Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

 

கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 1, 2 உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்காது, ஜனநாயக, மனித உரிமை மரபுகளை மீறி கட்டப்படுகின்றன. 1, 2 உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களோடு பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. 1, 2 உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய ரசிய விஞ்ஞானிகளின் ஆதங்கங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை (site Evaluation Study) மக்களுக்கு தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (Safety Analysis Report) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. இப்படி மக்களுக்கு எந்தத் தகவலும் தராமல், உண்மைகளைச் சொல்லாமல், ஜனநாயக மரபுகளை மீறி நிறைவேற்றப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. 
 
kudankulam_323தமிழ்நாடு அரசின் அரசாணை எண். 828 (29.4.1991 – பொதுப்பணித்துறை) அணுமின் நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரத்திற்குள் அணுமின் கட்டிடங்களைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது என்றும், 2 முதல் 5 கி.மீ சுற்றளவிலான பகுதி நுண்ம ஒழிப்பு செய்யப்பட்ட பகுதியாக (Sterilization Zone) இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது. வீடுகளோ, மனிதர்களோ இருக்கக்கூடாது என்பதை நேரடியாகக் குறிப்பிடாமல், திசை திருப்பும் வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் உண்மைநிலை என்ன என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை.

 i) AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி 5 கி.மீ. சுற்றளவுக்குள் 20,000 பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. அணுமின் நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரத்திற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் 20,000 மக்களும், இடிந்தகரை கிராமத்தில் 12,000 மக்களும், காசா நகரில் 450 குடும்பங்களும் வசிக்கிறார்கள்.

ii) 10 கி.மீ சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்த பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள்.

iii) 30 கி.மீ சுற்றளவுக்குள் 1,00,000-க்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் 2,00,000 மக்கள் வாழும் நாகர்கோவில் நகரம் 28 கி.மீ தூரத்திற்குள் இருக்கிறது.

iv) 20 கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ, சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று AERB சொன்னாலும் உலக பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி 15 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.

இப்படி கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 30 கி.மீ சுற்றளவுக்குள் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் எங்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, எங்களுக்கு தேவையான இருப்பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ கற்பனையில் கூட நடக்காத காரியம். 2004 டிசம்பர் சுனாமியில் மத்திய மாநில அரசினர் கொண்டிருந்த பேரிடர் மேலாண்மையை நாடே அறியும்.
 
அணுஉலைக் கட்டிடங்களின், குழாய்களின் மோசமான தரம், கட்டிடம் கட்டியதை உடைத்து மீண்டும் கட்டுவதான திருவிளையாடல்கள், உள்ளூர் காண்டிராக்டர்களின் கைங்கரியங்கள், ரசியாவில் இருந்து தாறுமாறாகவும் தலைகீழாகவும் வந்த உதிரிபாகங்கள், நிர்வாக குழப்பங்கள், குளறுபடிகள் என அடிவயிற்றை புரட்டிப் போடும் தகவல்கள், அனுதினமும் வந்து கொண்டே இருக்கின்றன. 26.9.2006 அன்று அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வருகை தந்தார். அணுசக்தித் துறை உயர் அதிகாரிகளோடு அவர் நின்று கொண்டிருந்த போது கூரையில் இருந்து ஊழியர் ஒருவர் ஓரிரு அடி தூரத்தில் பொத்தென்று விழுந்து அனைவரையும் கதி கலங்கச் செய்தார். குடியரசுத் தலைவர் வந்தபோதே இந்த நிலை என்றால், குடிமக்களுக்கு என்ன நிலை?
 
உலைகளை குளிர்விக்கும் சூடான கதிர்வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பு அகற்றி ஆலைகளில் இருந்து வெளிவரும் உப்பு, சேறு, ரசாயனங்களையும் கடலில் கொட்டி, ஊட்டச்சத்து மிகுந்த கடல் உணவையும் நச்சாக்கப் போகிறோம். உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மீனவர்களின் விவசாயிகளின் வாழ்வுரிமையும், வாழ்வாதார உரிமைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும். விபத்துக்களோ, விபரீதங்களோ நடக்கவில்லை என்றாலும் அணு உலைகளில் இருந்து அனுதினமும் வெளியாகும் கதிர்வீச்சு நச்சுப் பொருள்களை உண்டு, பருகி, சுவாசித்து, தொட்டு அணு அணுவாய் சிதைந்து போவோம்.
 
பேரிடர்கள் வராது, நடக்காது, என்று தரப்படும் வெற்று வாக்குறுதிகளை ஏற்க முடியாது. 2003 பிப்ரவரி 9ம் தேதி இரவு 9.45 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ஒரு மெலிதான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2006 மார்ச் 19ம் தேதி மாலை 6.50 மணிக்கு கூடங்குளத்தை சுற்றியுள்ள கன்னன்குளம், அஞ்சுகிராமம், அழகப்புரம், மயிலாடி, சுவாமிதோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. வீடுகளின் சுவர்களிலும், கூரைகளிலும் கீறல்களும், விரிசல்களும் தோன்றின. இரண்டு நாட்கள் கழித்து மார்ச் 21ம் தேதி கரூர் மாவட்டத்தில் அதிகாலை 1.30 மணிக்கும், 5.00 மணிக்கும் நில அதிர்வுகள் உண்டாகின. 2011 ஆகத்து முதல் வாரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நிலநடுக்கம் நடந்திருக்கிறது. மார்ச் 11, 2011 அன்று நடந்த புகுசிமா விபத்தினால் அமெரிக்க அணு உலைகள் ஜப்பானின் மேலாண்மை இருந்த பிறகும் வெடித்து கதிர்வீச்சை உமிழ்ந்திருக்கின்றன. கூடங்குளம் அணுமின் நிலையம் 2004 டிசம்பர் சுனாமிக்கு முன்பே கட்டப்பட்ட நிலையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அணுசக்தித் துறை சொல்லும் வாதங்கள் உண்மைக்கு புறம்பானவை.
 
அணுமின் நிலையங்கள் மீதான தீவிரவாத அச்சுறுத்தல் பற்றி பாரத பிரதமரே அவ்வப்போது எச்சரித்து வருகிறார். ஆகத்து 18, 2011 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் உள்துறை துணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அணுமின் நிலையங்கள் பயங்கரவாத குழுக்களின் முக்கிய இலக்குகளாக இருக்கின்றன என்கிறார்.
 
2007 பிப்ரவரி மாதம் அப்போதைய தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி வசிப்பவர்களுக்கு இலவச குழுக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். சுமார் 1 வருடத்திற்கு முன்னால் இந்திய அணுமின் கழகமும், இந்தியாவுக்கு அணு உலைகள் வழங்கும் ஆட்டம் ஸ்டராய் எக்ஸ்போர்ட் என்னும் ரசிய நிறுவனமும் இழப்பீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ரசியா வழங்கும் உலைகளில் ஏதேனும் விபத்துக்கள் நிகழ்ந்தால், இழப்பீடு வழங்க வேண்டும் என இந்தியா கேட்க, அந்த மாதிரியான உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ள முடியாது, உலைகளை இயக்குகின்ற இந்திய அணுமின் கழகமே முழுப் பொறுப்பு ஏற்க வேணுடும் என ரசியா கையை விரித்தது. 2008ம் ஆண்டு ரகசியமாக கையெழுத்திடப்பட்ட இரு நாட்டு உடன்படிக்கை ஒன்றின் 13-வது சரத்து இதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது என்று சொல்கிறது ரசியா. போபால் நச்சுவாயுக் கசிவில் பாதிக்கப்பட்ட மக்கள் 25 ஆண்டுகள் கழித்தும் இன்னும் இழப்பீடுகள் பெறாமல், எந்தவிதமான உதவிகளும் கிடைக்காமல் வதைப்பட்டுக் கொண்டிருப்பது மொத்த இந்தியாவுக்கே, உலகத்திற்கே தெரியும்.
 
அணுஉலை கழிவு ஒரு பெரிய பிரச்சனை. கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு ரசியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் அது இந்தியாவிலேயே மறு சுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப்படலாம் எனவும் தெரிவித்தனர். கூடங்குளம் அணு உலைகள் ஆண்டுக்கு சுமார் 30 டன் யுரேனியத்தை பயன்படுத்தும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும் போது 900 டன் கழிவு வெளியாகும். பயங்கரமான கதிர்வீச்சை வெளியிடும் இந்த கொடிய நச்சை 24,000 ஆண்டுகள் நாம், நமது குழந்தைகள், நமது பேரக்குழந்தைகள் அவரது வழித் தோன்றல்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அபாயகரமான இந்தக் கழிவுகளை தேக்கி வைத்திருப்பதாலும், மறு சுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும், காற்றும் பாதிக்கப்படும். நமது விளை நிலங்களும், பயிர்களும், கால்நடைகளும் பாதிக்கப்படும். அவற்றில் இருந்து பெறப்படுகின்ற பால், காய்கறிகள், பழங்கள் நச்சு உணவுகளாக மாறும். அணு உலைகளை குளிர்விக்கும் கதிர்வீச்சு கலந்த நீர் கடலுக்குள் விடப்படுவதால் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரித்து கதிர்வீச்சால் நச்சாக்கப்பட்டு மீன் வளம் பாதிக்கப்படும். மீனவ மக்கள் ஏழ்மைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளப்படுவார்கள். மீனவ மக்களின் மற்றும் உள்ளூர் மக்களின் கடல் உணவு நச்சாகும் போது நமது உணவு பாதுகாப்பு அழிக்கப்படும். அணு உலையின் புகை போக்கிகளில் இருந்து வருகின்ற நீராவி, புகை மூலமும், கடல் தண்ணீர் மூலமும் அயோடின் 131, 132, 133, சீசியம் 134, 136, 137 அய்சோடோப்புகள், ஸட்ராண்டியம், டீரிசியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் நமது உணவில், குடிதண்ணீரில், சுவாசத்தில், வியர்வையில் கலந்து அணு அணுவாக வதைப்படுவோம். நமது குழந்தைகள், பேரக்குழந்தைகள் இந்த நச்சை கொஞ்சம், கொஞ்சமாக நீண்ட நாட்கள் உட்கொண்டு புற்றுநோய், தைராய்டு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உடல் ஊனமுற்ற, மணவளர்ச்சியற்ற குழந்தைகளைப் பெற்று பரிதவிப்பார்கள்.
 
1988ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு (முதல் இரண்டு உலைகளுக்கு) 6,000 கோடி ரூபாய் செலவாகும் என்றார்கள். ஆனால் 1997 ஏப்ரல் மாதம் இந்த திட்ட்த்தின் துவக்க மதிப்பீடே 17,000 கோடி ரூபாயாகும் என்று சொன்னார்கள். 1998 நவம்பர் மாதம் கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 2006ம் ஆண்டு இயங்கும் என்றும், 15,500 கோடி ரூபாய் செலவாகும் என்றும் விளக்கமளித்தார்கள். 2001ம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் குழு இந்தத் திட்ட்த்தின் மொத்தச் செலவு 13,171 கோடி எனவும், இந்திய அரசு 6,755 கோடி முதலீடு செய்ய, ரசியா மீதமிருக்கும் தொகையை 4% வட்டியில் வழங்கும் என்று சொன்னார்கள். முதன் முறையாக எரிபொருள் வாங்குவதற்கும், அடுத்தடுத்த 5 முறை எரிபொருள் வாங்குவதற்கும் 2,129 கோடி ரூபாயில் ஒதுக்கப்பட்டது. இந்த தொகை கிட்டத்தட்ட ரசிய அரசின் கடனுதவியாகவே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு எவ்வளவு செலவாகும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ள முடியும். நமது குழந்தைகளை கடனாளிகளாக ஆக்கும் திட்டம் நமக்கு வேண்டாம்.
 
நமது நாட்டை விட எத்தனையோ மடங்கு வளர்ச்சி அடைந்த, தொழில் வளமிக்க ஜெர்மனி 2022ம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட முடிவெடுத்திருக்கிறது. நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் புற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படும் திருமதி.சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாடான இத்தாலியில் அண்மையில் நட்த்தப்பட்ட வாக்கெடுப்பில் 90% மக்கள் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார்கள். சுவிச்சர்லாந்து, மெக்சிகோ போன்ற நாடுகள் அணு உலைகளை மூடிவிட முடிவெடுத்திருக்கின்றன. புகுசிமா விபத்து நடந்த சப்பான் நாட்டிலே கட்டப்பட்டு கொண்டிருக்கும் 10 அணு உலைகளை நிறுத்தி விட்டனர். 28 பழைய உலைகளையும் மூடிவிட்டனர்.

நமது நாட்டிலேயே மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய மம்தா பானர்சி அவர்களின் அரசு கரிப்பூர் என்னும் இடத்தில் ரசிய உதவியுடன் கட்டப்படவிருந்த அணு உலைத் திட்டத்தை நிராகரித்து விட்டு, மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அணு உலைகள் அமைக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என்று அனைத்து கட்சிகளும் ஒருங்கே நின்று எதிர்க்கின்றன.

கருப்பான, அழுக்கான தமிழர்கள் என்று நம்மை வருணித்திருக்கும் ஓர் அமெரிக்க தூதர் சொல்வது போல நம்மை இந்திய அரசும் இழிவாக பார்க்கிறதோ என்னும் அச்சமும், சந்தேகமும் மனதில் எழுகின்றன. தமிழக அரசியல் தலைவர்கள் நம்மைக் காப்பாற்ற முன்வருவார்கள் என எதிப்பார்த்து ஏங்கிக் கிடக்கிறோம்.

இறுதியாக ஒரு சில கேள்விகள் சிந்திக்கத் தூண்டுகின்றன.

மக்களுக்காக மின்சாரமா அல்லது மின்சாரத்திற்காக மக்களா? 

ரசியா, அமெரிக்கா, பிரஞ்சு நாட்டு நிறுவனங்களின் லாபம் முதன்மையானதா அல்லது இந்திய மக்களின் உயிர்களும், எதிர்காலமுமா? 

சிந்திப்பீர்! முடிவெடுப்பீர்!

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 அமீர் அப்பாஸ் 2011-09-12 13:18
மிகச் சிறந்த கட்டுரை. மிகச் சரியான நேரத்தில் வெளியிட்ட கீற்று இணையத்தின் சமூக அக்கறைக்கு நன்றி. ஊடக தளத்தில் சமரசமற்ற போராளிக் குணத்துடன் இயங்கும் அனைவருக்கும் கீற்று முன்னோடியாக இருக்கிறது.
Report to administrator
0 #2 prasanna 2011-09-14 21:13
மம்தா பானர்ஜியைப் போல உறுதியாக எதிர்க்க ஜெயலலிதா முன்வருவாரா? என்பது சந்தேகமாகவே இருக்கிறது. தமிழக அரசியல்வாதிகள் பச்சையான வியாபாரிகள் என்பது பலகாலமாகவே, பலமுறை நிரூபிக்கப்பட்ட ு வரும் ஒரு பட்டவர்த்தன உண்மை. இவர்களிடம் எப்படி மக்கள் பாதுகாப்பை எதிர்பார்ப்பது என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில், எதிர்காலத்தில் மனிதைனம் வாழ முடியுமா? என்பதே கேள்விக்குறி. இப்படி எத்தனையோ வாழ்வாதார பிரச்சினைகள் தினந்தோறும் கழுத்தை நெறிக்கையில், ஜாதியை அன்றாடம் தூக்கிப் பிடித்து அலையும் மானங்கெட்ட இனமாகத்தான் தமிழினம் இருக்கிறது. தமிழினம் இனி மெல்லச் சாகும்.
Report to administrator
0 #3 Joseph Kishore 2011-09-15 05:56
போரட்டத்திற்கு ஆதரவு தரும் விதமாக, உண்மையை உலகுக்கு சொல்லும் விதமாக பதிவு வெளியிட்டதற்க்க ு நன்றி. இந்த அணூ உலை தென் தமிழகத்தை சுடு கடாக்கும் கொலை உலை. இன்றோடு 5 வது நாள் தொடர் உண்ணா விரதம் 127 பேர் தொடர்ந்து கொண்டிருக்கிறார ்கள். இதுவரை, அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஆனாலும் தினம்தோறும் போராட்டம் வலுவடைகிறது. காற்றையும் , கடலையும் கட்டுபடடுத்த தெரிந்த மீனவ மக்கள் இந்த கொலை உலையையும் கட்டுபடுத்துவார ்கள்.
Report to administrator
0 #4 Guest 2011-09-17 15:05
it's the one of the acceptable oblication
Report to administrator
0 #5 Sr.flora Mary 2011-09-21 09:16
Very pt and informative article. I shall explain it to the members of the widows' movement in Nagapattinam. Thank you.
Sr.flora sjl
Report to administrator
0 #6 நெல்லி. மூர்த்தி 2011-09-21 09:18
இயற்கையின் இடர்பாடுகளால் மட்டுமல்ல, மனிதனின் சின்னஞ்சிறு தவறுகளினாலோ அல்லது இயந்திர & மின்னணு சாதனங்களின் சின்னஞ்சிறு பழுதுகளினாலோ கூட மிகப்பெரிய விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன என்பது தான் அணுமின் நிலையங்களின் வரலாறு. இதுகுறித்து என் வலைப்பூவிலும் பதிவிட்டுள்ளேன் . (ஹ்ட்ட்ப்://னெல ்லிமோர்த்ய்.ப்ல ொக்ச்பொட்.சொம்/ 2011/09/ப்லொக்- பொச்ட்_20.ஹ்ட்ம ்ல்)

கூடங்குள அணுமின் நிலைய உண்மைகளையும், புதிய தகவல்களையும் இந்தக் கட்டுரை வாயிலாக அறிய முடிகின்றது. அரசியற் காழ்ப்புணர்வின் றி, வறட்டுப் பிடிவாதம் பிடிக்காமல் மக்கள் நலனில் அக்கறை செலுத்திஒருவரைய ொருவர் குற்றங்குறையைக் கூறிக் கொள்ளாமல் ஆக்கபூர்வமான முடிவினை எடுக்கவேண்டும் இந்த மாநில / மத்திய அரசுகள்.
Report to administrator
0 #7 இரா. கிருட்டினன் 2011-09-21 10:47
பயனுள்ள கட்டுரை. கட்டுரையில் இருந்து தேவையான பகுதிகளை எடுத்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், தமிழக முதல்வர், சுற்றுச்சூழல்து றை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சரும் பாளை. சட்டமன்ற உறுப்பினருமாகிய மைதீன்கான், திருநெல்வேலி மாநகரத் தந்தை ஆகியோருக்குக் காமாட்சி நகர் மக்கள் நல மன்றத்தின் சார்பில் கூடங்குளம் அணுமின் திட்டத்தை நிறுத்த வேண்டி விண்ணப்பித்திரு க்கிறோம். கட்டுரையை வெளியிட்ட கீற்றிற்கும் கட்டுரையாளருக்க ும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்க ாக நெஞ்சார்ந்த நன்றி!
Report to administrator
0 #8 Veerappan 2011-09-21 14:07
வல்லரசு நாடுகலுக்கு இந்தியா தான் குப்பை குளம் அவைகள் தன் நாட்டில் உள்ள யுரேனிஉம் போன்ற அதாது பொருட்களை தங்கள் நாட்டில் பயன் படுதாமல் வலர்துவரும் நாடுகளில் பயன் படுத்துகிறார்கள ்.
Report to administrator
0 #9 Vijayan 2011-09-26 08:11
அணுஉலைகளின் முன்மாதிரிகளின் வடிவமைப்புகள் திறந்த அரங்கில் கிடக்கிறது ஆனால் தனியொரு அணுஉலையில் விவர வடிவமைப்பு இதுவரை எந்த ஆலையும் வெளியிட்டதில்லை . அது அவர்களின் காப்புரிமைப் பிரச்சனை. எனவே கூடங்குளஅணுஉலைவ ிவர வடிவமைப்புகிடைக ்காது எனினும் VVER அணுஉலைகளைப்பற்ற ி ஏராளமான தகவல்கள் உள்ளன. இது எதையும் கட்டுரையாளர் படித்தமாதிரி தெரியவில்லை. கட்டுரையாளர் அணுஉலைஎதிர்ப்பு என்ற கண்ணாடியை அணிந்து கொண்டு அனைத்தையும் பார்க்கிறார்.

அமெரிக்காவில் நடத்திய சமீபத்திய ஆய்வில் அனல் மின்நிலையம் வெளியேற்றும் கழிவுகளால் பாதிக்கப்பட்டு அங்கு ஆண்டுக்கு 14000பேர் இறக்கின்றனர். செர்னோபிள் அணுஉலைவிபத்தில் உயிரிழந்தவர்கள் 9000 என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். அந்த கழிவுகளில் ரேடியோ கார்பன் என்ற கதிரியக்க தனிமம் உள்ளிட்ட கழிவுகள் உண்டு. இந்தியாவில் இதே போன்ற ஆய்வு நடத்தப்பட்டால் அதிர்ச்சியூட்டு ம் பல தகவல்கள் வெளியாகக்கூடும் . மனிதன் உட்பட அண்டத்தில்உள்ள ஒவ்வொரு பொருளும் கதிரியக்கப் பொருள்தான் மனிதனின் உடலில் உள்ள அணுக்களில் வினாடிக்கு 4500 அணுக்கள் கதிரியக்க சிதைவுக்கு உள்ளாகின்றன. ஒரு அணுஉலை வெளியேற்றும் கதிரியக்க அளவிற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட் டிருக்கிறது என்ற தகவலை மூடிமறைக்கிறார் கட்டுரையாளர். அணுமின்நிலையங்க ளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்பட் டிருக்கிற அளவு வருடத்திற்கு 20 மில்லி சில்வர்ட் ஆகும். நடைமுறையில் அவர்கள் பணியின்போது சந்திக்கும் கதிர் வீச்சானது மிகமிகக் குறைவு. இதேபோல் அணுமின்நிலையத்த ை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நிர்ணயிக்கப்பட் டிருக்கிற அளவு என்பது ஆண்டுக்கு 0.0002 மில்லி சில்வர்ட். இது அவர்கள் இயற்கையான கதிர்வீச்சிற்கு உட்படும் அளவைவிட 10000 மடங்கு குறைவு.

கூடங்குள அணுமின் உலையின் தீ விபத்திற்குள்ளா கும் சாத்தியக்கூறு ஆண்டிற்கு 0.0000000091 என்று 2005 ம் ஆண்டு மும்பையில் நடந்த நம்பகத்தன்மை, பாதுகாப்பு, ஆபத்துகள் பற்றி சர்வதேசமாநாட்டி ல் சமர்ப்பிக்கப்பட ்ட ஆவணம் கூறுகிறது. இதற்கு மறுப்பாக உறுதியான ஆவணம் கட்டுரையாளரிடம் ஏதேனும் உண்டா? கூடங்குளம் அணுஉலை மூன்றாம் தலைமுறை வடிவமைப்பு கோட்பாடுகளில் உருவாக்கப்பட்டத ு இதனுடைய உலைக்கருவின் கோளாறு ஏற்படும் வாய்ப்பு ஆண்டிற்கு 0.0000001. முந்தைய தலைமுறையைவிட இரண்டுமடங்கு வாய்ப்பு குறைவு. இந்த கணக்கீடகளை கட்டுரையாளர் சரிபார்த்து எதாவது கேள்வி எழுப்பியிருக்கி றாரா?

உலகிலேயே ஜனநெருக்கடி மிகுந்த பகுதியில் அமைக்கப்பட்டிரு க்கும் அணுமின்நிலையம் பாகிஸ்தானில் உள்ளது. கராச்சியில் அமைந்துள்ள இந்நிலையத்தை சுற்றியுள்ள 30கிமீட்டருக்கு ள் 82 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். தீவிரவாதிகள் தாக்குதலை காரணம் காட்டும் கட்டுரையாளர் கராச்சி அணுஉலையைவிட தீஜீரவாத தாக்குதல் கூடங்குளத்திற்க ு உண்டு என்று கட்டுரையாளாரால் கூறமுடியுமா? அடுத்து தைவானின் குஷெங் நகரில் அமைந்திருக்கும் அணுஉலை வருகிறது இதையொட்டி 55 லட்சம் மக்கள் வாழ்கிறார் அடுத்து தலைநகர் தய்பேய் அருகிலேயே ஜனநெருக்கடி நிறைந்த பகுதியில் உள்ள சின்ஷான் அணுஉலை. இதைச் சுற்றி 45 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். கூடங்குள அணுஉலையின் 30 கிமீ சுற்றளவில் பாதி கடல்பகுதிக்குள் வருகிறது. மீதிப்பகுதியில் வாழும் மக்கள் தொகை 5 லட்சத்தை தொடாது என மதிப்பிடப்படுகி றது.

விமர்சனம் செய்யுமுன் இன்னும் சில விபரங்களை கட்டுரையாளர் பார்ப்பது நல்லது. உலகில் உள்ள அணுஉலைகளைவிட அணுகுண்டுகள் அதிகம். அணுஉலைகளால் இயக்கப்படும் நீர்மூழ்கி கப்பல்களில் 400 கப்பல்கள் அமெரிக்காவிடமும ் 240 கப்பல்கள் ரஷ்யாவிடமும் உள்ளது. இவைகள் சர்வதேச நீரில் திரிந்து கொண்டிருக்கின்ற ன. இவைகள் எப்பொழுது எங்கு இருக்கும் என்ற தகவல் யாருக்கும் தெரியாது. கூடங்குளத்திற் அருகில் கூட ஒரு அமெரிக்க அணு நீர்மூழ்கி கப்பல் இருக்கலாம். இவைகளும் கட்டுரையாளர் கூறுவது போல அணுக்கழிவுகளை வெளியேற்றக் கூடும். பூமிப்பரப்பின் அனைத்து கடல் நீரும் கட்டுரையாளர் கூறுவதுபோல் நச்சுத் தன்மை மாறியதாக இருக்கவேண்டும். ஆனால் இதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

கூடங்குள அணுஉலைiயைச் சுற்றி வாழும் மக்களின் மீது தொடரப்படும் கெடுபிடிகள் கண்டிக்கப்படவேண ்டியவை. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பான வடிவமைப்பிற்கான சான்றிதழ்கள் ஆகியவற்றை வெளியிடக் கோரி போராட்டம் நடத்தலாம். அரசு கொஞ்சம் வெளிப்படையாக செயல்பட்டு முடிமறைப்பதற்கு எதுவுமில்லை என்பதை தெளிவுபடுத்தவேண ்டும். ஆவணங்களை தவறாக விளக்கமளிக்கும் கூட்டத்திற்கு சரியான பதிலையும் கொடுக்க வேண்டும்.

விஜயன்
Report to administrator
0 #10 Karuppasamy 2011-09-28 15:55
Hi Udhayakumar,

Good article. This article only talks about negatives of Nuclear Power plant.

2 questions were asked at the end of this article.

1) Power for People? OR People for Power?

It is obvious that people can not live without Electic Power.I can not imagine how people lived in ancient times.

It is also accepted that the people living around Power plant will be impacted due to wastes & radiation. we also need to consider the fact that the Number of industries are getting increased day by day. Government has been struggling to provide electric power to these new industries.

Meanwhile electic supply to the domestic areas are highly impacted. Thanks to the Indian Citizens who use highly power consuming appliances like Air Conditioners.

The agreement for opening up an atomic center was made in 1988 .I am positive that the people in india including Rajiv gandhi did not fully understand pros and cons of this Nuclear Power plant project.

Instead Rajiv would have only looked at advandantages of this power plant. Who knows he might have received huge money as bribe from these countries.

I beleive, most of the parts of india did not even have lights in 1980s. My village is about 150 kms from Koodankulam Nuclear Power Plant. I still remember how my village was in 1990s.

people should have protested against this when the agreement was made in 1988 . They did not come to streets as they do now for protesting becuase they desperately needed electricity at that time.

Other Energy Resources were not sufficient for India. So India were forced to sign agreement with Russia.

If we ourselves use it, why should we protest against nuclear power plant?. Now we are in a situation where Government itself can not stop it from operating.

People and Power are equally important. If india can produce sufficient energy from other resources, India needs to close this Nuclear Power plant. Else it is destiny that the lives of people living around nuclear plant will always be in question.


2) is Profifitability of corporates of Russia, USA, France important? or are lives and futue of Indians important?

Russia, Japan, Germany have already started thinking about closing nuclear plants in their countries.

Because they realized that the energy produced from other resources may be well enough for them. we also need to notice that the population in their countries are less.

They have also understood that the impact due to natural calamities are unstoppable . all the organizations are run for making profits. If that is the only objective of those organizations , I agree we should stop them operating from indian soil.

But I personally feel that the indians are most benifited than anything else. If we sell energy procduced in india to another countires like srilanka, we should protest against it.

Thanks,
Karuppasamy
Report to administrator
0 #11 கி.பிரபா 2011-09-29 08:04
மக்களில் ஒருவனே மன்னன்.மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவனே மன்னன். மக்கள் உயிர் எனில் மன்னன் உடல்.ஆளும் மன்னன் மக்களின் எண்ணங்களைப் புரிந்து செயல்படவேண்டும் . இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ பல் வேறு வழிகள் இருக்கும்போது இன்னொரு நாடான இரசியாவுடன் ஒப்பந்தம் செய்யும்போது பல உண்மைகளை மறைத்தும் புறக்கணித்தும் அணு உலைக்கு ஆதரவு தரும் நடுவண் அரசைக் கண்டிக்காமல் வேடிக்கைப் பார்க்கும் உலகை, உலகில் வாழும் மனிதர்களை மக்கள் என்பதா? அன்றி மாக்கள் என்பதா! அணு உலை வேண்டவே வேண்டாம் என நாம் எல்லோரும் ஒன்று கூடி குரல் கொடுத்து மிக விரைவாகச் செயல்படுவோமே.
Report to administrator
0 #12 ஆறுமுகம் 2011-09-30 08:23
கூடங்கு ளம் அணு மின் நிலையத்திற்க்கு தொடக்கம் முதலே எதிரப்பு தெரிவிக்கப்பட்ட ு வருகிற து. எதிர்ப்புகள் அணைத்தும் கிரமத்து மக்கள் அறிவு வளர்ச்சி இன் றி எதிர்ப்பதாக கூறப்பட்டது. இப்போது அணு உலை வெடித்த ஜப்பானைத்தான் அப்போது இந்த அணு உலைக்கு ஆதரவாக கூறப்பட் ட து. ஜப்பானில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படும் என்றும் ஜப்பானின் எலக் ட்ரானிக்ஸ் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு அணு மினுற்பத்திதான் காரணம் என்று கருத்தரங்கு பயிலரங்கு களில் வாதி ட்டனர். நாகரீகத்தில் முனனேறிய மேற்கத்திய நாட்டினரும் இந்த மின் உற்பத் தியை ஆதரிப்பதாக ஆதாரங்களை அடுக்கினர். இன்று அவர்கள் அணைவரும் தாங்கள் பெற்றதை விட இழப்பது அதிகம் என உணரத் தொடங்கி விட்டதால் . இந்த உலைகளே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். ஆனால், அவர்களை முன்னுதாரனம் காட்டி ஆதரவாக பேசியவர்கள் தான் இன்று அரசு பணம் வீணாவதாக வாதிடுகின்றனர். அலைக்கற்றை யில் இலட்சம் கோடிகளை வீணாக்க சம் மதிப்பவர்கள் மக்களை பாதுகாப்பாற்ற இந்த பணத்தை துறக்க தய ங்குகின்றனர். உண்மையில் இந்த உலை பாதுகாப்பானது தான் என்றால் ஏன் அந்த ஆலையை சுற்றி இவ்வளவு போ ர் தான் வசிக்க வேண்டும் என்பது போன்ற விதிகள். இதை டெல்லியிலே அல்லது சென்னையிலோ கட்டலாமே! அல்லது பாராளுமன்றத்தை அல்லது சட்டம ந்றம் அல்லது தலைமை செயலகத்தை கூடங்குளம் அருகே பாது காப்பான தொலை வில் நான்குநேரியில் தொழில் நுட்ப பூங்காவுக்கு ஒதுக்கப் பட்ட இடத்தில் அமைக்கலாமே. (அங்கு இன்று வரை எதுவும் கிடையாது வாசலை தவிர) தென்மாவட்டங்களு ம் விரைவாக வளர்ச்சியடையும் .
Report to administrator
0 #13 மனோகரன் 2011-09-30 08:25
ஹிரோஷிமா மற்றும் நகசாஹி யில் இருந்து இன்னும் ஜப்பான் பாடம் படிக்கவில்லை. அதனால் தான் புகுஷிமா விபத்து.
கூடங்குளம் அணு உலைக்கு எத்ரிப்பு தெரிவித்து வரும் மக்களுக்கு எங்களது ஆதரவை தெரிவித்து கொள்கிறோம்.
கூடங்குளம் அணு உலை மூடபட வேண்டும்.

-->அணு உலைக்கு எதிரான ஜப்பானியர்கள்.

மின்சாரம் இல்லை என்றால் கூட உயிர் வாழ்ந்து விடலாம்.
உயிர் இல்லை என்றால் வாழ முடியாது.
Report to administrator
0 #14 நெல்லி. மூர்த்தி 2011-10-10 09:04
திரு. விஜயன் அவர்களின் கருத்து மேலோட்டமாக பார்க்கும் போது சரி என்பது போல் தென்பட்டாலும் ஆழமாய் நோக்கினால் இன்னமும் ஐயம் விரியும். வளர்ந்த நாடுகளை முன்மாதிரியாக கூறினாலும் ஒருவேளை ஏற்கலாம். ஆனால், பாகிஸ்தான் போன்ற நாடுகளை, பொதுமக்களின் நலனின் மீது அக்கறைக் கொள்ளாது ஆளும் வர்க்கத்தின் சிந்தனைக்கேற்ப நாட்டினை நடத்துபவர்களை முன் உதாரணம் காட்டுவது வேடிக்கைக்குரிய து. நம் அணுவிஞ்சானிகளின ் அதீத நம்பிக்கைக்காக பொதுமக்கள் நெருக்கமாய் வாழும் பகுதியைனை சோதனைக் களமாக்க முற்பட வேண்டாமே! சர்வதேச அணுசக்தி பேரவையின் விதிமுறைகளை மீறியது அப்பட்டமாகத் தெரிகின்றது. ஆதலால் தான் இரஷ்யா விபத்தாகட்டும், காப்பீடாகட்டும் ஜகா வாங்குகின்றது. ’ தொட்டால் சுடும்’ என்கின்ற உண்மையை சொல்லில் அல்ல ஜப்பானில் நேரில் கண்ட பின்னரும் அடங்க மாட்டேன் எனும் அணுசக்தி மேதாவிகளையும், அதிகார வர்க்கத்தினையும ் (எல்லாம் கட்டிங்க்காக) வளர்கின்ற நாட்டில் தான் காண முடிகின்றது. த்ரீ லேண்ட் விபத்திற்குள்ளா ன அமெரிக்காவோ, செர்னோபில் இரஷ்யாவோ, ஃபுகுஷிமா ஜப்பானோ தைரியமாக மேற்கொண்டு அணு மின் உலைகளை புதியதாக திறந்திருந்தால் நம் கலக்கம் சற்று மறைந்திருக்கும் . வளர்கின்ற நாடுகளில் விஞ்சானிகளையும் , ஆளும் வர்க்கத்தினரையு ம் உசுப்பேற்றிவிட் டு பரிசோதனைகளமாக்க ியதை நம்மவர்கள் உணர மறுப்பது வேதனையானது!
Report to administrator
0 #15 sathish 2012-01-23 15:12
கூடங்குளம் அணு உலைக்கு எத்ரிப்பு தெரிவித்து வரும் மக்களுக்கு எங்களது ஆதரவை தெரிவித்துகொள்க ிறோம்.
Report to administrator
0 #16 ராம் 2012-02-17 02:44
கூடங்குளம் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் திரு. உதயகுமார் மற்றும் குழுவினர் பற்றிய தகவல்கலை எந்த ஒரு தேடுபொறியிலும் இல்லாததை கவனித்தீர்களா..
Report to administrator
0 #17 ஆல்வின் 2014-01-30 13:31
தமிழகத்து அரசியல் தலைவர்கள் அணு உலைகளின் ஆபத்தை உணரவேண்டும்!
Report to administrator

Add comment


Security code
Refresh