கட்டுமரத்திலிருந்து
இற்றுவிழும்
ஒவ்வொரு மரத்துண்டுகளையும்
அடித்துச் செல்லும்
அலையென என்னிலிருந்து
உதிரும் நினைவுகளை
அடித்துச் செல்கின்றன..
உனது சொற்கள்..
=====
அடைப்புக் குறியிட்டு
விளக்கப்படுத்தும் முயற்சிகள்
எதுவும் திருப்தியளிக்கவில்லை..
ஆச்சர்யங்களைத்
தூவிச் செல்லும்
உனது செயல்களுக்கும்
விளக்கம் சொல்ல
முயற்சிக்கப் போவதில்லை..
ஆதி மௌனத்தைத்தான்
இட்டுநிரபப்
வேண்டியிருக்கியது
இந்த இடைவெளிக்கு
ஒரு அடைப்புக் குறியிட்டு..
| நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க... |
கீற்று இணையதளத்திற்கு படைப்புகளை அனுப்ப இங்கே அழுத்தவும். வேறு எந்த இணையதளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். வெளியாகும் படைப்புகளில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அந்தந்த ஆசிரியரின் சொந்தக் கருத்துக்களே! நாகரிகமற்ற/பிழையான பின்னூட்டங்கள் குறித்து editor@keetru.com-க்குத் தெரியப்படுத்தினால், அவை நீக்கப்படும். br> br> |
Comments (0)
Joomla components by Compojoom
| < முன் | அடுத்தது > |
|---|








