல் சிப்பாய் கலகம் என்றுதான் கொச்சைப்ப டுத்தியுள்ளனர்.

பள்ளிப் பாடங்களில் ஆரியர்கள் பற்றிய பாடங்களை ஆரியர் வருகை என்றும், முஸ் லிம்களை பற்றிக் குறிப்பிடும்போது முஸ்லிம்கள் படையெடுப்பு என்றும் தலைப்பிடப்பட்டதிலி ருந்தே இவர்களுடைய மோசடிகளை புரிந்து கொள்ள முடியும்.

முகலாயர் ஆட்சிக் காலத்தில் அல்லாஹ் ஆபாத் என்று அழைக்கப்பட்ட நகரம் தற்போது சங்பரிவாரத்தின் சூழ்ச்சியால் அலகாபாத் என்று அழைக்கப்படுகிறது. அல்லாஹ் ஆபாத் நகரை வைத்து அடுத்த வரலாற்றுப் புரட்டுக்கும் சங்பரி வார் தயாராகி விட்டது.

அல்லாஹ் ஆபாத் நகரைப் பற்றி குறிப்பிடும் போது திரிவேணி சங்கமம் என்று குறிப்பிடுகிறார்கள். மூன்று நதிகள் கலக்கிற இடத்தைத்தான் சமஸ்கிருத மொழியில் திரிவேணி சங்கமம் என்று கூறுவார்கள். அல்லாஹ் ஆபாத் நகரில் கங்கை மற்றும் யமுனை ஆகிய இரண்டு நதிகள் மட்டுமே கலக்கின்றன. மூன்றாவது நதி எங்கே என்று கேட்டால் மூன்றாவதாக சரஸ்வதி நதி கலக்கிறது. அது பூமிக்கடியில் ஓடுகிறது என்று சொல்கிறார் கள்.

சங்பரிவாரத்தின் வார்த்தைகளுக்கு தாளம் போடுவதுபோல அந்த மாநில அரசு சரஸ்வதி நதியை தேடுவதற்காக கோடிக்கணக்கான ரூபாயை ஒதுக்கியுள்ளது.

பாபர் மஸ்ஜித் நிலை கூட இப்படித்தான் மாறிப் போயுள்ளது. முதலில் பாபர் மஸ்ஜித் வளாகத்தில் உள்ள ஒரு இடத்தை மட்டும் ராம் புத்ரா என்று உரிமை கோரினார்கள். பிறகு பெரி தினும் பெரிது கேள் என்று நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை. பாபர் மஸ்ஜித் சொற்பொழிவு மேடை இருக்கும் இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று கூறி மொத்த இடத்திற்கும் உரிமை கொண்டாடினார்கள்.

ஆதாரம் கேட்டால் மத நம்பிக்கைக்கு ஆதா ரம் தேவையில்லை என்று தத்துவம் பேசினார் கள். நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசாங் கமோ பயந்து பின் வாங்கியது. நீதி வழங்க வேண்டிய நீதிமன்றமோ வளைந்து தீர்ப்பு வழங் கியது. இன்று பத்திரிகைகள் அந்த இடத்தை ராம ஜென்ம பூமி என்று கூறுகின்றனவே தவிர பாபர் மஸ்ஜித் என்று மறந்தும் கூட எழுதுவதில்லை. வெற்றிகரமாக வரலாற்றுப் புரட்டு அரங்கேறி விட்டது.

அதே "நம்பிக்கை' என்ற வாதத்தை கூறி தமிழ் நாட்டிலும் சங்பரிவாரம் தனது வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது. அதன் காரணமாக 800 கோடி ரூபாய் செலவிடப்பட்ட தமிழகத்தின் வளர்ச்சித் திட்டத்தின் எதிர் காலமே காற்றில் ஆடிக் கொண்டிருக்கிறது.

வாஜ்பாய் சேது சமுத்திரத் திட்டத்திற்கு அனு மதி வழங்கியபோது யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நீரி என்கிற ஆராய்ச்சி நிறுவனம் அந்த கால்வாய் வெட்டும் பாதையை ஆய்வு செய்து அனுமதி வழங்கியபோதும் எந்த எதிர்ப்பும் இல்லை. ஏனென்றால் அப்போதெல் லாம் அந்த மணல் திட்டுக்கு ஆதம் பாலம் என்று தான் பெயர்.

இந்த திட்டத்திற்காக 800 கோடி ரூபாய் செல விட்ட பிறகு சங்பரிவாரங்கள் அந்த மணல் திட் டுதான் ராமர் பாலம், அதனை அகற்றக் கூடாது என்று கூக்குரலிட்டன. அதனை விமர்சித்த முன் னாள் முதல்வர் கருணாநிதியின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு பரிசு என்று அறிவிப்பு செய்தார் இந்துத்துவா சாமியார் வேதாந்தி. தமிழ கத்திற்கே வந்து சேது சமுத்திர திட்ட பொறியா ளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார் இந்துத் துவா பெண் சாமியார் உமா பாரதி. சட்டம் இவர் களுக்கு எதிராக ஒரு........................ பிடுங்கவில்லை.

மாறாக, சேது சமுத்திர திட்டப் பணிகள் நின்று போயின. மத்திய, மாநில அரசுகளும், அர சியல்வாதிகளும் தங்கள் நிலையிலிருந்து பின் வாங்க ஆரம்பித்தனர். திட்டத்தை நிறுத்தச் சொன்ன சங்பரிவாரங்கள் அதற்கு ஒருபடி மேலே போய் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கக் கோரி தங்கள் புரட்டு வேலையை ஆரம்பித்துள் ளனர்.

மத்திய காங்கிரஸ் அரசோ, “ராமர் சேதுப் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறி விக்கலாமா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து எதையும் தெரிவிக்க விரும்பவில்லை. சுப்ரீம் கோர்ட்டே இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி தனது கையாலா காததனத்தை வெளிக்காட்டியுள்ளது.

2001ம் ஆண்டு அ.தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அந்த மணல் திட்டை ஆதம் பாலம் என்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு சேது சமுத்திரத் திட்டம் தேவை என்றும் சொன்ன ஜெயலலிதா இப்போது சேது சமுத்திரத் திட்டத் திற்கு எதிராகவும் ராமர் பாலத்தை உடனடியாக தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்குமாறும் குரலெழுப்பி, தான் ஒரு பாப்பாத்திதான் என் பதை நிரூபித்துள்ளார்.

சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிர்ப்பு வந்த போது, “ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்?'' என்று கேள்வியெழுப்பிய பகுத்தறிவு பகலவன் (?!) கருணாநிதி பல்டியடித்து சேது சமுத்திரத் திட்டத்திற்கு சேது ராமன் திட்டம் என்று கூட பெயர் வைத்துக் கொள்ளுங்கள் என்று பின்வாங்கியது மட்டுமல்லாமல், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிவிட்டு அதை தேசிய சின்னம் என்று அறிவித்தால் என்ன ஆகி விடும் என்று கூறியதிலிருந்தே அவர் சங்பரிவாரத் திடம் சரணாகதியாகி விட்டார் என்றே தெரிகி றது.

மத்திய, மாநில அரசுகள் பின் வாங்கி விட்டன. அரசியல்வாதிகள் வாய் மூடி விட்டார்கள். நீதிமன்றம் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி என்கிற அளவுக்கு சூழ்நிலை மாறி விட் டது.

ஆதம் பாலம், ஆதம் மலை, ஆதம் பாதம் என்பவை குறித்து வழங்கப்படும் கதைகளில் வேண் டுமானால் இஸ்லாமிய இயக்கங் களுக்கு மாற்றுக் கருத்து இருக்க லாம். ஆனால் வரலாறு நெடுகி லும் அந்த மணல் திட்டு ஆதாம் பாலம் என்றே குறிப்பிடப்பட்டு வருவதை யாராலும் மறுக்க முடி யாது.

இந்துத்துவாவாதிகள் ராமர் பாலத்திற்கு ஆதாரமாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள படத்தை காட்டு கின்றனர். அந்தப் படத்தை வெளி யிட்டுள்ள நாசாவே அதனை ஆதம் பாலம் என்றே குறிப்பிடு கின்றது.

அப்படி இருந்தும் “இஸ்லாமிய பெயரை அழித்து இந்துத்து வாவின் தேசிய சின்னமாக மாற்றும் வரலாற்றுப் புரட்டுக்கு எதி ராக வாய் திறக்காமல் எல்லா இஸ்லாமிய இயக்கங்களும் மௌனமாக இருக்கின்றன.

அரசியல்வாதிகள் வேண்டுமா னால் தங்கள் சுயநலத்திற்காக, சுய லாபத்திற்காக ஆதம் பால த்தை ராமர் பாலமாக மாற்றும் வரலாற்றுப் புரட்டை ஏற்றுக் கொள்ளலாம்.

இந்துத்துவாவாதிகளுக்கு எதி ராக முஸ்லிம் இயக்கங்கள் குரல் கொடுக்க முன் வராததன் கார ணம் என்ன என்பதுதான் புரி யாத புதிராயிருக்கின்றது.

Pin It