செங்கதிரோன்
சிறுவாணி
கொல்லையில்
துயில்
எழுந்த நண்பகல்
புறப்பட
தயாராகும்
'சுதந்திரம்' தாத்தாவின்
இறுதி
ஊர்வலம்
மாலை
, தப்பட்ட மரியாதை சகா

மனையுள்
மார்தட்டி ஓலமிடும்
மாதர் சங்கமத்தை விஞ்சி
பெருமகன் பேணிய
பண்ணை புறாக்களின்
'
பொளக்''பொளக்''பொளக்'
கண்ணீரை பீய்ச்சி வரவழைக்கும்

யதார்த்தம் சரிந்த சமுகப் பிணியுள்
'
மனிதம்' சுரம் பிடித்த
ஆர்மோனியம்
ஆசை நட்டு வளர்த்த
அமைதியின் அச்சாணிப் பூக்கள்
அறுபத்து நான்கு புறாக்கள்
எதிர் வரும் நாட்களில்
யார் கூடும் சாவடியில்
மனு சேர்ப்பிக்கலாகும்
மீண்டுமொரு முகவரிக்காக...
நெல் வீசி கொஞ்சிப் பழக
நெஞ்சங்களின் பற்றாக்குறையல்லவே!

காடு சேர்ந்தார் தாத்தா
காரியங்கள் நடந்தேறின
படியேற்றிய பாதம்
பணிந்தனர் பலர்
தகன வளர்ப்பு தயார்
வாக்கின் நம்பிக்கைக்கு
வாய்க்கரிசி மணிகள்
இதயம் பிரிந்த ஒரு துளி ரத்தம்
எங்கோ கசிந்து மடியும்
இருள் கவ்விய வானம்
எழத்துடித்த வேளள
கண்ணில் பட்டது...
சாம்பல் நிற புறாவொன்று
அலகு நிறைய
குருமணி குவியலோடு
!

Pin It