பதினைந்து முதல் இருபத்தைந்து வயதிற்குள் சாதாரணமாக எலும்புகளின் வளர்ச்சி நின்று விடும் போது மனிதனின் வளர்ச்சியும் நின்றுவிடும்.
எலும்புகள் உயிர்வாழ் இழைமங்களால் ஆனவை. கண்ணக உறுப்புகள் (Calcium salts) நிறைந்த உயர்ந்த பொருளைக் கசியவிடும். தனிப்பட்ட உயிர்மங்கள் கலந்த கலவையால் ஆனவை. சலவைக்கல் போன்ற கடுமைத் தன்மை உடையது. எலும்பாக மாற்றிக் கெட்டிப்படுத்துவது (ossification), மிகச் சிக்கல் வாய்ந்தது. இது வழக்கமாகக் குருத்தெலும்பில் (cartilage gristle) தொடங்கும்.
குழந்தைக்கு, குருத்தெலும்பின் நடுவில் எலும்பு தோன்றி உருவாகி முனைகள நோக்கி விரியும். நுனிகளைத் தவிர மற்றவற்றை எல்லாம் எலும்பாக்கும். இந்தப் புள்ளிகளிலிருந்து எலும்பு நீளமாக வளரும்பொது குழந்தையும் வளர்ச்சியுறும். வளரும் பருவம் முடிந்ததும், எலும்பின் முனைகள் எலும்பின் மூலத்தண்டினைச் சேர்த்து வளர்ச்சியை முடிக்கும்.