Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

 

ஈழத் தமிழர் பிரச்சினையில் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை சீர்குலைத்து, ராணுவ மோதலுக்கு ஊக்கப்படுத்தியது இந்தியாவும் - சோனியாவும் தான் என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டைச் சார்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் குழு, ராஜபக்சேவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் சோனியாவும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுபற்றி பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.தேவசகாயம் மற்றும் ‘ஸ்டேட்ஸ்மென்’ ஆங்கில நாளேட்டின் மூத்த செய்தியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சாம் ராஜப்பா ஆகியோர் தனித்தனியாக எழுதிய கட்டுரைகள் - இணையதளங்களில் இடம் பெற்றுள்ளன.

குழுவில் இடம் பெற்றிருந்தவரும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியுமான எம்.ஜி.தேவசகாயம் எழுதிய கட்டுரை:

அண்மையில் உலக நாடுகளையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது ‘சேனல் 4’ தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகள். ஈழத் தமிழர்களை நிர்வாணமாக்கி, கண்களைக் கட்டி, சிங்கள ராணுவம் சுட்டுக் கொல்வதும், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவதும் இதில் இடம் பெற்றுள்ளது. அண்மையில் இலங்கை சென்று திரும்பிய பிரிட்டிஷ் முன்னாள் வெளியுறவு அமைச்சர் டேவிட் மில்லி பாண்ட், பிரான்சு முன்னாள் வெளியுறவு அமைச்சர் பெர்னார்டு கவுச்னார் ஆகியோர், “யுத்தம் முடிந்த பிறகு, தமிழர்கள் நான்காம் தர, அய்ந்தாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகிறார்கள். வெளிநாட்டுக் கொள்கை என்று ஏதேனும் ஒன்று இருக்குமானால், உடனடியாக இந்த மோசமான மனித விரோத நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும்” என்று எழுதியிருந்தனர். இந்த கொடூரமான மனித அவலங்களுக்குப் பின்னால், இந்தியாவின் பங்கு உண்டு என்பது வெளிவராத உண்மை.

2005 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்தியாவின் விருப்பத்துக்கு மாறாக ரணில் விக்ரமசிங்கே தோற்று, ராஜபக்சே வெற்றிப் பெற்றார். ராஜபக்சேவின் வெற்றியை விரும்பாத புதுடில்லி, அவரை அங்கீகரிக்காமல், ஓரம் கட்டி, ராஜபக்சேவை ஒதுக்கி வைத்துவிட்டது. இந்த நிலையில் தந்திரக்காரரான ராஜபக்சே, தன்னை நேர்மையாகக் காட்டிக் கொள்ளவும், இந்தியாவின் ஆதரவைப் பெறவும் விரும்பினார். அதற்காக ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்ள முயன்றார். தமிழ்நாட்டைச் சார்ந்த தமிழின உணர்வு கொண்ட மூத்த அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு ஈழத் தமிழர் அரசியல் தீர்வுக்காக இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையே உறவுப் பாலமாக செயல்படுமாறு கேட்டுக் கொண்டார். கொழும்பிலிருந்து வந்த இந்த வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாட்டில் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரிகள், மூத்த பத்திரிகையாளர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் நானும் (எம்.ஜி. தேவசகாயம்) இடம் பெற்றிருந்தேன். குழுவின் முதல் கூட்டம் 2007 மே மாதம் 10 ஆம் தேதி சென்னையில் நடந்தது. ராஜபக்சேவின் மூத்த ஆலோசகர் கலந்து கொண்டார். இருதரப்பினரும் ஏற்கக்கூடிய அரசியல் தீர்வுக்கான திட்டம் ஒன்றை தயாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தமிழக அதிகாரிகள் குழு கொழும்பு சென்று 2007 ஜூலை 17 அன்று ராஜபக்சேயையும் கொழும்பு உயர் மட்ட அதிகாரிகள் குழுவையும் சந்தித்தது. ராஜபக்சே விரிவாக பேசினார். அவரது பேச்சு மிகவும் ஈடுபாட்டுடனும், ஆக்கபூர்வமாகவும் இருந்தது. தமிழக குழுவின் கருத்துகளை ராஜபக்சே முழுமையாக ஒப்புக் கொண்டார். பிரச்னைகளுக்கான தீர்வு முதலில் அந்த நாட்டு மக்களிடமிருந்தே உருவாக வேண்டும் என்றும், அந்தத் தீர்வுத் திட்டங்கள் சர்வதேச கருத்துகளோடு, குறிப்பாக, இந்தியாவின் கருத்தைப் பெற்று திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் கூறினோம். ராஜபக்சேயும் ஏற்றுக் கொண்டார். இந்த சந்திப்புக்குப் பிறகு, தமிழர்கள் வாழும் வடக்கு - கிழக்குப் பகுதிகளை ஒன்றாக இணைத்து, சுயாட்சி வழங்கும் திட்டத்தை ராஜபக்சே அறிக்கையாகவே வெளியிட்டார். இதைத் தொடர்ந்து தமிழகக் குழு, ராஜபக்சே அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும் தொடர்ந்து பலமுறை சந்தித்து, தமிழர் பிரச்சினைகளைத் தீர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டது. கடைசியாக, இலங்கை சட்ட அமைச்சர், ஆட்சி மொழி ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசிய பிறகு ராஜபக்சேவுடன் முக்கியமான சந்திப்பு 2008 மார்ச் 25 இல் நடந்தது. அப்போது அரசியல் தீர்வு திட்டம் ஒன்று இறுதியாக்கப்பட்டது.

உடனே, கொழும்பிலிருந்த இந்திய தூதரகம் இதை அறிந்து ஆத்திரமடைந்தது. அதன் துணை ஆணையர் ஏ. மாணிக்கம், என்னை சந்திக்க நேரம் கேட்டார். நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு மாலை 5 மணிக்கு வரச் சொன்னேன். ஆனால், அந்த அதிகாரி வரவில்லை. அதற்கு பதிலாக எங்களுடன் பேசிக் கொண்டிருந்த கொழும்பு அதிகாரிகள் குழுவிடம், அங்கீகாரம் இல்லாத நபர்களிடம் எப்படி பேசலாம் என்று இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்தது. பிறகு நான், நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளை விளக்கி, பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.எ. நாயருக்கு 2008 ஏப்ரல் முதல் தேதி விரிவான கடிதம் எழுதினேன். அவர், என்னுடன் பணியாற்றிய அதிகாரி நீண்ட காலப் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு உருவாகியுள்ள இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு நான் கேட்டிருந்தேன். ஆனால், எந்த பதிலும் வரவில்லை” என்று அய்.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி மேலும் பல விவரங்களை ‘ஸ்டேட்ஸ்மென்’ ஏட்டின் ஓய்வு பெற்ற மூத்த செய்தியாளர் சாம் ராஜப்பா, தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழக குழுவினர் அரசியல் தீர்வுத் திட்டத்தை உருவாக்குவதில் வெற்றிப் பெற்ற நிலையில், இந்தியா தனது போக்கை மாற்றிக் கொண்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிராக முழு ராணுவத் தாக்குதலைத் தொடங்குமாறு, ராஜபக்சேவுக்கு பச்சைக் கொடி காட்டியது. பிரபாகரன், உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மன் ஆகியோரின் தலையை வெட்ட வேண்டும் என்றும், இதற்காக எந்த ராணுவ உதவியையும் இந்தியா வழங்கும் என்றும் சோனியா கூறினார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவித்தன. பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கரமேனன், பிரதமர் அலுவலகத்தில் செல்வாக்குள்ள அதிகாரிகள் குழு ஒன்றாக இணைந்து, நாட்டின் நலனைவிட சோனியாவின் விருப்பமே முக்கியம் என்று செயல்பட்டன. அதன் பிறகு, கொடூரமான இனப் படுகொலைகளை ராணுவம் நடத்தியது. அதுதான் ‘சேனல் 4’ வெளியிட்ட படுகொலை காட்சிகள். இலங்கையே இந்தப் புதைகுழியை வெட்டிக் கொண்டுவிட்டது. ‘சேனல் 4’ ஆவணங்களைப் பார்த்து உலக நாடுகள் எல்லாம் கண்டிக்கும்போது, இந்தியா மட்டும் எதுவுமே தெரியாதது போல் கள்ள மவுனம் சாதிப்பதற்கு காரணம் இதுதான். ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ராஜபக்சேவும் அவரது பரிவாரங்களும் போர்க்குற்றவாளியாக நிறுத்தப்படும்போது, புதுடில்லியும், இந்தக் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததிலிருந்து தப்பிவிட முடியாது. அதற்கான மணி ஒலிக்கத் தொடங்கி விட்டது” - என்று சாம் ராஜப்பா எழுதியுள்ளார்.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 maathavi 2011-07-30 17:23
இந்தக் கட்டுரையில் வரும் சில தகவல்கள் ஈழப் போரின்போது நடந்திருக்க வாய்ப்புள்ள சில முக்கியமான ஆனால் நம் எவருக்கும் தெரியாத வேறு சில ரகசியங்களை அறிந்துகொள்ள உதவும் போலத் தோன்றுகிறது.

திரு.தேவசகாயம் ஐ.ஏ.எஸ்., அவர்களின் கூற்றை தெளிவாக ஆய்வுக்குட்படுத ்தினால் - திடுக்கிட வைக்கும் பல உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது.

எடுத்துக்காட்டாக சில:

1) தேவசகாயம் தலைமையிலான குழு இலங்கை அரசினை ( அதாவது ராஜபக்சா கும்பலை) சந்தித்தது பற்றி முதன் முதலில் 28 மே 2011 ஆம் தேதியன்று மே 17 இயக்கம் நடத்திய ஐ.நா.போர்க்குற் ற அறிக்கை தொடர்பான கூட்டத்தில் போன போக்கில் (ஏதோ ஆண்டிபட்டி - உசிலம்பட்டிக்கு ப் போய் வருவது போல) தேவசகாயம் குறிப்பிடுகிறார ். ( பார்க்க - http://www.tamilnet.com/art.html?catid=79&artid=34047 )

2) இதுகுறித்து கூடுதலான செய்திக்கு அவர் நம்மை 50 நாள் காக்க வைத்தார். 12 ஜூலை 2011 ஸ்டேட்ஸ்மேன் இதழில் இதழாளர் சாம் ராஜப்பாவின் சிறப்புக் கட்டுரையின் மூலம் இந்த செய்தி வெளியானது. ( http://www.thestatesman.net/index.php?id=376293&option=com_content&catid=38 )

3)சென்னையில் இருந்து இயங்கிவரும் ”The Weekend Leader" இணைய இதழானது தன்னிலை விளக்கமாக தேவசகாயம் எழுதிய இது போன்ற, ஆனால் பொத்தாம் பொதுவான ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது . ( பார்க்க - http://www.theweekendleader.com/Causes/583/Exclusive:-A-dark-secret.html ). இதில் ஆச்சர்யம் என்னவென்றால், சாம் ராஜப்பாதான் இந்த இணையப் பத்திரிகையின் ஆசிரியர்!

4) தேவசகாயம் தலைமையில் 4 பேர் குழு ஒன்றினை 2007 மே மாதம் இலங்கை அரசு அமைத்ததாக ராஜப்பா கூறுகிறார். ஆனால், தேவசகாயமோ - இதனை ” தமிழ் நாட்டில் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரிகள், மூத்த பத்திரிகையாளர்க ள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளைக் கொண்ட குழு ” என்று - ஏதோ நிறையப் பேர்களைக் கொண்ட குழு ஒன்றினை அமைத்ததுபோலக் குறிப்பிடுகிறார ். அம்புரோஸ் ஐ.ஏ.எஸ். என்பவர் தமிழ்நாடு உள்துறை செயலாளராகவும், மத்திய கப்பல்துறை அமைச்சகத்தில் செயலாளராகவும் இருந்தவர். இவர் இந்தக் குழுவின் இரண்டாவது பிரதிநிதி என்று “சாம் ராஜப்பாவின்” கட்டுரை கூறுகிறது. ( தேவசகாயத்தின் கட்டுரையில் இவர் பெயர் குறிப்பிடப்படவி ல்லை). ( Athena Informics என்ற (சென்னையில் இருந்து இயங்கிவரும்) தனியார் உளவு நிறுவனத்தின் முதன்மை ஆலோசகர் இவர். பார்க்க - http://athenainfonomics.in/?page_id=54 ). மூன்றாவது, நான்காவது நபர்கள் யார் என்பதை ஏனோ ராஜப்பாவின் கட்டுரையும் கூறவில்லை. இந்து ராம், மற்றும் கர்னல் ஹரிஹரன் ஆகியோரே மீதமுள்ள அந்த இருவர் என்று யூகிக்கத் தோன்றுகிறது.

5) 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் ஆண்டு இலங்கைக்கான இந்தியத் தூதுவராக அலோக் பிரசாத் என்பவர் நியமிக்கப்பட்டா ர். லால் பகதூர் சாஸ்திரியின் அந்தரங்க செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், மத்திய ஐ.ஏ.எஸ் பயிற்சிப்பள்ளிய ை நிறுவியவருமான ராஜேஷ்வர் பிரசாத்தின் புதல்வரே இவர். இவரது அண்ணன் அஜய் பிரசாத் 2003 ஆம் ஆண்டின்போது மத்தியப் பாதுகாப்பு செயலாளராக இருந்தவர். இவர்கள் இமாச்சலப் பிரதேசத்தைச் சார்ந்த பிராமணர்கள்.

6) அலோக் பிரசாத்துக்கு முன்பு தூதுவராக இருந்த நிருபமா ராவ் அவர்களின் காலகட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவை யே இந்திய அரசு ஆதரித்தது. ராஜபக்சாவுடன் சுமூக உறவை மேற்கொள்ள அது எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை . இந்தப்போக்கினை மாற்றியமைக்க ராஜபக்சா மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை.

7) அலோக் பிரசாத் தூதுவராக வந்த மறு நாளே அவருக்குத் தனிப்பட்ட ரீதியில் “அபிஷேகம்” செய்யும் பணியை மஹ்ந்த ராஜபக்சாவின் தம்பியும், தந்திரியுமான பசில் ராஜபக்சா ஏற்றுக்கொண்டார் . இதற்கு அவருக்கு உறுதுணையாக நின்றது அவரது வியாபாரப் பர்ட்னரும், அக்கா நிருபமா ராஜபக்சாவின் கண்வருமான திரு ந்டேசன். ( இவர்தான் ராஜப்கசாவின் திருப்பதி விஜயங்களுக்கான டூர் ஆபரேட்டர் ).

8) லால் மகால் என்பது இந்தியாவின் மிகப்பெரிய பாஸ்மதி அரிசிக் கம்பெனிகளில் ஒன்றாகும். அந்தக் கம்பெனி அலோக் பிரசாத்திற்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இந்தக் கம்பெனிக்கு இலங்கைக்கு அரிசி ஏற்றுமதி செய்வதற்கான பலகோடி ரூபாய்க்கான லைசென்சை 2007 தொடக்கத்தில் இலங்கை அரசு வழங்கியது. அன்றிலிருந்து அலோக் இலங்கை அரசின் தாசனாக மாறிப்போனார் என்று கூறப்படுகிறது. (இன்று அவர் இந்தியாவின் துணைப் பாதுகாப்பு ஆலோசகராக - சிவ சங்கர மேனனுக்கு அடுத்த போஸ்டில் - உள்ளார்.)

9) இலங்கை அரசின் இராணுவ-அரசியல் தேவைக்கேற்ப இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்க எவ்வாறு “லாபி” செய்யவேண்டும் என்பதை இலங்கை அரசுக்கு அலோக் கற்றுக்கொடுக்கத ் தொடங்கினார்.

10) அதன் நீட்டிப்பாகவே, அலோக் பிரசாத்தின் தந்தைக்கும், அண்ணன் அஜய் பிரசாத்திற்கும் நெருக்கமானவரும் , நல்ல இமேஜையும் - மத்திய அரசின் மூத்த அதிகார வர்க்கத்தினருடன ் நெருங்கிய உறவினைக் கொண்டவருமான தேவசகாயத்தை அலோக் தேர்ந்தெடுத்திர ுக்கக் கூடும். தமிழ்நாட்டைப் பற்றி நன்கறிந்த தனது நண்பரான - முன்னாள் தமிழக உள்துறை செயலாளரான - தேர்தலில் நேர்மையைக் கடைப்பிடிக்கவேண ்டும் என்று முழங்கிவரும் தனது அமைப்பின் உறுப்பினருமான - அம்புரோசை தேவசகாயம் இந்த டீமின் இரண்டாவது மெம்பராக முன்மொழிந்திருக ்க வேண்டும். இந்து ராமையும், கர்னல் ஹரிஹரனையும் ராஜபக்சாவே சேர்த்துக்கொள்ள ச் சொல்லியிருப்பார்.

11) இந்திய - தமிழக அரசுகளைத் தனது இராணுவ- அரசியல் கொள்கைகளுக்கு இணக்கமாக செயல்பட வைப்பதற்கான திட்டங்களைத் தீட்டுவதற்கும், அதனை “லாபி” செய்வதற்குமான இந்த டீம் தன் முதல் அமர்வை சென்னையில் 2007 மே 10 ஆம் தேதியன்று - ராஜபக்சாவின் ஆலோசகரான சுனிமால் பெர்ணாண்டோ சகிதமாக - தொடங்கியது.

12) இந்தக் குழுவின் கைங்கரியத்தாலேய ே - ” It was after this group’s successful initiative that India changed track and gave the green signal to the Sri Lankan government to go all out to decimate the LTTE without insisting on a political solution to resolve the ethnic crisis” - என்று ஸ்டேட்ஸ்மேன் கட்டுரையில் சாம் ராஜப்பா கூறுகிறார்.

ஆனால், தேவசகாயமோ (சாம் ராஜப்பாவின் இணைய பத்திரிக்கையிலே யே?!!) - “Had New Delhi taken cognizance of this initiative and acted in concert by putting some pressure on President Rajapaksa, the issue would have been resolved and Tamils would now be living in the island with honour and dignity” - என்று சொல்லுகிறார்.

.......................

ஆக, உண்மையில் என்னதான் நடந்தது?

.................................

2007 மே மாதம் தொடங்கி 2011 மே 28 வரை - அதாவது 4 ஆண்டுகளாக - ராஜபக்சா அரசின் லாபியிஸ்டுகளாக இந்தியாவிலும், தமிழகத்திலும் தாங்கள் இருந்துவந்துள்ள ோம் என்ற செய்தியை ஏன் தேவசகாயம் குழு வெளியிடவில்லை?

இப்போது - ஐ.நா. போர்க் குற்ற அறிக்கை, சேனல் 4 போர்க்குற்றக் காட்சிப்படக் காலகட்டத்தில் - இந்த செய்தினை வெளியிடுவதற்கான தேவைதான் என்ன?

விளக்குவார்களா?
...........................
Report to administrator
0 #2 K.Easwaran 2011-08-01 15:01
I find it difficult to believe following statement.

"ஆட்சி மொழி ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசிய பிறகு ராஜபக்சேவுடன் முக்கியமான சந்திப்பு 2008 மார்ச் 25 இல் நடந்தது."

Rajapaksa was not in need of negotiation during the middle of 2008. Sri Lanka army was already deep inside Vanni by that time. Vavunikkulam was already in the hands of Sri Lanka army. Either Rajapaksa must have made false move to extract concession from India or some Indians are trying to white wash India and to ditch Sonia with the Sri Lankan Tamil issue. The truth is and was that India and Sri Lanka had been working very closely from the very start of the last phase of battle which started in July 2006.
Easwaran
Report to administrator
0 #3 revathy 2011-08-01 23:11
arasiyal wathigaluku podumakkal uir onum periya wishyame ilai.lakacha kanakana makalai kondru ulla iwargal kolaikarargal.t handika bada wendiyawargal.i wargaloda saavu koduramathaga than irukum.kadaul oruvan irukardu unmaina kandipa iwargaluku thandanai kedaikum.iwarga loda saavu la than thamilarkaloda aathma santhi adaium.konjam koda manashachi ilatha jenmankal.araka rgal.antha rajapakshey arakan nallawe iruka matan.awanku saavu sekaram warum.
Report to administrator
0 #4 M.JEYAPRAKASH 2012-12-10 15:06
கட்டுரை மிக நன்றாக உள்ளது
Report to administrator

Add comment


Security code
Refresh