அவசரத்தேவை
வேறு
வழியேயில்லை.

தேடிச் சென்ற
நண்பன்
நாசூக்காய்
கைவிரிக்க..

உறவுகள்
உதட்டைப்
பிதுக்க..

பழகிய சில
இடங்களில்
'
பழைய பாக்கியே
இன்னும்..' என
இழுக்க..

ஏதோ ஒரு
பேருந்தில்
ஏறி அமர்ந்தேன்.

நல்லவேளையாய்
காசு இருந்தது
டிக்கெட்டுக்கு.

நெஞ்சு வெடித்து
விடக் கூடாதென
அஞ்சு வரி
அதன் பின்னே
நுணுக்கி எழுதி
'
அவமானம்' எனத்
தலைப்பிட்டேன்.

அழகாய் வந்திருக்க
ஆறியது சற்றே
மனசு..
கைமாத்தாகக்
கவிதையாவது
கிடைத்ததே என்று.

-
ராமலக்ஷ்மி, பெங்களூர்

Pin It