Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.


கொலை - தேவதைகளின் குலத்தொழில்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

 

உனக்குப் பிடிக்காத வரிகளை

கவிதையிலிருந்து நானே அடித்து விடுவேன்

யாரைக் கொண்டு அடிக்க

உனக்குப் பிடிக்காத என்னை.

o

சாகத் துணிந்தவன்

கோழை கவிஞனென‌

சட்டை பிடிக்கிறான்

நண்பனொருவன்.

என் உயிர் உருவ

இன்னொருத்திக்கு உரிமை இருக்கும் பொழுது

என் உயிர் உருவி எறிய

எனக்கு உரிமையில்லையா என்ன.

o

புன்னகைகளால் கொன்றாய்

வார்த்தைகளால் கொன்றாய்

மெளனங்களால் கொல்கிறாய்

கொலை தேவதைகளின் குலத்தொழிலா?

o

நினைவுகள் பறக்கும் தேநீருடன்

உதடுகள் சுடும்

எதிரில் இல்லாத

உனது பெயர்

o

உன் பார்வை படாத இடத்தில்

இந்த கவிதைகள் எழுதி வைப்பதன்

காரணம் கேட்கிறாள்

நம்மைத் தெரிந்த தோழி ஒருத்தி

என் பார்வை போதாதா

இவைகளை உனக்குச் சொல்ல.

- லதாமகன்

 

Bookmark and Share

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும். வெளியாகும் படைப்புகளில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அந்தந்த ஆசிரியரின் சொந்தக் கருத்துக்களே!
Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
தமிழ் (ammaa=அம்மா) English
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

அதிகம் பேர் படித்தது

Keetru RSS Feed

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற:

சமூகம் - இலக்கியம்

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Google chrome, Windows 2000/XP