கீற்று இணையதளம் இதுவரை (ஜூலை 2005 முதல் செப்டம்பர் 2010 வரை) shared server-ல் இயங்கி வந்துள்ளது. அதாவது ஒரே server-ல் கீற்று போன்ற பல இணையதளங்களுக்கு இடம் அளிக்கப்பட்டிருக்கும். இந்த வகையில் server-க்கு நாம் கட்ட வேண்டிய தொகை குறைவாக (ஆண்டுக்கு ரூ.3500) இருக்கும்.
தற்போது கீற்றின் பயன்பாட்டு அளவு வரம்பைத் தாண்டி இருப்பதால் dedicated server-க்கு மாறியுள்ளோம். Dedicated server என்றால் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் கட்டவேண்டும்.
கீற்றில் இணையும் சிற்றிதழ்களின் எண்ணிக்கையும், கீற்றிற்கு வரும் படைப்புகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது. எனவே முழுநேர ஊழியர் இல்லாமல், இவற்றை எல்லாம் வலையேற்றுவது மிகவும் சிரமமான செயலாக இருக்கிறது. முழுநேர ஊழியர் என்றால், குறைந்தது மாதம் ரூபாய் ஐயாயிரம் சம்பளம் தர வேண்டும். இதர செலவினங்களையும் கணக்கிட்டால் குறைந்தது ஆண்டுக்கு 2 இலட்ச ரூபாய் வேண்டும்.
எனவே கீற்று தொடர்ந்து வெளிவருவது வாசகர்கள் கையில்தான் உள்ளது. கீற்று வெளிவருவது அவசியம் என்று கருதும் வாசகர்கள் நிதியுதவி அளிக்குமாறு வேண்டுகிறோம்.
நன்கொடை செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:ICICI வங்கிக் கணக்கு எண்: 603801511669
IFSC code - ICIC0006038
Account holder name: Ramesh.R
Branch - Mount Road, Chennai.
நன்கொடை அனுப்பியபின் தங்களது பெயர், அனுப்பிய தொகை குறித்து இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.
கீற்று இணையதளத்திற்கு விளம்பரங்கள் பெற்றுத் தர முடியுமானால், அதுவும் எங்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும்.
என்றும் அன்புடன்
கீற்று நந்தன்.
கைப்பேசி: 99400 97994
| நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க... |
கீற்று இணையதளத்திற்கு படைப்புகளை அனுப்ப இங்கே அழுத்தவும். வேறு எந்த இணையதளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். வெளியாகும் படைப்புகளில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அந்தந்த ஆசிரியரின் சொந்தக் கருத்துக்களே! நாகரிகமற்ற/பிழையான பின்னூட்டங்கள் குறித்து editor@keetru.com-க்குத் தெரியப்படுத்தினால், அவை நீக்கப்படும். br> br> |
-
|2010-09-06 01:10:59 அல்பொன்ஸ்சவுதி அரேபியாவிலிருந்து கொடுக்கும் பணம் பத்தவில்லையா? ஜெயினுலாபுதீன், ஜவாஹிருல்ல ***** கேட்டால் கோடி கோடியாக கொட்டிக் கொடுப்பார்களே..
-
|2010-09-06 10:46:18 elagnairuஅல்பொன்ஸ் நல்ல கற்பனை... தான் செய்வதைத்தான் பிறர் செய்வர்.. என்று கருதுவது இயல்பே... நீங்களும் உங்கள் எண்ணமும் வாழ்க வளமுடன்
-
|2010-09-06 10:59:43 muthukumarDear Keetru, You are doing a marvelous job. This site is very useful. I & my college friends are planning to contribute a small amount to keetru. Your service should continue. -muthu
-
|2010-09-06 16:24:13 Suresh BarathyDear Keetru Editorial Friends, Vanakkam. Keetru is doing very good Job, serving tamil community great. Specially for non residing indians, this community web portal is a gift. We will not allow you to down. We will support. Soon I will be contacting you. Already I had called Mr.Nandan. With great salutation, Suresh Barathy, TANSWA, Dammam, Saudi Arabia
-
|2010-09-06 17:09:19 சூலூர் வீரமணிகீற்று குழுவினருக்கு வணக்கம். என் பெயர் ப.வீரமணி. பெரியார் திராவிடர் கழகத்தில் பேச்சாளராக இருக்கிறேன். இதுவரை நான் கீற்று இணைய தளத்தில் எந்த கருத்தும் பதித்ததில்லை. வெறும் வாசிக்கின்ற வாசகராக மட்டும் தான் இருந்திருக்கிறேன். ஆனால் பல ஆண்டுகளாக கீற்று இணைய தளத்தின் வாசகன் நான். பலருக்கும் இந்த இணைய தளத்தை அறிமுகம் செய்து வைத்திருக்கிறேன். இப்படியொரு நெருக்கடியான சூழலில் சமூகநல நோக்கம் கொண்ட கீற்று இணைய தளத்திற்கு உதவுவதை ஒரு பெரியார் தொண்டனாக சமூக கடமையாகக் கருதுகிறேன். விரைவில் எனது தொகையும் மின்னஞ்சலும் உங்களை வந்து சேரும். நன்றி!
-
|2010-09-07 11:30:54 thi mu ka visuvaasielloraiyum thiituna ippadithaan verum rendu latchaththu alaiyanum... pesamaa enga thalaivaru pugazhthu oru katturai podu... oru function vachchu, nadikalalai aada vittu pon mutippu kodukkirom
-
|2010-09-07 12:57:01 kathiresanகீற்று தமிழ் உலக வரலாற்றில் மிகப்பெரிய பணியை செய்து வருகிறது . முற்போக்கு மற்றும் சமூக நலன் சார்ந்த பல கருத்துக்களை தமிழர் இருக்கும் இடம் எல்லாம் சுமந்து சென்று வரலாற்றுசிறப்பு மிக்க கடமை ஆற்றி உள்ளது . கீற்று வாசகர் வட்டம் உலகம் முழுவதும் இருப்பது சமூகத்தின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்கள் எங்கும் நிறைந்து இருக்கிறார்கள் என்பது நிறுபனமாகி உள்ளது. கீற்று மிகப்பெரிய செய்தி நிறுபனமாக உயர, உயர்த்த வேண்டிய கடமை நமக்கு உண்டு. எங்களை போன்ற மாற்றுக்கருத்து உள்ளவர்களின் கருத்துகளையும் கீற்று வெளியிட்டு வந்தது அதன் பரந்த மனப்பான்மைக்கு உதாரணம் ஆகும். சில வழக்கறிஞர்களின் உதவியை நாடி உள்ளேன். தங்கள் இனைய இதழ் சிறப்பாக வர எங்களால் முடிந்த உதவியை செய்வோம்
-
|2010-09-07 15:15:54 rajanthi mu ka vasagare, Ungal katchi mudiyum neram varapogirathu..... romba addathe... Respected Keetru Friends, No worries. Truth succeeds..........I will give my amount... whoever wants to like Truth should succeed, they can give amount to Keetru......
-
|2011-02-01 17:06:00 S.ANANDWe appreciate your work. All magazines are available in your website. It is very help to us and some other medicinal knowledge are very good idea. Keep it up. Thankyou
-
|2011-05-08 14:31:27 மன்னை முத்துக்குமார்வணக்கம் தோழர், நான் தோழர் ரமேஷ் இருக்கும் இடத்தின் அருகாமையில் இருக்கிறேன், நீண்ட நாளைய கீற்றின் வாசகன். இதுவரை எனது பங்களிப்பை அளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன், விரைவில் தங்களை நேரில் சந்திக்கிறேன். தோழமையுடன் மன்னை.
-
|2012-04-20 15:09:17 Balakrishnan venugopalடியர் கீற்று, எனது பாஸ் டேவிட் அரிமுகம் செய்யப்பட்ட இந்த தலம் மீகவூம் பயணூள்ள ஒண்ரு. Every one must to be read atleast half and hour. thank u Mr.david and this website for give the oppertunity for this. All the best to grow up to KEETRU. Regards, Balakrishnan.
-
|2013-01-02 02:50:07 vincent raj.Dகீற்று மிகவும் பயன் உள்ளதாகவும், நன்மை தருவதாகவும் உள்ளது. தங்கள் சேவைக்கு மிக்க நன்றி. வாழ்க உமது தேசப் பற்று மற்றும் சமுதாய சமவுடமை பற்றும்.
| < முன் | அடுத்தது > |
|---|








