தீபாவளிக்கு வாங்கிய கடிகாரம்

அலாரம் அடித்தது

மார்வாடிக் கடையில்

***

வரவேற்பறை

சமையலறை

படுக்கையறை

பாகுபாடில்லை

குடிசைவீடு

***

தெருவோரம் தேங்கிய நீர்

கால் கழுவாதீர்

காக்கை குருவிகளின்

'மினரல் வாட்டர்'

***

வீட்டுவேலையை

பள்ளியிலேயே முடித்தாயிற்று

வீடு திரும்பும்போது

கணக்கவில்லை

புத்தகமூட்டை

- சேகர், சென்னை

Pin It