நலமா?
என்ற ஒரு கொம்பு
நலம்
என்ற இன்னொரு கொம்பு
அதற்கு இணையாக
பொய்யான புன்னகை
மேல் நோக்கி வளையும்
வால்...

இவை
எப்போதும் உடன் கொண்டு செல்கிறார்கள்...
அவர்களுக்கு
தெரிந்தவர்களுடன்
மட்டும் முட்டிக்கொள்ள ...!

பிறகு
எங்காவது
வரைந்து வைக்கப்பட்ட
ஒரு சாத்தானின் படத்தை
ஏளனமாகப் பார்ப்பார்கள்.....!

அந்த சாத்தான்
அவர்களைப் பார்த்து
நலமா என்று கேட்டுக்கொண்டோ
நலம் என்று பதிலளித்துக்கொண்டோ
வால் நுனியால்
சிரித்துக்கொண்டே இருப்பான்....!!

- கலாசுரன்

Pin It