1989

இன்று எமது இனம் உலகிலேயே தலை நிமிர்ந்து இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் எமது 1307 போராளிகளின் உயிர்த்தியாகம்தான். அவர்களுடைய வீரமான, தமது உயிரையே மதியாது போராடிய உண்மையான தியாகம் தான் எங்களுக்கு இன்று உலக நாடுகளில் ஒரு மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த மாவீரர் நாளே நாங்கள் எங்களுடைய வாழ்நாளில் முக்கியமான விழாவாக இன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் கொண்டாட ஆரம்பிக்க வேண்டும்.

1990

எமது தாய்நாடு விடுதலை பெற வேண்டும். எம்மைப் பிணைத் திருக்கும் அடிமை விலங்குகள் உடைத்தெறியப்பட வேண்டும். எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டும். இந்த இலட்சியம் ஈடேற வேண்டுமாயின் நாம் போராடித்தான் ஆக வேண்டும். இரத்தம் சிந்தித்தான் ஆகவேண்டும். நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கிறோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தால் நீர்பாய்ச்சி வளர்க்கிறோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.

1991

நீண்ட விடுதலைப் பயணத்தில் சோர்வுகள் எம்மை ஆட்கொள்ளலாம். போராட்ட வாழ்வில் பெரும் சுமைகள் எம்மை அழுத்திப் பிடிக்கலாம். மேலும், பளுக்கள் எம்மீது சுமத்தப்படலாம். ஆனால் நாம் ஒரு சுதந்திர இலட்சியத்தில் பற்றுக் கொண்டு உறுதி கொண்ட மக்களாக ஒன்று திரண்டு நின்றால் எந்தவொரு சக்தியாலும் எம்மை அசைக்கவோ அழிக்கவோ முடியாது. வீர சுதந்திரம் வேண்டி நிற்கும் மக்களுக்கு உறுதிதான் வலிமையான ஆயுதம். இன்று எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து ஒலிக்கும் சுதந்திர கீதம் உறுதியின் உன்னதத் தைத்தான் பாடுகின்றது.

1992

எமது சுதந்திர இயக்கத்தின்தூண்களாய் நிற்கும் மாவீரர்களே! உங்கள் இரத்தத்தால் எங்கள் விடுதலை வரலாறு மகத்துவம் பெறுகிறது.உங்கள் இலட்சிய நெருப்பால் எங்கள் போராட்டம் புனிதம் பெறுகிறது. உங்கள் தியாகத்தால் எங்கள் தேசியம் உருவாக்கம் பெறுகிறது. உங்கள் நினைவுகளால் எங்கள் உறுதி வைரம் பெறுகிறது. எங்கள் தேச சுதந்திரத்தின் சிற்பிகளாகிய உங்களே நாம் சிரந்தாழ்த்தி வணங்குகிறோம்

1993

சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு தனியரசு என்ற ஒரே பாதையைத்தான் தமிழீழ மக்களுக்குத் திறந்து வைத்திருக்கிறது. அந்தப் பாதையில் செல்வதைத் தவிர எமக்கு வேறுவழியில்லை. இந்தப் பாதை வழியேதான் எமது விடுதலை இயக்கம் தனது இலட்சியப் பயணத்தைத் தொடர்கிறது. இந்தப் பாதை மிகவும் கடினமானது. கற்களும் முட்களும் நிறைந்தது. விலங்குகளும் விச ஜந்துக்களும் நிறைந்தது. ஆயினும் நாம் இந்தப் பாதை வழியே எமது பயணத்தைத் தொடர்கிறோம்.

1994

விடுதலைக்காக எமது தேசம் மதிப்பிட முடியாத பெருவிலையைக் கொடுத்திருக்கிறது. விடுதலைக்காக இந்த மண்ணில் இரத்த ஆறு ஓடியிருக்கிறது. விடுதலைக்காக இந்தப் பூமி ரணகளமாக மாறியிருக்கிறது. விடுதலைக்காக எமது வீரர்கள் இன்றும் செத்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நிலத்தில் புதை யுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.

1995

தமிழினம் சிதைந்து அழிந்து போகாமல் பாதுகாப்பாக வாழ்வதற்கு, போராடித்தான் வாழ வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு தமிழ்த் தேசம் தள்ளப்பட்டிருக்கிறது. இந்தத் தேசியப் பணியிலிருந்து, வரலாற்றின் அழைப்பி லிருந்து தமிழ் இளம் பரம்பரை ஒதுங்கிக்கொள்ள முடியாது. இதில் காலம் தாழ்த்தாது எமது விடுதலை இயக்கத்தில் இணைந்து கொள்ளுமாறு தமிழ் இளேஞர்களுக்கும் யுவதிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். எவ்வளவு சீக்கிரத்தில் தமிழ் இளம் சந்ததி எமது இயக்கத்தில் இணைந்து கொள்கிறதோ அவ்வளவு சீக்கிரத்தில் நாம் எமது போராட்ட இலக்குகளே அடைந்து கொள்ள முடியும்.

1996

எமது இரத்தத்தை விலையாகக் கொடுத்து எமது இலட்சியத்திற்காக போராடுவோம். வெற்றிகளே ஊக்கமாக எடுத்து, பின்னடைவுகளேச் சவாலாக ஏற்று, நாம் தொடர்ந்து போராடுவோம். எவ்வித இன்னல்கள் வந்தாலும், எவ்வித துன்பங்கள் நேர்ந்தாலும் நம்பிக்கை இழக்காது நாம் தொடர்ந்து போராடுவோம். எமது மண்ணிலிருந்து சிங்களப் படைகளே விரட்டும் வரை, எமது தேசத்திற்கு விடுதலை கிட்டும் வரை, எமது மக்களுக்கு விடிவு ஏற்படும் வரை நாம் உறுதி தளராது துணிந்து போராடுவோம்.

1997

தேச விடுதலை என்பது எதிரியால் வழங்கப்படும் சலுகையல்ல. அது இரத்தம் சிந்தி, உயிர்விலைகொடுத்து, போராடிப் பெறவேண்டிய புனித உரிமை. உறுதியுடன் போராடும் தேசமே இறுதியில் வெற்றி பெறுமென்ற உண்மையை நெஞ்சில் நிறுத்தி, நாம் செயலுறுதியுடன் போராடுவோம். மனவலிமையின் நெருப்பாக எரிந்து எமது மண்ணின் விடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர்களே நினைவு கூர்ந்து, நாம் இலட்சிய உறுதியுடன் தொடர்ந்து போராடுவோம்.

1998

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களேத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள். வரலாறு என்பது மனித விடுதலையை நோக்கி நகரும் ஒரு பேரியக்கம். சுதந்திரப் போராட்டங்களே இந்த வரலாற்றுப் பேரியக்கத்தின் சக்கரங்களேச் சுழற்றுகின்றன. எந்த ஒரு தேசம் - எந்த ஒரு மக்கள் சமூகம் சுதந்திரம் வேண்டிப் போராடுகிறதோ அங்குதான் வரலாற்றுப் புயல் மையம் கொள்கிறது.

1999

இன்று எமது சுதந்திரப் பயணத்தில், அந்த நீண்ட விடுதலை வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்பத்தை அடைந்து விட்டோம். எமது போராட்ட இலக்கு ஒளி மயமான எதிர்காலமாக எமது கண்களுக்குத் தெரிகிறது. நாம் நம்பிக்கையுடன் எமது இலட்சியப் பயணத்தைத் தொடர்வோம். எமக்கு முன்னால் எழக்கூடிய எல்லாத் தடைகளேயும் உடைத்தெறிந்து நாம் நெஞ்சுறுதியுடன் நிமிர்ந்து செல்வோம். நாம் ஒரே மக்கள் சக்தியாக, ஒன்றுபட்ட தேசமாக, ஒருமித்தெழுந்து, எமது பாதையில் இணைந்து செல்வோம். சாவைத் தழுவிய எமது வீரர்களின் ஆன்மாவாகச் சுதந்திரம் எமக்காகக் காத்து நிற்கிறது.

2000

எமது ஆயுதப் போராட்டத்தில் மக்களின் பங்களிப்பு மேலும் மேலும் பெருக வேண்டும். அதுதான் எமது போராட்டத்தில் பாரியத் திருப்புமுனை களே ஏற்படுத்தும். அதுதான் எமது மண்ணில் எதிரியின் ஆக்கிரமிப்பிற்கு முடிவு கட்டி எமது விடுதலை இலட்சியத்தை வெகுவிரைவில் நிறைவு பெறச் செய்யும். காலமும் வரலாறும் எமது போராட்ட இலட்சியத்திற்கு நியாயம் வழங்கியே தீரும். அப்போது உலகமும் அதனை ஏற்றுக் கொள்ளும். சத்திய இலட்சியத் தீயில் தம்மை அழித்துக் கொண்ட மாவீரர்கள், சரித்திரமாக நின்று எமக்கு வழிகாட்டுவார்கள். அந்த தர்மத்தின் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோம்.

2001

உண்மையான பயங்கரவாதி களே இனங்கண்டு தண்டிக்கும் நோக்குடன் சர்வதேச உலகம் மேற்கொள்ளும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளே நாம் வரவேற்கிறோம். ஆயினும், அதேவேளே தீவிரவாத வெறியில் எழும் குருட்டுத்தனமான பயங்கரவாதத்திற்கும், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் முன் னெடுக்கப்படும் சுதந்திரப் போராட்டங் களுக்கும் இடையிலான வேறுபாட்டினை விளக்கும் வண்ணம் மேற்குலக சனநாயக நாடுகள் பயங்கரவாதம் என்ற பதத்திற்கு விரிவான, விளக்கமான வரையறையைக் கொடுப்பது அவசிய மாகும். உள்நாட்டில் இனக் கொலைப் பரிமாணத்திற் கொடுமைகளே இழைத்து வரும் அடக்குமுறை ஆட்சியாளர்களின் அரச பயங்கரவாதத்தை சர்வதேச உலகம் அலட்சியம் செய்ய முடியாது. இந்தப் பயங்கரவாத அடக்குமுறை அரசுகளே இனங்கண்டு தண்டிக்க உலகம் முன்வர வேண்டும்.

2002

எமது மக்கள், தமது தாயக மண்ணில், தம்மைத் தாமே ஆட்சிபுரியும் உரிமை உடையவர்களாக, சுதந்திரத்துடன் கௌரவமாக வாழவேண்டும் என்பதே எமது போராட்ட இலட்சியம். இந்த இலட்சியம் சமாதான வழியிற் கைகூடுமானால் அந்த வழியைத் தழுவ நாம் என்றுமே தயாராக இருக்கின்றோம். அமைதி வழியில், மென்முறை தழுவி, நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் நாம் எமது போராட்ட இலட்சியத்தை அடைய முயன்று வருகிறோம். காலத்திற்கேற்ப, வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய, எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப் போவதில்லை.

2003

ஒரு பலம் வாய்ந்த விடுதலைப் போராட்ட சக்தியாக இன்று உலகரங்கில் நாம் முன்னணி வகித்து நிற்கின்றோம். தர்மத்தின் வழி தழுவி, ஒரு சத்திய இலட்சியத்திற்காகச் செய்யப்படும் தியாகங்கள் என்றுமே வீண் போவதில்லை. எமது தேசத்தின் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை ஒப்பற்றது. உலக விடுதலை வரலாற்றில் நிகரற்றது. இந்த அளப்பரிய ஈகத்தின் ஆன்மீக சக்தி இன்று உலக மனசாட்சியை உலுப்பிவிட்டிருக்கிறது. எமது மாவீரர்களின் சுதந்திரத் தாகம் சாவுடன் தணிந்து போகவில்லை. அது எமது இனத்தின் வீர விடுதலைக் குரலாக உலகெங்கும் ஒலித்துக் கொண்டி ருக்கிறது.

2004

தமிழீழத்தின் தொன்மை வாய்ந்த, வரலாற்றுப் புகழ்மிக்க நகரங்களும் பட்டினங்களும், அங்கு வாழ்ந்து வரும் எமது மக்களும் இன்னும் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புப் பிடியிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடை பட்டு, நசிபட்டு, மிதிபட்டு வாழ்கிறார்கள். தமது சொந்த மண்ணிலிருந்து வேர் அறுபட்டு இடம் பெயர்ந்த பல்லாயிரக் கணக்கினர் தாம் பிறந்து வாழ்ந்த நிலங்களுக்குத் திரும்ப முடியாது அகதி முகாம்களில் அல்லற்படுகிறார்கள். மக்களின் துயரும் துன்பமும் தொடர் கிறது. தேச விடுதலை என்ற எமது இலட்சியம், எமது மாவீரர்கள் கனவு கண்ட அந்தச் சத்திய இலட்சியம் இன்னும் நிறைவுபெறவில்லை.

2005

நாம் ஆயுத வன்முறையிற் காதல் கொண்ட போர்வெறியர் அல்லர் என்பதையும் சமாதான மென்முறையில் நாம் பற்றுறுதி கொண்டவர்கள் என்பதை யும் உலகுக்கு உணர்த்திக் காட்ட வேண்டிய தேவையும் எழுந்தது. எமது மாவீரர்களின் வீரம் செறிந்த போராட்ட வாழ்வையும், எமது மண்ணின் விடுதலைக்காக அவர்கள் புரிந்த மகத்தான தியாகங்களேயும் நினைவு கூரும் இப்புனித நாளில், எத்தகைய இடர்களேயும் எத்தகையத் துன்பங்களேயும் எத்தகைய சவால்களேயும் எதிர்கொண்டு எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுப்போமென உறுதி பூணுவோமாக.

2006

எத்தனையோ கனவுகளோடு, எத்தனையோ கற்பனைகளோடு நீதி கிடைக்குமெனக் காத்திருந்த தமிழருக்குச் சாவும் அழிவுமே பரிசாகக் கிடைத்திருக்கின்றன. சோதனைமேற் சோதனையாக,வேதனைமேல் வேதனையாகத் தாங்க முடியாத துயரச் சுமை தமிழர்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த வேதனையால் அழுதழுது கண்ணீர் தீர்ந்து இரத்தமே கண்ணீராக வருகின்ற சோகம் தமிழினத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. சிங்கள அரசு தமிழரின் தாயகத்தைப் பிரதேசங்களாகப் பிரித்து, வலயங்களாக வகுத்து இராணுவ அரண்களே அமைத்து, முட்கம்பி வேலிகளால் விலங்கிட்டு, சோதனைச் சாவடிகளால் நிறைத்து, ஒரு பிரம்மாண்டமான மனித வதை முகாமாக மாற்றியிருக்கிறது.

2007

எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள். வீழ்ந்த மாவீரர் அனைவரும் மனித மலைகளாக, மனிதக் கோட்டைகளாகவே எமது மண்ணைக் காத்து நிற்கின்றனர். ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்து செல்பவர்கள் எமது மாவீரர்களே. தமிழனை அழிக்க நினைப்போர்க்கு அழிவு நிச்சயம் என்பதோடு, இந்த மாவீரர்கள் பற்றவைத்துள்ள விடுதலைத் தீயின் எரி நாக்குகளிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் எங்கிருந்தாலும் தப்பி விட முடியாது. 

2008

இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச் சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக் காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக, முப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளிகொள்ளும் இந்த மண் எமக்கே யுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். 

Pin It