சிநேகத்தின்  வேர்கள்
கருகுவதை கண்டு
உயிர்ப்பின் தாள லயம்
ஸ்வரம் தப்பிடும்...

நிகழ்கால நிஜத்திற்கு
இறந்தகால நிழலிற்கும்
நடுவே மனம் வெகுவாய்
அலைப்புறும்...

பொய்யென
தெரிந்தும் மெய் 
அன்பின் வாசனையை
விரும்பும்...

இனம்புரியா ஏதோ ஒரு
உணர்விழை புதிதாய்
நெய்யப்படுவதும்
நெய்யப்பட்ட
அம்மாயத்திரை
சிதறடிக்கபடுவதுமாய்
நீளும் இகற்போரில்
என் நெஞ்சம் துவளும்...

Pin It