புலவரை இறந்த புகழ்சால் ஞானம்
நிலவரை இறந்த குண்டுகள் அகழியாய்
வினைஞர் தம்மின் இணையிலா அரசை
முனைப்புடன் காக்கும் என்றே நினைத்தும்
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புஉண் நீரினும் மீட்டற்கு அரிதென
செருக்கில் சோம்பி வீழ்ந்தோம் பாரீர்
இருவர் மோதலில் வாய்மை வெல்லாது
விரும்பா விடினும் வலிமையே வெல்லும்
வாய்மை வெல்ல விரும்பும் யாரும்
வாய்மைக்கு வலிமை சேர்க்க வாரீர்
 
(அறிஞர்களும் பகழ்ந்து கூற முடியாத அளவிற்கு மிக உயர்ந்த நிலையில் இருக்கும் மார்க்சிய ஞானம், பாதாளம் வரை எட்டிய அகழியாய் இருந்து, தொழிலாளர்களின் இணையற்ற அரசை முனைப்புடன் காக்கும் என்று நினைத்தும், "கொல்லனின் உலைக் களத்திலே காய்ச்சிய இரும்பு உண்ட  நீர் மீளாது"  (அது போல் சோஷலிசத்திற்கு மாறிய சமூகம் முதலாளித்துவத்திற்குத் திரும்பாது) என்ற செருக்கில் (முதலாளித்துவத்திற்கு எதிரான போரில்) சோம்பி இருந்ததால் வீழ்ந்து விட்டோம். இருவர் மோதும் போது வாய்மை உள்ளவன் வெல்லமாட்டான்; (நாம்) விரும்பாவிட்டாலும் வலிமை உள்ளவனே வெல்லுவான். வாய்மை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறவர்கள் வாய்மைக்கு வலிமை சேர்க்க வேண்டும்.)

Pin It