Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தொடர்புடைய படைப்புகள்

ஒரு இனம் உலகெங்கும் உள்ள மொழியியல், தொன்மையியல் ஆராய்ச்சியாளர்களால் அந்த இனத்தின் மொழியாலேயே, அந்த மொழியின் தொன்மையாலேயே இனம் காணப்படுகிறது. சமஸ்கிருதம், ஹீப்ரூ உட்பட பல தொன்மையான மொழிகள் இன்று செத்த மொழிகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் உயிருடன், வீச்சுடன், செழுமையுடன் வாழும் மிகச்சில தொன்மையான மொழிகளுள் தமிழும் ஒன்று. அதனால் இந்தியர்களுக்கு, தமிழர்களுக்கு அதன் முக்கியத்துவமும் பெருமையும் தெரிகிறதோ இல்லையோ உலக அறிஞர்களும், பல வளர்ந்த நாடுகளும் தமிழுக்கான மரியாதையை, தமிழுக்கான முக்கியத்துவத்தை தங்கள் மொழி சார்ந்த நிகழ்ச்சிகளில் கொடுக்கின்றன, கொடுக்கிறார்கள்.

periyar_329தமிழில் இருந்து நீண்ட நெடுங்காலத்திற்கு முன் பிரிந்த தெலுங்காகட்டும், சில நூறு ஆண்டுகளுக்கு முன் பிரிந்த கன்னடமாகட்டும், வெகு சில ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மலையாளமாகட்டும் அனைத்தும் தமிழ் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவையே. ஆரியர்களைப் பொறுத்தவரை சிந்து சமவெளி நிலப்பரப்பில் இருந்த கறுப்பர்கள் யாவரும் திராவிடர்களே. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அவர்களின் வருகையின் போது தமிழ் இப்போது உள்ள வடிவத்தில் இல்லையென்றாலும் அது பல மொழிகளாக பிரிந்திருக்கவில்லையென்றும், ஒரே மொழியாகத்தான் இருந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும் ஆரியர்கள் தமிழர்களைக் குறிக்க பயன்படுத்திய இந்த 'திராவிட' எனும் சொல் தமிழ், பின் திரமிள என்பதில் இருந்து மருவிய சொல்லேயாதலால் அதனை சமஸ்கிருத சொல்லாக ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் திராவிட என்பதற்கு சமஸ்கிருதத்தில் வேறு எந்த அர்த்தமும் கிடையாது. அதனால் திராவிட என்பது தமிழர்களைக் குறிக்க பிரத்யேகமாக ஆரியர்களால் உபயோகிக்கப்பட்ட வார்த்தையே ஆகும். நாம் பெரும்பான்மையாக வாழ்ந்த நிலப்பரப்பையும் 'திராவிடர் நிலம்' என்றே வழங்கினார்கள். (ஆதாரம்: ரிக்வேத கால ஆரியர்கள் நூல். எழுதியவர்: ராகுல சாங்கிருத்தியாயன்)

திராவிட (தமிழ்) இனத்திற்கு எதிரானவர்கள், முக்கியமாக சமஸ்கிருதத்தை தங்கள் கடவுளர் மொழியாகக் கொண்டுள்ள இந்து மதவாதிகள் கூறும் இன்னொரு குற்றச்சாட்டு, கால்டுவெல் அடிப்படையில் ஒரு பாதிரியார் என்றும் அதனால் மதத்தை பரப்ப அவர் செய்த சதியே ஆரிய-திராவிட மொழிக்குடும்ப பிரிப்பு என்பதும் ஆகும்! சரி அப்படியே ஆகட்டும்! நாம் கால்டுவெல்லை கணக்கில் எடுத்துக்கொள்ளவே வேண்டாம். ஆங்கிலேய அரசின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் ICS (Indian Civil Service) அதிகாரியாக, இராமநாதபுரம், சென்னை உட்பட்ட இடங்களின் ஆட்சியாளராக பல ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றியவர் எல்லிஸ். திராவிட மொழிகளை இனங்கண்டதில், திராவிட மொழிகளின் தனித்துவத்தை கண்டறிந்ததில் இவரது பணி போற்றத்தக்கது. (இவர் பிற்காலத்தில் தன் பெயரை தமிழ் மேல் கொண்ட காதலால் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற வண்ணம் எல்லிஸன் என மாற்றிக்கொண்டார்.)

1804ல் வில்லியம் காரே என்ற அறிஞர் தமது சமஸ்கிருத இலக்கண நூலில் இந்தியாவில் பேசப்பட்ட அனைத்து மொழிகளுக்குமே வேர்-மொழி சமஸ்கிருதம் என்ற கருத்தை முன்வைத்த போது அதற்கு எல்லிஸ் தலைமையில் இயங்கிய சென்னைக் கல்விச் சங்கக் குழு ஆதாரங்களுடன் வன்மையாக எதிர்ப்பு தெரிவித்தது. பின் அக்கல்லூரியின் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த அலெக்ஸாண்டர் காம்பெலின் 'தெலுங்கு மொழி இலக்கணம்' என்னும் நூலுக்கான முன்னுரையில் திராவிட மொழிகளின் தனித்துவத்தையும், அவற்றுள் தமிழுக்கான முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டிருக்கிறார் எல்லிஸ். அதாவது கால்டுவெல்லுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே! கால்டுவெல் தன் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ஆராய்ச்சி நூல் மூலம் திராவிட மொழிக் குடும்பத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியிருந்தாலுமே கூட, அவருக்கு பல ஆண்டுகள் முன்பே எல்லிஸ் அந்த பணிகளை துவங்கிவிட்டார். முதன்முதலில் சமஸ்கிருதத்தில் இருந்து தென்னிந்திய மொழிகள் முற்றிலும் வேறுபட்டவை என்று பறைசாற்றியவர் எல்லிஸ். தாமஸ் ட்ரவுட்மேன் என்ற மொழியியல் ஆராய்ச்சியாளர் தன் 'திராவிடச் சான்று' புத்தகத்தில் ஆதாரங்களுடன் இவற்றை எடுத்துவைத்திருக்கிறார். அதனால் எல்லிஸ் ஆரம்பித்த, செய்த பணிகளை முழுமைப்படுத்திய கால்டுவெல்லை பற்றிய மதம் சார்ந்த குற்றச்சாட்டுக்களை நாம் கருத்தில் கொள்ளவே தேவையில்லை.

அடுத்து, ஏன் மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் தங்களை திராவிடர்கள் என அழைத்துக்கொள்வதில்லை என்று கேட்கப்படுகிறது. திராவிடம் என்ற சொல்லில் (superior or root language) வேர்மொழி தமிழ் தான் என்று அனைத்து ஆராய்ச்சிகளும், அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒருமித்த குரலில் தெரிவிக்கும் போது 'திராவிடம்' என்ற சொல்லாடலை அவர்கள் பயன்படுத்தினால் தமிழர்க்கு கீழ் அவர்கள் என்ற தோற்றம் ஏற்படும் தானே! அதாவது இந்துக்களில் பார்ப்பனர்களுக்கு கீழ் மற்ற சாதியினர் என்பதைப் போல! அதனால் தான் அவர்கள் அதை உபயோகிப்பதில்லை. இந்த ஏற்றத்தாழ்வு சாதியைப் போல கட்டுக்கதைகளாலும், புராணங்களாலும் வரையறுக்கப்பட்டதல்ல. தமிழின் தொன்மையால் நம் இனத்திற்குக் கிடைத்த பேறு. இந்தப் பேறை நாம் ஒதுக்கலாமா? திராவிடம் எனச் சொல்வது அனைத்து திராவிட மொழிகளுக்கும் நம் மொழியான 'தமிழ்' தாயாக இருந்தது என்பதாகத் தான் அர்த்தப்படுமேயொழிய, நம் மொழிக்கு உயர்வுதானேயொழிய எந்த வகையிலும் சிறுமை இல்லை. திராவிடன், திராவிடம் என்ற சொற்பதங்களை நாம் புறக்கணித்தோமானால் நாளை இந்தப் பெருமையும், உண்மையும், நம் தொன்மையும் மறைக்கப்படலாம், மறந்து போகலாம், காணாமல் போகலாம்!

திராவிடம் என்பதற்கான இலக்கணம் இப்போது திரிந்து சீர்க் கெட்டுக் கிடக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. இப்போது திராவிடம் என்பதை வெறும் அரசியல் கட்சிகளாக பலர் அடையாளம் காண்கின்றனர். திராவிடக் கட்சிகளைப் பிடிக்காதவர்கள் திராவிடக் கொள்கைகளை, திராவிட கருத்தாக்கத்தை பிடிக்காததது போல் நடந்துகொள்வது அறியாமையே! உதாரணத்திற்கு இன்றைய தமிழ்த் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் நாளை தப்பு செய்தால், அந்தத் தலைவர்களை திட்டுவார்களா? தமிழ்த் தேசியக் கொள்கையை திட்டுவார்களா என்பதே என் ஐயம்!

மேலும் மதராஸ் மாகாணமாக இருந்தபோது திராவிட நாடு என்பது ஒட்டுமொத்த தென்னிந்திய திராவிட நிலப்பரப்பையும் குறிப்பதாய் இருந்தது. உறவுச் சிக்கல் ஏற்பட்டு உணர்வு ரீதியாக பிற மொழியினருடன் இயைந்து வாழமுடியாது என்ற நிலை ஏற்பட்டு நிகழ்ந்த மாநிலப் பிரிவுக்குப் பின், பெரியார் காலத்திலேயே தமிழ்நாடு தமிழர்க்கே, திராவிடநாடு தமிழர்க்கே என்ற முழக்கங்கள் எழத்துவங்கி விட்டன. விடுதலை நாளிதழிலேயும் அப்படியான முழக்கங்களே வெளிவந்தன. இன்றும் பெரியார் திடலில் அந்த முழக்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

இதையெல்லாம் திராவிட இயக்கங்கள் முன்வைத்த திராவிடநாடு என்பது தமிழ்நாடே என நிரூபிக்க மிகப்பெரிய வரலாற்றுச் சம்பவம் ஒன்று உண்டு. இந்தியா முழுவதையும் சில பெரிய மாநிலங்களாகப் பிரித்தால் மாநிலங்கள் பலம் வாய்ந்ததாக இருக்கும் என்ற கருத்து மேற்குவங்காள முதல்வர் பி.சி.ராயால் முன்மொழியப்பட்டது. அதாவது தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவற்றை ஒன்றாக தட்சிணப்பிரதேசம் என்ற மிகப்பெரிய மாநிலமாக அறிவிக்கலாம் என்றும் அதை தட்சிணப்பிரதேசம் என்றும் குறிப்பிடலாம் என்றும்! இதுகுறித்த தீர்மானம் 1956ல் அமிர்தசரஸீல் பி.சி.ராயால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நேருவின் அமைச்சரவை இது குறித்து முதல்வர்களிடம் கருத்து கேட்டபோது காமராசர் முதலில் ஒப்புக்கொண்டார். பின் பெரியார் அவசரமாக காமராசருக்கு ஒரு தந்தி அடித்து இதற்கு ஒப்புக்கொண்டால் தமிழ்நாட்டில் தமிழர்களின் முக்கியத்துவம் குறைந்து, பிறமொழியினரின் ஆதிக்கம் வந்து எல்லா துறையிலும் தமிழர்கள் ஓரங்கட்டப்படுவார்கள் என அறிவுரை வழங்கினார். இதையேற்ற காமராசர் தன் ஒப்புதலில் பின்வாங்கினார். (அண்ணாவும் இந்த தட்சிணப்பிரதேச திட்டத்தை ஏற்கவில்லை) அதன்பின் பல முதல்வர்களுக்கு விருப்பமில்லாததால் நேருவால் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதாவது இன்றைக்கு தமிழ்த் தேசியவாதிகள் தூற்றும் திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார், தான் விரும்பிய திராவிட நாட்டில், தான் முன்வைத்த திராவிட நாட்டில் உணர்வில் வேறுபட்ட மலையாளிகளையோ, கன்னடரையோ, தெலுங்கரையோ ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. மேலும் திராவிட இயக்கங்கள் முன்மொழிந்த திராவிட நாடானது தனித்தமிழ்நாடே என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?

திராவிட இயக்கங்கள், கட்சிகள் வலுப்பெற்று இருக்கும் இந்த 50 ஆண்டுகளில் தமிழகம் ஏராளமாக வளர்ச்சி கண்டிருக்கிறது என்பதுயும், பிற வடமாநிலங்களை விட தொழிலிலும், உட்கட்டமைப்பிலும் பலபடிகள் முன்னே இருக்கிறது என்பதும் நிதர்சனம். இந்தியாவின் பிற மாநிலங்களுக்குச் சென்றவர்களுக்கு இந்த உண்மை புரியும்.

அதே நேரத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் சமஸ்கிருதத்தின் பாதிப்பு பெரிய அளவில் இன்று இருக்கிறது. (அம்மொழிகள் தமிழ் பெரு அளவிலும், சமஸ்கிருதம் பின்னாளில் சிறு அளவில் கலந்து உருவான மொழிகள் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.) தமிழில் கூட சுமார் 40 அல்லது 50 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட பத்திரங்களாகட்டும், அச்சிடப்பட்ட செய்தித்தாள்களாகட்டும் பெருமளவில் சமஸ்கிருதம் கலந்திருந்தது. படிப்படியாக அதை நீக்கி தமிழின் தனித்தன்மையை மீட்டெடுத்ததும் திராவிட இயக்கங்களே! (சிறு தகவல்: எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை அரசாணையாக்கி எல்லா பத்திரிக்கைகளுக்கும் அனுப்பியபோது அதை ஏற்காத ஒரே பத்திரிக்கை துக்ளக்! இன்றும் அந்தப் பத்திரிக்கையில் வேறு எந்த ஊடகத்திலும் இல்லாத அளவிற்கு வடமொழி வார்த்தைகள் சரளமாக உபயோகப்படுத்தப்படுவதைப் பார்க்கலாம்.)

தமிழ்த் தேசிய முழக்கம் திராவிடக் கொள்கைக்குள் அடங்குமேயொழிய அது தனியொரு கொள்கை ஆகாது! இன்று புதிதாய் முளைத்துள்ள சில தலைவர்கள் தங்கள் சுயலாபத்துக்காக திராவிடக்கொள்கையை தமிழர்களுக்கு எதிரி போல் திரிக்கிறார்கள். தமிழை, தமிழுக்கு எதிரியாய் திரித்தல் எவ்வளவு ஆபத்தோ, அறிவீனமோ அதைப் போல, சாதிய அடக்குமுறைக்கு எதிராக திராவிட இயக்கங்களால் நிறுவப்பட்ட 'திராவிடக் கொள்கை' - அம்பேத்கர் சொன்னதைப் போல, என்.எஸ்.கிருஷ்ணன் பாடியதைப் போல - "கருப்பு சிவப்பு என்ற பேதத்தை நீக்கும்.. பள்ளு பறையரோடு கள்ளர் மறவரென உள்ள பேதங்களை ஒழித்துக்கட்டும்" என்ற கொள்கை கொண்டதால் தற்கால சாதிய உணர்வோடு செயல்படும் தமிழ்த் தேசியவாதிகளுக்கு உவர்ப்பாக இருக்கிறது என்பதே உண்மை!

சமீபத்தில் முளைத்த ஒரு தமிழ்த் தேசியக் கட்சி - தனது கொள்கையாக - தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத யாரையும் தான் முன்வைக்கும் தமிழ்த் தேசியத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்று பல மேடைகளில் அறிவித்திருக்கிறது. இதன்படி தமிழர்களின் அழிவிற்காக அயராமல் பாடுபடும் சுப்பிரமணியஸ்வாமியும், தமிழ் எழுத்து சீர் பெறுவதைக் கூட விரும்பாத சோவும் தமிழர்கள் ஆவார்கள்; தமிழகத்தை ஆள்வதற்கு தகுதியுடைவர்கள் ஆவார்கள். ஆனால் காலம் காலமாக தமிழகத்தில் ரத்தம் சிந்தி உழைக்கும் தெலுங்கு பேசும் அருந்ததியர் போன்ற ஆதிதிராவிடர்கள் தமிழர்கள் ஆகமாட்டார்கள்! அவர்களை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்! இவர்கள் 'திராவிடர்கள்' என்று எதிர்ப்பது யாரைத் தெரிகிறதா? இதுபோன்ற கொள்கையுடைய போலி தமிழ்த்தேசியவாதிகள் தான் சாதியத்துக்கு எதிராக இருக்கும் திராவிடத்தின் மீது சேற்றையள்ளி இறைக்கிறார்கள்; பெரியாரைத் திட்டுகிறார்கள்; அம்பேத்கரைத் தூற்றுகிறார்கள்; வரலாறு அறியாமல் பிதற்றுகிறார்கள். பல ஆண்டுகாலம் தமிழருக்காக, தமிழர் நலனுக்காக உழைப்பவர்களைக் கூட, உலகத் தமிழர்கள் போற்றும் தலைவர்களைக் கூட அவர்களின் சாதி அடையாளத்தை மனதில் கொண்டு, நன்றி மறந்து "நீ யார்?" என்கிறார்கள்!

மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். சாதி-மத பேதமற்ற தமிழ்நாடு தமிழருக்கே என்பதே திராவிடக் கொள்கை. திராவிடம் என்பது என்ன எனப் புரிந்தால்தான் தமிழ்த் தேசியத்தின் உண்மையான முகம் புரியும். தமிழ்த் தேசியம் என்பது திராவிடக் கொள்கையேயொழிய புதியதொரு கொள்கை அல்ல! எதிரியை விட்டுவிட்டு சுயநலத்தின் பொருட்டு வளர்த்துவிட்டவர்களின் மார்பில் பாய்கிறவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு சாதி மத பேதமற்ற தமிழ்ச் சமுதாயம் படைப்போம்.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 iniyan elango 2012-04-23 15:20
மிகச் சிறப்பான கட்டுரை. பெரியார் பயன்படுத்திய "திராவிட" என்ற சொல்லாடலின் கருத்தியலை புரிந்து கொள்ளாமல் உளரும் "தமிழ்த் தேசியவாதிகளின்" வாயடைக்கும்படிய ான நல்ல பதில். "திராவிடர்" என்ற சொல் பார்ப்பனர் அல்லாத தமிழரை குறிக்கும் சொல்லே என்பதையும், பெரியாரின் திராவிட நாடு கோரிக்கை என்பது தமிழ் நாட்டில் வாழும் பார்ப்பனர் அல்லாத அனைத்து பிற்படுத்தப்பட் ட - தாழ்த்தப்பட்ட - மதச் சிறுபான்மை மக்களை உள்ளடக்கிய தனித் தமிழ் நாடு கோரிக்கையே என்பதையும், பெரியாரின் திராவிட நாடு கோரிக்கையில் - கருநாடகமோ - கேரளமோ - ஆந்திராவோ இல்லை என்பதையும், தனித் தமிழ் நாட்டையே திராவிட நாடு என்று பெரியார் அழைத்தார் என்பதையும் சிறப்பாக பதிவு செய்யும் கட்டுரை.
Report to administrator
0 #2 Vairamuthu 2012-04-23 15:22
திராவிடத்தை கொச்சைப்படுத்து வதன் மூலம் ஏறி வந்த ஏணியை எட்டி உதிக்கும் எத்தர்களுக்கு இப்பதிவு சரியான சவுக்கடி...
Report to administrator
0 #3 jegan 2012-04-23 15:51
மிகச்சிறப்பான கட்டுரை, வாழ்க
Report to administrator
0 #4 Kaarunyan, Palladam 2012-04-23 22:58
நன்று. மிக நன்று. நம் தமிழ்னாட்டில் மட்டும் திரவிடம் கெட்டவார்த்தை, சோக்களுக்கும் சுவாமிகளுக்கும் அரசியல் வியாபாரம், திருட்டு வளம் கொழுத்தவர்களுக் கு பணம் பண்ணும் களம், குடும்பத்துக்கா கவும் கும்பலுக்காகவும ் அரசியல் செய்வொருக்கு வோட்டு வங்கி ஆனால் உண்மையான திரவிடர்களுக்கு போராடும் போர் களம்.தாழ்ந்தவனு க்கு தாஙகும் சக்தி அதிகம்.
Report to administrator
+1 #5 கார்த்தி 2012-04-24 15:16
//சிந்து சமவெளி நிலப்பரப்பில் இருந்த கறுப்பர்கள் யாவரும் திராவிடர்களே.//

முற்றிலும் தவறாக புரிந்து கொள்ளபட்ட கருத்து ஆரிய-திராவிட போர்.... ஆரியன் என்ற சொல் உயர்ந்த நிலப்பகுதியில் அதாவது வட இந்திய பகுதியில் வாழும் மக்களை குறிக்கும்..திர ாவிட என்றால் தாழ்ந்த நிலப்பகுதி, தென் இந்தியாவில் வாழ்ந்த மக்களை குறிக்கும்.

மேலும் ஆரிய படையெடுப்பில் பொதுவாக சொல்லப்படும் கருத்து ஆரியர்கள் படையெடுத்து வந்து சிந்து சமவெளி மக்களை அடித்து விரட்டி, வேதங்களை புகுத்தி மக்களை அடிமைப்படுத்தின ர் என்பது.

ஒரே ஒரு கேள்வி..
வேதங்களை இங்கு ஆரியர்கள் புகுத்தினர், அவ்வாறெனில் பழம் இந்தியாவில் பாய்ந்த சரஸ்வதி நதியை பற்றிய குறிப்பு எவ்வாறு அவர்களுக்கு தெரிந்திருக்கும்??

ஆசிரியர் விளக்குவாரா??
Report to administrator
0 #6 டான் அசோக் 2012-04-24 23:14
வேதங்களை இங்கு ஆரியர்கள் புகுத்தினர், அவ்வாறெனில் பழம் இந்தியாவில் பாய்ந்த சரஸ்வதி நதியை பற்றிய குறிப்பு எவ்வாறு அவர்களுக்கு தெரிந்திருக்கும ்?? ஆசிரியர் விளக்குவாரா?? //

ஆரியர்கள் வந்தது என்ன கிபி 1990லா? என்ன விதமான கேள்வி இது!
Report to administrator
0 #7 த.முத்துகிருஷ்ணன் 2012-04-25 14:57
அருமையான தேவையான கட்டுரை
Report to administrator
0 #8 கார்த்தி 2012-04-25 15:11
அதைத்தான் தான் அண்ணே நானும் கேட்கிறேன்..ஆரி ய படையெடுப்பு சிந்து சமவெளி நாகரீகத்தின் போது நடந்தது என்பது உங்கள் கருத்து..அதாவது 3000 ஆண்டுகளுக்கு முன்பு..ஆனால் வேதங்களின் பழைமையோ 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. கால இடைவெளி இவ்வாறு இருக்க எப்படி ஆரியர்களுக்கு சரஸ்வதி நதியை பற்றி எப்படி தெரிந்தது??
Report to administrator
0 #9 டான் அசோக் 2012-04-25 19:11
அதாவது 3000 ஆண்டுகளுக்கு முன்பு..ஆனால் வேதங்களின் பழைமையோ 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. //

இதற்கான ஆதாரம் எங்கிருக்கிறது? முதலில் ஆரியர்களுக்குள் பல குழுக்களும், சண்டைகளும் நடந்தது உங்களுக்கு தெரியுமா? வேதங்கள் என்பன ஒருவரால் ஒரே நேரத்தில் இயற்றப்பட்டதல்ல ! வேதங்களை அவர்கள் கையோடே இங்கே கொண்டும் வரவில்லை. அவர்கள் ஆடு-மாடு மேய்ப்பர்கள். சமவெளி நாகரீகத்தில் இருந்த புல்வெளிதான் அவர்களின் நோக்கம். பின் பல ஆண்டுகள் மாற்றத்திற்கு பின் தான் நாடோடிகள் என்ற முகத்தில் இருந்து குருக்கள் என்ற முகத்திற்கு அவர்கள் மாறியது நிகழ்ந்தது! இந்நிலையில் வேதங்கள் 5000 வருடம் பழமை என்பதெல்லாம் பச்சை பொய்!:-)
Report to administrator
0 #10 Rajkumar 2012-04-26 15:00
என்ன வேண்டுமென்றாலும ் எழுதலாம் என்ற சூழல் உருவாகிவிட்டது. திராவிடம் தமிழாம். திருவிடம் என்ற நாடு இருந்ததாகவும் அங்கு வாழ்ந்த மக்கள் தமிழர்கள் என்றும் சொல்லப்படுகிறது . அல்லது தமிழர்கள் வாழ்ந்த நிலப்பரப்பு திருவிடம் என்று அழைக்கப்பட்டதாக வும் சொல்லப்படுகிறது . அப்படியே திராவிடம் தமிழ் என்று வைத்து கொண்டாலும் முதலில் தமிழ்நாட்டில் வாழும் தமிழர் அல்லாதோரை வெளியேற்றி விட்டு சொல்லுங்கள் திராவிடம் தமிழ் தான் என்று, ஏற்றுகொள்கிறோம் . பிற மொழி மக்களை பாதுகாக்க திராவிட என்ற சொல்லை பயன் படுத்தாதீர்கள். பெரியாரே திராவிட இயக்கத்துக்கு மண்ணாங்கட்டி என்று கூட பெயர் வைப்பேன் என்று தான் சொன்னார்.
Report to administrator
0 #11 கார்த்தி 2012-04-26 15:00
தங்கள் பார்வைக்கு

http://www.raceandhistory.com/cgi-bin/forum/webbbs_config.pl/read/1040

http://www.scribd.com/doc/8323739/Invasion-That-Never-Was#download

http://madhavipanthal.blogspot.in/p/tamizhkadavul.html

மேலும் சில கேள்விகள்

தமிழிலக்கண நூலான "தொல்காப்பியத்த ில்"நான்மறை" என்ற சொல் வருகிறது. இது எதனை குறிக்கிறது என்பதை விளக்குவீர்களா?


தொல்காப்பியம் - புறத்திணையியல்ல ில்

"பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும்" என்ற வாக்கியம் வருகிறது. இதில் பிண்டம் கொடுக்கும் வழக்கத்தை வேதங்களில் விளக்கப்பட்டுள் ளது. பின் எவ்வாறு தொல்காப்பியத்தி ல் பிண்டத்தை பற்றி வந்தது?
Report to administrator
+1 #12 naren 2012-04-26 15:05
"மேலும் ஆரியர்கள் தமிழர்களைக் குறிக்க பயன்படுத்திய இந்த 'திராவிட' எனும் சொல் தமிழ், பின் திரமிள என்பதில் இருந்து மருவிய சொல்லேயாதலால் அதனை சமஸ்கிருத சொல்லாக ஏற்றுக் கொள்ள முடியாது."

---

நீங்கள் ஏற்று கொண்டாலும் ஏற்று கொள்ளா விட்டாலும் "திராவிட" என்பது சம்ஸ்கிருத சொல்தான் . இந்த தமிழ்-திரமிள-தி ராவிட ஆச்சு என்பதற்கு எல்லாம் தமிழ் இலக்கியத்தில் ஆதாரம் கிடையாது.

தமிழ் இலக்கியத்தில் இருந்தால் தான் ஒரு சொல் தமிழ் சொல். வேற்று மொழி இலக்கியத்தில் திரமிள -> திராவிட என்று மருவி இருந்தால் அது வேற்று மொழி சொல்தான் . விட்டா ஆங்கிலேயன் அவன் வாயிலே நுழையலே-நு வெச்ச triplicane, tinnevelly எல்லாம் தமிழ் சொல்-நு சொல்வீங்க போல.

வட நாட்டினர் இப்பவும் தென்னிந்தியரை "மதராசி"-நு கூப்பிடறாங்க... அதனாலே நாம எல்லாரும் "மதராசி" இனத்தை சார்ந்தவங்க-நு நாளைக்கு சொல்வீங்க போல.

பி-கு : உங்களுக்கு எதிர் கருத்துன்றதால facebook-il என் கமெண்டை நீக்கி விட்ட மாதிரி இங்க நீக்க மாட்டீங்க-நு நினைக்கிறேன்.
It is childish to think that deleting comments are going to delete FACTS and TRUTHS.
Report to administrator
0 #13 நரேந்திரன் 2012-04-27 15:16
//"மேலும் ஆரியர்கள் தமிழர்களைக் குறிக்க பயன்படுத்திய இந்த 'திராவிட' எனும் சொல் தமிழ், பின் திரமிள என்பதில் இருந்து மருவிய சொல்லேயாதலால் அதனை சமஸ்கிருத சொல்லாக ஏற்றுக் கொள்ள முடியாது." --- நீங்கள் ஏற்று கொண்டாலும் ஏற்று கொள்ளா விட்டாலும் "திராவிட" என்பது சம்ஸ்கிருத சொல்தான் . இந்த தமிழ்-திரமிள-தி ராவிட ஆச்சு என்பதற்கு எல்லாம் தமிழ் இலக்கியத்தில் ஆதாரம் கிடையாது//

தமிழ்-திரமிள-தி ராவிட என்று மறுவியதென்பதை சொல்லியல் அறிஞர் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தம் ஆய்வுகளில் சான்றுகளுடன் நிறுவியுள்ளனர்.

//ஆங்கிலேயன் அவன் வாயிலே நுழையலே-நு வெச்ச ட்ரிப்லிசனெ, டின்னெவெல்ல்ய் எல்லாம் தமிழ் சொல்

// English என்பதற்கே தமிழ்தான் மூலம்.முனைவர் அரசேந்திரனின் ஆய்வு
சுட்டி:http://www.youtube.com/watch?v=9uoKxJWv12U
Report to administrator
0 #14 டான் அசோக் 2012-04-27 20:15
சும்மா நசநசனு சொன்னதையே சொல்லிட்டிருக்க ாதீங்கய்யா! பொய்யை திருப்பிதிருப்ப ி சொன்னா உண்மை ஆயிருமா? ஷெர்வானி போட்டா நீங்கள்லாம் பஜன்லால் சேட்டா? கீழ இருப்பத படிங்கய்யா! என்ன ஆயிரம் ஆதாரம் கொடுத்தாலும் சும்மா நான் புடிச்ச முயலுக்கு மூணு காலுனு......ஆந்திர மாநிலத்தில் கடந்த முப்பது வருடங்களாக வசித்து வரும் சிறந்த தமிழ் பற்றாளர் ,ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுவதில் வல்லவரான முனைவர் எஸ் செல்லப்பா இந்திய ஆட்சி பணி அவர்களின் கருத்துகள் உங்கள் அனைவரின் பார்வைக்கு

A BRIEF NOTE ON THE WORD ‘DRAVIDIAN’

Dr.S.Chellappa,
Principal Secretary,
Department of Culture,
Govt. of Andhra Pradesh

A few years ago I made an in-depth study of certain root words in Tamil language. One of the words is ‘Dravidian’.

I could not publish that work due to my administrative pre-occupations . Traditionally Tamil scholars is of the view that this term “Dravidian” is of Sanskrit Origin.

They consider that the term Dravidian is derived from the word “Dramilam”.

If that be so, what, then, is the root of Dramilam?

This led me to ponder over the root word for ‘Dravidian’. Thereafter I started reading a few original Telugu works systematically and also considered the speaking language of the Andhras.

‘Aravam’, ‘Tamilamu’ and ‘Dravida Basha’ are the three words used by the Andhras to refer to Tamil language. Aravamu is used in the sense well-defined. ‘Dravida Basha’ is used only to connote to Tamil language. It was Robert Caldwell who extended the linguistic area of ‘Dravidian’ to include Malayalam, Kannadam, Telugu, Tulu, Brahmi etc. Otherwise, the Telugus used the term Dravidam to mean only Tamil language.

for example, Sri Krishna Devaraya, belonging to 15th Century A.D. wrote the great literary work “Amuktamalyada” in Telugu, uses the word “Dravida Kutumbi” (I:64) to refer to Tamil families Gurram Joshuva, another very renowned poet of 20th Century uses the term “Dravidia in his famous poem “Gabbilam” to refer to Tamil only. Similarly P.Gopal reddy who did elaborate study on the Geo-physical concept of village names also uses the term Dravida basha to refer to Tamil. At present, I am translating Gabbilam into Tamil language. Joshuva uses “Dravida Bhumi” to refer to the Tamil land.

My curiosity did not stop here. Is there any connection between Dravida and Tamil? After so much research, I came to the conclusion that Dravidam and Tamilam mean one and the same. Or Dravidam perhaps is a Telugu derivative of Tamilam and it is not of Sanskrit origin, as some Tamil scholars think.

Now we shall split the word Tamil into three parts: Tatmizh. In certain Telugu words ‘ta’ becomes “tra”.
1. Thadu > Thradu (rope)
2. Thova > Throva (way)
Hence the ‘ta’ in Tamil becomes “tra”, which in turn becomes “Dra”, which is quite common in Telugu language.
In Telugu language ‘ma’ becomes ‘va’ in certain words.
1. Mamidi > Mavidi (mango)
2. mama > mava (uncle)
3. bhumi > bhuvi (earth)
Hence the ‘mi’ in Tamil becomes ‘vi’ in Telugu.
Similarly Tamil ‘Zha’ becomes ‘da’ in Telugu language. This is an accepted linguistic rule.
Example:
1) Chozha > Choda (The Cholas)
2) Kozhi > Kodi (a hen)
3) Pazh > padu (waste, useless)
4) Keezh > Keedu (harm)
5) Appozhudu > Appudu (then)
6)Ippozhudu > Ippudu (now)
To conclude, the term Dravidian is purely a Telugu word to refer to Tamil language only. This is in vogue even to-day amongst Telugu scholars. As mentioned earlier, it was Robert Caldwell, who expanded the scope of the term Dravidian to include other southern languages in a linguistic sense. There is another sound reason for Caldwell to use the term “Dravidian” to connote other Southern languages of India. For Tamil was the only language among Southern languages with a long history of literature, grammar and originality of its own.
Report to administrator
0 #15 naren 2012-04-27 23:12
***தமிழ்-திரமிள -திராவிட என்று மறுவியதென்பதை சொல்லியல் அறிஞர் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தம் ஆய்வுகளில் சான்றுகளுடன் நிறுவியுள்ளனர்.*****

தமிழ் மொழியிலே திரமிளம் , திராவிடம் நுலாம் சொல் கிடையாது.

அப்படி இருந்தா எங்க இருந்தது (எந்த தமிழ் இலக்கியத்தில் இருந்தது) -நு சொல்லுங்க. சும்மா அவர் சொன்னார், இவர் சொன்னாருன்னு சொன்னா நம்பிட முடியாது. நாளைக்கே இன்னொருத்தர் திராவிடம் தான் தமிழ்னு , தமிழ் தான் திராவிடம்-நு அசோகர் சொன்னாரு-நு கூட சொல்லுவாங்க.

கூடவே english-ke தமிழ் தான் மூலம்-நு சொன்னீங்க பாருங்க. எங்கேயோ போயிட்டீங்க.
Report to administrator
0 #16 Naren 2012-04-30 15:48
ஆயிரம் ஆதாரமா?.. ஹி.ஹி

இப்ப நீங்க கொடுத்ததும் 'திராவிடம்' தமிழ் சொல் இல்ல- தெலுங்கு'நு தான் சொல்லுது. திராவிடத்த சொல்லி தெலுங்கர் / மலையாளி / கன்னடர் எல்லாம் தமிழர் தலையிலே மிளகாய் அரைக்கிறாங்க. தையும்நம்பறதுக் கு நாலு பேர் இருப்பான்.

அதுவும் உண்மை கிடையாது. திராவிடம் என்பது சம்ஸ்கிருத சொல் தான். அது தமிழ்-நா தமிழ் இலக்கியத்தில் இருந்து ஆதாரம் காட்டுங்களேன். அதை விட்டு எங்க மாமா சொன்னாரு, சித்தப்பா சொன்னாரு-நு கதைய அள்ளி விடுங்க. அதுக்கு எதிரா கமெண்டு போட்டா அதையும் நீக்கிட்டு ஜால்ரா தட்டுறவங்க கூட ஜமாய்ங்க..
Report to administrator
0 #17 க.அருணபாரதி 2012-04-30 15:49
கட்டுரையாளர் குறிப்பிடுவதைப் போல், ஆரியப் பார்ப்பன வெறிப் பிடித்த சு.சுவாமி, சோ உள்ளிட்ட பார்ப்பனர்கள் எவ்வளவு தான் கூறிக்கொண்டாலும ் அவர்கள், தமிழ் இனத்திற்குள் வரமாட்டார்கள். அவர்கள் ஆரியர்கள் என்பது வெளிப்படையானது.

எக்காலத்திலும், ஆரியத்திற்கு எதிர் தமிழ் தானே தவிர திராவிடம் அல்லவே அல்ல. கடந்த அரை நூற்றாண்டுகளாக "தமிழர்" என்ற இன அடையாளமே தமிழகத்தில் மறக்கடிக்கப்பட் டு, 'திராவிடர்' என்ற போலி அடையாளம் புகுத்தப்பட்டதா லும், இத்திராவிடக் கருத்தியலை ஏற்றுக் கொண்ட கட்சிகள் இந்தியத் தேசியத்தின் இளைய பங்காளிகளாகவும் , ஆரிய சேவகர்களாகவும் வலம் வந்ததால் தான் தமிழகத்தில் 'திராவிடம்' என்ற கருத்தியலுக்கு முடிவு வர வேண்டுமென விவாதங்கள் கிளம்புகின்றன.

இதனை உணர்ந்து கொள்ளாமல், 'திராவிடத்தை' ஞாயப்படுத்துவதை மட்டுமே தொழிலாகக் கொண்டுள்ளனர் 'திராவிடப்' பற்றாளர்கள்..!

அதே போல, வீட்டிற்குள் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளை வாய்மொழியாக பேசிக் கொண்டும், தமிழர் என்ற உளவியலில் வாழ்ந்து கொண்டும் உள்ளவர்களை தமிழர்களாகவே கருத வேண்டும்.

ஒரு தேசிய இனத்தின் தாயகத்திற்கு ஒரு மாநிலம் என்ற பொது வரையறையின்படி, 1956ஆம் ஆண்டு இந்திய அரசால் மொழி வாரியாக மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பின்னர், தமிழகத்தில் குடியேறியவர்களை தான் “வெளியாராக” கருத வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வரையறுத்துள்ளது .

அதனால் தான், தமிழகத்தில் குடியேறிக் கொண்டு, தமிழர்களின் தொழில் வணிகங்களில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் மார்வாடி - குசராத்தி சேட்டுகள், மலையாளிகள், தெலுங்கர்களையும ், வேலை வாய்ப்பால் ஆதிக்கம் செலுத்தும் வகையில் உள்ள வடநாட்டவர்களையு ம் தமிழகத்திலிருந் து வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோருகிறது.

தோழமையுடன்,
க.அருணபாரதி்
Report to administrator
0 #18 அகரமதி 2012-04-30 23:19
சாதியத்துக்கு எதிராக இருக்கும் திராவிடத்தின் மீது சேற்றையள்ளி இறைக்கிறார்கள்; பெரியாரைத் திட்டுகிறார்கள் ; அம்பேத்கரைத் தூற்றுகிறார்கள் ; வரலாறு அறியாமல் பிதற்றுகிறார்கள ்.

சாதியத்திற்கு எதிராக இருக்கும் திராவிடத்தில் யாரும் சேற்றை அள்ளி இறைக்கவில்லை. சாதியைத்திரட்டி சாதிக்கொரு சீட்டு தரும் 'திராவிட கட்சி' களைத்தான் உன்மையான தமிழ் தேசியவாதிகள் எதிர்க்கிறார்கள ். பெரியார் கற்றுத்தந்த பகுத்தறிவை மொட்டை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் நீங்கள் தான் பகுத்தறிவாளர்களா..

பெரியாரைத் திட்டுகிறார்கள் ; அம்பேத்கரைத் தூற்றுகிறார்கள் ; வரலாறு அறியாமல் பிதற்றுகிறார்கள ். என்பதெல்லாம் திராவிட "கட்சி" களுக்கு (களப்பணியாற்றும ் திராவிட இயக்கத்திற்கு அல்ல) சொம்பு தூக்கிகளின் திரிபு வாதம். மக்களை சிந்திக்கவிடாமல ் செய்யும் ஆரியக்கூட்டத்தோ டு சேர்க்கப்பட வேண்டும் இந்த சொம்பு தூக்கிகளை.
Report to administrator
0 #19 கார்த்தி 2012-05-02 15:55
// சும்மா நசநசனு சொன்னதையே சொல்லிட்டிருக்க ாதீங்கய்யா! பொய்யை திருப்பிதிருப்ப ி சொன்னா உண்மை ஆயிருமா? ஷெர்வானி போட்டா நீங்கள்லாம் பஜன்லால் சேட்டா? கீழ இருப்பத படிங்கய்யா! என்ன ஆயிரம் ஆதாரம் கொடுத்தாலும் சும்மா நான் புடிச்ச முயலுக்கு மூணு காலுனு...... //

நீங்களும் திராவிட மாயை கருத்தை பல காலமா சொல்லிட்டுவர்றீ ங்க.. உங்களுக்கும் மேற்சொன்னது பொருந்தும்..

ஆரியர்களால் திராவிடர்கள் விரட்டப்பட்டார் கள் என்றால், இலக்கியச் செழுமையுள்ள தமிழில், ஒரு புலவன் கூட இந்த விரட்டிப்யடிப்ப ை பற்றி பாடவில்லையா?


இலக்கியங்கள்,தம ிழ் மன்னர்களின் வீரத்தை போற்றுகின்றன..அ வ்வாறு இருக்க ஆரியர்களால் திராவிடர்கள் தோற்கடிக்கபட்டா ர்கள் என்ற கருத்து சந்தேகத்திற்குரியது.


திராவிடர்கள் நினைவில் கொஞ்சம்கூட விரட்டியடிக்கப் பட நிகழ்வு இருக்காதா? செவி வழி செய்தி, கவிதைகளில் கூட அவற்றை பதியவில்லையே ஏன்?


மத்திய ஆசியாவிலிருந்து வந்ததாக கூறப்படும் ஆரியர்களின் ஜீனும், சிந்து சமவெளியில் வாழ்ந்ததாக கூறப்படும் திராவிடர்களின் ஜீனும் ஒன்றே என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ும் தாங்கள் திராவிட மாயை கருத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதேன்?


மேலும் யான் முன்னர் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் தாங்கள் பதில் தரவில்லை..


தொல்காப்பியத்தி ல்"நான்மறை" என்ற சொல் வருகிறது. இது எதனை குறிக்கிறது என்பதை விளக்குவீர்களா?


தொல்காப்பியம் - புறத்திணையியல்ல ில் "பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும்" என்ற வாக்கியம் வருகிறது. இதில் பிண்டம் கொடுக்கும் வழக்கத்தை வேதங்களில் விளக்கப்பட்டுள் ளது. பின் எவ்வாறு தொல்காப்பியத்தி ல் பிண்டத்தை பற்றி வந்தது?


காத்திருக்கிறேன ்...
Report to administrator
0 #20 அருள் 2012-05-04 16:07
//மத்திய ஆசியாவிலிருந்து வந்ததாக கூறப்படும் ஆரியர்களின் ஜீனும், சிந்து சமவெளியில் வாழ்ந்ததாக கூறப்படும் திராவிடர்களின் ஜீனும் ஒன்றே என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ும்// - இதன் உசாத்துணை என்னவென்று தாங்கள் உரைத்தால் நலம்.

தாங்கள் எண்ணுவது போல் பிண்டம் கொடுப்பது என்பது முன்னோர்களுக்கு ச் செய்யப்படும் வழிபாடு மட்டுமல்ல. அது பூசையின் போது பலியாகப் படைக்கப்படும் உணவு, காக்கைக்கு இடப்படுகின்றது - அவ்வளவுதான். இச்சுட்டி தங்களுக்குத் தெளிவை வழங்கலாம்.
http://www.tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=21&song_no=281

தென்புலத்தார் (முன்னோர்) வழிபாடு என்பது தமிழிலக்கியங்கள ில் தங்களுக்குக் காணக்கிடைக்கும் . தென்புலத்தார் என்பது குமரிக்கண்ட முன்னோரைக் குறிப்பதாகப் பலரும் உணர்த்தியிருக்க ின்றார்கள்.
Report to administrator
0 #21 கார்த்தி 2012-05-04 19:45
அருள், தங்களின் பார்வைக்கு

1) http://articles.timesofindia.indiatimes.com/2009-09-25/india/28107253_1_incidence-of-genetic-diseases-indians-tribes

2) http://www.dnaindia.com/india/report_new-research-debunks-aryan-invasion-theory_1623744

3) http://dspace.utlib.ee/dspace/bitstream/handle/10062/567/karmin.pdf

4) http://en.wikipedia.org/wiki/Haplogroup_R_(mtDNA)
Report to administrator
0 #22 கடலூர் சித்தன்.ஆர் 2012-05-14 16:24
ஆங்கிலம் தாய்மொழியாக கொண்டவர்களை விட,வேறு மொழியை தாய்மொழியாக கொண்ட- ஆங்கிலம் பேசுவோர்களின் எண்ணிக்கை உலகில் மிக அதிகமாகி உள்ளது; ஆங்கிலேயரின் வாழ்க்கைதரம் குறையவில்லை. தமிழகத்தில்,அதே நிலை தமிழ் மொழிக்கும் உருவாகியுள்ளது. ஆனால் தமிழரின் வாழ்க்கைத் தரம் பரிதாபமாக உள்ளது;

பிற மொழிகளை தாய்மொழியாக கொண்ட, தமிழகத்தில் வாழும் மக்களின் வளர்ச்சி பிரம்மாண்டமாக உள்ளது.தமிழரின் வாழ்க்கைத் தரம் பரிதாபமாக உள்ளது; இந்நிலை இந்திய ஒருமைப்பாட்டுக் கு/நமக்கு நல்லதல்ல. ஆகவே திறமையான தமிழ் வழிகாட்டிகள் தமிழகத்திற்கு உடனடியாகத் தேவை.”

தமிழர்கள் நம்முடன் வாழும் அணைத்து மொழி பேசுபவர்களையும் நல்லபடியாக தான் பார்க்கிறோம். இல்லாவிடில் 234 எம்.எல்.ஏ. மற்றும் மந்திரிகளில் 20% அண்டைமாநில மொழியை பேசுபவர்கள் சென்ற முறை பதவி வகித்திருக்க முடியுமா? அண்டைமாநிலங்களி ல் நம்மால் இப்படி நினைத்து பார்க்க முடியுமா?

“யாதும் ஊரே யாவரும் கேளீர்”- என்று வாழ்ந்த தமிழர்கள் தமிழகத்தில் மைனாரிட்டி தகுதியில் வரும் நாள் துலைவில் இல்லை. கணக்கெடுக்க தயாரா திராவிடம் பேசுவோர்???

காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு “- நம் வீட்டுக்குழந்தை யை விட பக்கத்துக்கு குழந்தை அழகாக இருந்தால், பக்கத்து வீட்டு குழந்தையையா கொஞ்சுகிறோம்?

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று புரிய மறுக்கிறார்களே? ?? சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம். வாழ்க வாடிய பயிரைக் கண்டு மனம் வாடிய, வள்ளலார் பிறந்த தமிழ் நாடு.
Report to administrator
0 #23 கடலூர் சித்தன்.ஆர் 2012-05-14 16:25
”தமிழர்களுக்கு என்று தனி அமைப்புகள், தமிழ்த் திரைப்பட துறையில் மட்டும் இல்லை”:திரைப்பட இயக்குநர்கள் .;

தெலுங்கருக்கு – நைனா, அம்மா; மலையாலத்தவருக்க ு -அச்சன், அம்மா; கன்னடத்தவருக்கு – தந்தே, தாயி; தமிழருக்கு – பொது அப்பா, அம்மா; என்ன ஞாயம் இது????

திராவிடம், திராவிடம் என்று ஏமாந்ததைச் சொல்லுகிறோம்.;

ஹி ஹி..ஹி . இப்படியாகத்தானே எல்லா துறைகளிலும், தொலைக்காட்சியில ும், தமிழ்த்திரையுலக ிலும் தமிழர்களின் மனதை கொள்ளை கொண்டு அருஞ் சேவை புரிந்து வருகிறோம். எல்லாம் அவன் செயல். வேறொன்றும் அறியோம் - பராபரமே!!!
Report to administrator
0 #24 கடலூர் சித்தன்.ஆர் 2012-05-14 16:28
வாழ்க- யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று வாழ்ந்து கெட்ட தமிழகம்”

“1979 எம்.ஜி.ஆர் – அச்சுதமேனன் ஒப்பந்தத்துக்கு முன்பு வரை 48 அடி நீர் தமிழகம் வசம் இருந்தது. அது மூன்றில் ஒரு பங்காக்கப்பட்டத ு. அணைப் பாதுகாப்பு, நம் காவல் துறையிடமிருந்து கேரள காவல் துறைக்குப் பிடுங்கித் தரப்பட்டது. அணையில் படகு விடும் உரிமை பறி போனது. மீன் பிடிக்கும் உரிமையும் போயிற்று. அணை வரையிலான சாலையும் பிடுங்கப்பட்டது . அணை தமிழகத்துக்குச் சொந்தமென்றாலும் அணைக்குச் செல்ல, பொறியாளர்கள் உட்பட எல்லாரும் கேரள அரசின் அனுமதி பெற வேண்டும். இவையெதுவும் 1979க்கு முன்னர் இல்லாதவை. கடைசியாக இப்போது அணையையே பறிக்க விரும்புகிறது. அணையின் பாதுகாப்பு மட்டும்தான் அசல் கவலையென்றால் புது அணையை தமிழகமே கட்டட்டுமென்றல் லவா சொல்ல வேண்டும்? தான் கட்டித் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புவதாக ஏன் சொல்ல
வேண்டும்?”

இது தான் நம் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். மலையாளிகளுக்கு பெற்றுத் தந்த மண்ணின் பாச உணர்வு; அதன் பரிசாக மலையாள சகோதரர்கள் நமக்கு காட்டும் விசுவாசம்./. நம்பிக்கைத் துரோகம்..????

தமிழா மண்ணின் மீதும் உனது மக்கள் மீதும் ஞாய உணர்வு கொள்!
Report to administrator
0 #25 கடலூர் சித்தன்.ஆர் 2012-05-14 16:29
தமிழன்!!!

திருக்குறள், பொங்கல் விழா,தமிழர் பெருமை, தமிழ் உணர்வு, தமிழில் குழந்தைகளுக்கு பெயரிடுதல், சாதனை புரிந்த பச்சை தமிழர் – இவைகளைப்பற்றி பேசினால் ஆர்வம் காண்பிக்காதது மட்டுமல்லாமல் கிண்டலடிக்கும் மக்களும்/ வீட்டில் தமிழ் பேசாத அணைத்து தமிழ் மக்களும்- தமிழர்கள் அல்லர்…

தமிழ் நண்பர்களே!!!கொஞ ்சம் சிந்திப்போமா- நாய்ப் புத்தி என்றால் என்ன என்று ??? தெருவில் வரும் பன்றி, எருமை,கழுதை …பல விலங்குகளை தெருவில் போக அனுமதிக்குமாம். ஆனால் தன் இனமான வேறொரு நாய் வந்தால், தெரு எல்லை வரை துரத்தி அடித்த பின்னர் தான், நிம்மதி பெறுமாம்.

நாலாயிரம் குறைந்த சம்பளம் பெற்ற செவிலியர்கள், பன்னிரண்டாயிரம் பெற்றதின் இரகசியம் என்ன???முதலில் ஒருவன் தைரியமாக சிந்தித்தல்- பின்னர் ஒற்றுமையுடன் போராடல்.

ஆகையால் சாதி, மத, இன பேதமில்லா அணைத்து தமிழ் மக்களும்- நாம் தமிழர் என்று ஒன்றுபடுதல் -காலத்தின் அவசியம்.

வீட்டிலும், வெளியிலும், கனவிலும் நனவிலும், எம்மொழியை பேசுகிறார்களோ அம்மொழியைச் சேர்த்தவர்களே அவர்கள்- என்று சொல்லித் தெரிய வேண்டுமோ???

ஏன் நம்மை பத்து பதினைந்து சதவிகிதம் கூட இல்லாத மக்கள் தொடர்ந்து ஆள முடிந்தது / எதிர்கட்சியாக உட்கார முடிகிறது???

தமிழா, இனவுணர்வு கொள்! தமிழா, தமிழனாக இரு!!

ஹி..ஹி..ஹி ..நம்ம தான் காது குத்து/மஞ்சள் நீர்/ வளைய காப்பு/ பத்திரிகையில் நம்ம பெயர் இடம் மாறியிருந்தாலோ / அல்லது விடுபட்டிருந்தா லோ – திராவிட பகுத்தறிவை பயன் படுத்தி உபயோகமுள்ள உறவுகளை எதிரிகளாக்கும் கலையை வளர்த்து வருகிறோமே???
Report to administrator
+1 #26 கடலூர் சித்தன்.ஆர் 2012-05-14 16:33
"திமுக - அதிமுக இணையாதது ஏன்? கருணாநிதி"
இன்னும் எத்தனை வருடங்கள்- மொழியாலும் சாதியாலும் -மனதளவில் இணைந்து விட்ட திராவிடத்தை இணைக்கும் பேச்சு??? தமிழர்களை ஒன்றிணைக்கும் செயல் பற்றி பேசும் செந்தமித் கட்டுமரத் தலைவரே??? பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர் புண்ணியம் இன்றி விலங்குகள் போல்.. ஹிஹும்..ஹிஹும் ஹிஹும்....... நித்தியானந்தர் கையில் உள்ள ஆதீனம் மொட்டையையும், பட்டையையும் சேர்க்க/ இணைக்க முடியாததற்கு காரணம் சொல்கிறது. கேளுங்கள்! கேளுங்கள்! பூமியில் மானிட ஜென்மம் அடைந்துவிட்ட- செந்தமிழ்க் கட்டுமரத் திராவிடத்தலைவர் சொல்வதை கேட்டுக் கொண்டே இருங்கள்.
Report to administrator
0 #27 thamizhinian 2012-09-05 09:28
dravidam thamizh illai thamizh illakiayathil ullathai than nambuvom ena silar koorukindranar. Eelavar engira malayala samugam(saathi) ullathu Eelam endru thamizhil thamizh ilayakiyathil engavathu atharam irunthal tharavum. eelam enbathu thamizh illai enbatharkaka thamizheela poratathai atharikkamal irukka mudiyuma? 1956 ikku piraku chennaiyil kudiyeriyavarka lai veliyetrinal thamizhanin thalainagarm azhagai irukkum. avanavan ooril avanavan vazhga ithuthan saathiyam.
Report to administrator
0 #28 நேமிநாதன் 2012-09-16 20:51
தம்பி அசோக் ஹிப்ரு ஒரு செத்துப்போன மொழி என உங்களுக்கு யார் சொன்னது? அது ஒரு மீட்டெடுக்கப்பட ்ட மொழி.

யூதர்களின் மொழி உணர்வையும் அது சார்ந்த அவர்களது போராட்டங்களையும ். அவர்கள் அவர்களது மொழியை எவ்வாறு பாதுகாத்தார்கள் என்பதையும். ஹிப்ரு மொழியின் இலக்கணத்துக்கும ் பேச்சு வழக்குக்கும் உள்ள அபூர்வ ஒற்றுமைகளையும் அதற்கான காரணங்களையும், மொழியை பாதுகாக்க புனிதத்துவம் என்ற கருத்தியலை எவ்வாறு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தினார் கள் அதை எப்படி வத்திக்கன் வரையும் கொண்டு சென்றார்கள் என்பதையும் தேடிப்படியுங்கள ்.

இன்னுமொரு தகவல் ஹிப்ரு மொழிக்கும் தமிழுக்கும் கூட தொடர்புகள் உள்ளன. அதையும் தேடிப்படியுங்கள ்.
Report to administrator
0 #29 stephen 2017-03-26 13:52
so,ariyargal vantathuku apram dravidam endra varthai vanthathu envathai yetru kolringa...apo ariyargal varuvathargu mun antha nilathil vazhntha makkaluku tamilargal endra oru peyarai thavira vera peyar irunthiruka vaipillai...ith aithan nangal solkirom..50000 varusama nam tamilargal...ar iyargal vantha piragu nam dravidargal...
Report to administrator
0 #30 maruthi c 2017-05-28 21:39
Thraavidam endra sollai kevalapaduthi irupaathu thraavida katchigale.. Thraavida atchiyil matha state kaaran thamizl naata naasam panni vachirukkaan.. Thamizlargal anthra,kerala,k arnataka state kaaranaal thodarnthu vanchikka padukraargal..a thai valaravittathu thraavida katchigali aalum thamizlargal illatha vantherigalinaa l mattume..
Report to administrator

Add comment


Security code
Refresh