அழியுமே உயிர்களிடத்துக் காதல் - ஆங்கே
அழியாது தமிழ்மீது கொளல்.

உயிர் காக்க முனைவதுபோல் - தமிழ்
மொழி காக்க முயல்.

தமிழ் கற்க பற்றுயரும் - அப்
பற்றுயர தமிழ் வளரும்.

தாழ்நிலம் நோக்கிடும் நீராய் - தாழ்ந்து
கிடக்கும் தமிழ் பாராய்.

பொருள் பலசேர்க்கின் பயனிலை - பயனாம்
தமிழ்ச்சொல் சில சேர்க்கின்.

தன் னிலை உணர் வாகுமாம்
தண்டமிழ் நிலை உணர்வது.

வற்றுமே பாலை வரின் நீராறு
அவ்வாறு வற்றாதே செந்தமிழாறு.

கார்முகில் இருள மயிலாடும் - மன
மாடுமே தமிழிசை கூடிவர.

மழை வேண்டும்போல் மக்கட்கு - தமிழ்
வேண்டு மாம் தமிழர்க்கு.

நிலக்கண் காக்கும் உரம்போல் - தாய்த்
தமிழ் காக்க பயன்படு.

காக்கைக்கும் பொன்குஞ்சாம் தன்குஞ்சு போல்
நம்மோரை இகழ்வது துற.

பன்மொழி கற்பின் பயனென் கொல்
தாய்மொழி கல்லா விடின்.


- த.வெ.சு. அருள் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Pin It