நம்பிக்கை வைத்து
நெம்புகோல் எடுத்து
நடப்போம் வாருங்கள்
நாம் நடந்தால் தேர் நடக்கும்
இன்றேல் வெயில் மழையில் கிடக்கும்

- திசை குழம்பித் திகைத்து நிற்கும் இன்றைய தமிழ் வாழ்வின் திசைவழியைத் தீர்மானிக்கும் தெளிவும் வெளிச்சமும் கொண்ட மார்க்சி°ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநில மாநாடு தியாகத்தால் சுடரும் நாகை மண்ணில் கம்பீரமாக நடைபெற்றது. பிப்ரவரி 22 முதல் 25 வரை நான்கு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் 600க்கு மேற்பட்ட பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் பங்கேற்றுத் தமிழகம் இன்று சந்திக்கும் சகல பிரச்னைகளையும் பற்றி ஆழமாக வும் விரிவாகவும் விவாதித்தனர். 

markisiyam_370மனந்திறந்த விவாதங்கள் விமர்சனம் சுயவிமர் சனம் என்கிற அடிப்படையில் நடைபெற்று அசலான ஜனநாயகத்தின் அர்த்தமுள்ள அடை யாளமாக இம்மாநாடு நடைபெற்றது. அரங்கிற் குள்ளே கூர்மையான விவாதங்கள் நடைபெற்றுக் கொண் டிருக்க வெளியே மக்களுக்குக் கல்வி தரும் வண்ணம் அமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றுக் கண்காட்சி கம்யூனிஸ்ட்டு களின் வீரஞ் செறிந்த தியாக வரலாற்றை வண்ணமிகு வர்த்தை களாலும் மனங்களை அசைக்கும் பேசும் சித்திரங் களாலும் மக்களோடு உரையாடல் நடத்திக் கொண்டிருந்தது.

முப்பதுக்கு மேற்பட்ட தீர்மானங்களின் வடிவில் தமிழகப் பிரச்னைகளின்பால் இம் மாநாடு கொண்ட அக்கறையும் இம்மாநாடு வடித்தெடுத்த முழக்கங்களும் வெளிப்பட்டன. ஜனநாயக முறைப்படி வரும் மூன்றாண்டு களுக்கான 82 பேர் கொண்ட மாநிலக்குழுவும் 15 பேர் கொண்ட செயற்குழுவும் தேர்வு செய்யப் பட்டது. தோழர் ஜி.இராமகிருஷ்ணன் மீண்டும் மாநிலச் செயலாளராக ஏகமனதாகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். எல்லோருக்கும் செம்மலர் தன் புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

மாநாட்டில் எல்லோரையும் நெகிழ வைத்த நிகழ்வுகளாக மூத்த தோழர்களுக்குப் பாராட்டுச் செய்த நிகழ்வும் தியாகிகளின் குடும்பத்தாரை கௌரவித்த நிகழ்வும் அமைந்தன. திருவாரூர் மாவட்டத்தில் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் நாவலன் அவர்களின் தாய் தந்தையரும் அவருடைய துணைவியாரும் மேடை யில் நின்ற அக்காட்சி பார்த்தவர் நெஞ்சிவிட்டு என்றும் அகலாத காட்சியாகும். கண்களில் கண்ணீர் வழிந்து நிற்க முடியாத சோகத்தில் தோழர் நாவலனின் தந்தையாரும் நாவலனின் துணைவியாரும் தோழர் பிராகாஷ் காரத்தின் தோள்களில் சாய்ந்து நின்றபோதும் இருவரும் தம் வலது கரத்தை முஷ்டி மடக்கி உறுதியுடன் உயர்த்திய போதும் அந்த அசைவு ஆயிரம் சேதிகளைச் சொல்லாமல் சொல்லியது.

மாநாடே தன்னெழுச்சி யாக எழுந்து நின்று “எங்கள் தோழர் நாவலனின் தியாகம் என்றும் வீண்போகாது” என்று முழக்க மிட்டபோது அந்த முழக்கம் கண்ணீரைக் கனன் றெழும் ஆவேசமாக மாற்றிய கம்பீரமான இசை யாகக் காற்றில் வெப்பத்தைப் பரப்பி நின்றது. இறுதி நாளில் மேடைக்கு வந்தது நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளயத்தில் சமூக விரோதி களால் கொல்லப்பட்ட தோழர் வேலுச்சாமியின் குடும்பம். அவருடைய துணைவியார் அவர் கொல்லப்படுவதற்கு முன்பே அவரைப்பிரிந்து சென்று விட்டதால் தோழர் வேலுச்சாமியின் மூன்று குழந்தைகளும் தாரணி(12வயது), ரேணுகா(9), வினோத்(7)) தாயும் தகப்பனு மில்லாத குழந்தைகளாகி நிற்கின்றனர்.

மாநாட்டு மேடைக்கு வினோத் மட்டும் தோழர் வேலுச்சாமி யின் சகோதரரால் அழைத்து வரப்பட்டார். மாநாட்டுத் தலைமைக்குழுவின் சார்பாக அறிவிப்புச் செய்ய மைக் முன் வந்த தோழர் பி.சண் முகம் குரல் உடைந்து கரைந்து  நிற்க, தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அந்தச் சிறுவனைத் தூக்கித் தன் தோள்களில் இறுக அணைத்துக்கொண்டு அப்படியே நிற்க,  தோழர் பிரகாஷ் காரத் அச்சிறு வனுக்குப் பொன்னாடை போர்த்தினார். நடக்கிற இந்த நிகழ்வுகளைப் பற்றியோ நடந்துவிட்ட கொடுமை பற்றியோ ஏதும் அறியா அச்சிறுவன் வினோத் எல்லோரையும் பார்த்து வெட்கம் கலந்த சிரிப்போடு நின்ற கோலம் மாநாட்டில் பல தோழர்களை வெடித்து அழச்செய்தது. கோஷங் களால் மண்டபம் சுயநினைவு பெற்றது.

கட்சியின் சென்ற மாநில மாநாட்டுக்குப் பிறகு கட்சித்தோழர்களான எழுத்தாளர்கள் தோழர் மேலாண்மை பொன்னுச்சாமியும் தோழர் சு.வெங் கடேசனும் மத்திய அரசின் சாகித்ய அகாதமி விருது பெற்றதை மாநாடு பெருமையுடன் கொண்டாடி அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தது.

markisiam_1_370நிறைவுநாள் பேரணியும் பொதுக்கூட்டமும் தமிழக மக்களுக்கு அழுத்தமான செய்தியைச் சொல்லுவதாக அமைந்தது. உலகமயத்துக்கு அடி பணிவதைத்தவிர வேறு வழியில்லை என்கிற முத லாளித்துவப் புரட்டுகளுக்கு மறுப்பாக  உறுதி யுடன் அடிவைத்து முன்னேறி நாங்கள் வரு கிறோம் என்கிற செய்தி அது. மார்க்சியம் ஒன்றே  இன்றைய உலகத்தின் நோய்களுக்கெல்லாம் மாமருந்து என்கிற முழக்கத்தை முன்வைத்த பேரணி அது. சாதியமைப்பை வேரோடு சாய்க்க வல்ல சக்தி இதுதான் இதுதான் என்று வலுவான குரலில் உலகுக்கு உரைத்திட்ட பேரணி அது.

தோழர்கள் ஏ.வி.முருகையன், வி.மாரிமுத்து, நாகை மாலி தலைமையிலான வரவேற்புக் குழு வினர் சிரித்த மனங்களோடும் பெருமித முகங்க ளோடும் எல்லாப் பணிகளையும் செய்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்தித்தந்தனர்.

தோழர் பிரகாஷ் காரத், எ°.ராமச்சந்திரன் பிள்ளை, பிருந்தா காரத், கே.வரதராஜன், பி.வி.ராக வலு ஆகிய ஐந்து அரசியல் தலைமைக் குழு  உறுப் பினர்கள் முழுமையாக இம்மாநாட்டில் பங்கேற்ற தும், விடுதலைப் போராட்ட வீரர்கள் தோழர்கள் உமாநாத்தும் என்.சங்கரய்யாவும் முழுமை யாகத் தோழர்களோடு ஒன்றி நின்றதும் மாநாட்டுக்கு மேலும் புத்துணர்ச்சியும் விசையும் தருவதாக அமைந்தது.

- சதன்

Pin It