மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

நீட் தேர்வு நடத்தும் அமைப்பின் படுதோல்விகள்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

ஊழலில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய மோடி ஆட்சி! 2026 மே 3 அன்று, இந்தியாவின் ஒருங்கிணைந்த மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான...

தமிழ்நாட்டில் மாடு வெட்டத் தடையா?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது....

பாஜகவின் மும்மொழித் திணிப்பை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது!

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பி.எம்., சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் வழியாக ஒன்றிய ஆட்சி திணிக்கும் மும்மொழிக் கொள்கையை தவெக ஆட்சி ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம்...

'திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்' ஆவணப்படத்திற்கு தடை ஏன்?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

மத நல்லிணக்கத்தை பேசும் "திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்" ஆவண படத்தை புதுக்கோட்டையில் திரையிட காவல்துறை மறுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. வீதி கலை இலக்கிய...

ஆலங்குளம் அருகே ஜாதிவெறி தாக்குதல்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

தமிழ் நாடு அரசு மவுனம் கலைக்க வேண்டும்! 29.05.2026 அன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் கிராமத்தில் பட்டியல் இனத்தவர் இல்ல திருமணத்திற்கு...

சமூக மாற்றத்துக்கான சவால்கள் கருத்தரங்கம்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பாபா சாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார், மார்க்ஸ் அறிவு மேடையின்சார்பாக சமூக மாற்றத்தின் இன்றைய தேவைகளும், எதிர்கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பில் 24.05.2026...

காங்கிரஸ் பிளவு - மூன்று இடங்களில் அலங்கோலம்

05 ஜூன் 2026 பெரியார்

வீரவாகு பிள்ளையும் பிரிந்தாராம் எங்கும் காங்கிரசுக்கே வெற்றியென்று கூறப்பட்டாலும் காங்கிரஸ் வெற்றியின் யோக்கியதை இப்பொழுதுதான் வெளிவரத் தொடங்குகிறது....

பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழ் மின்னூல் வடிவில்...

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

    பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.    

தமிழ்நாட்டில் வளர்ச்சி அரசியலா? கவர்ச்சி அரசியலா?

04 ஜூன் 2026 கட்டுரைகள்

தமிழ்நாடு இப்போது பதட்டமான நிலையில் இருக்கிறது. ஊடகங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்று குற்றச் செய்திகளாகவே வருகின்றன. மின்வெட்டு, தண்ணீர்ப்...

மேற்கத்திய மார்க்சியம், கலாச்சார அதிகாரம் மற்றும் அல்காரிதமிக் மேலாதிக்கத்தின் காலம்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

மேற்கத்திய மார்க்சியம் என்பது மார்க்சியச் சிந்தனையின் ஒரு விலகலா அல்லது அதன் மறுமலர்ச்சியா என்பது குறித்த விவாதம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வருகிறது....

தத்துவ அறிவியல்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

முனைவர் பட்டம் என்பதே கல்வியில் மிக உயர்ந்த பட்டமாக திகழ்கிறது. எந்தத் துறை சார்ந்த ஆராய்ச்சி கல்வியில் ஈடுபட்டாலும் தத்துவத்தின் மாமேதை என்றுதான் முனைவர்...

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் புதை படிவ எரிபொருட்களும்

04 ஜூன் 2026 பொது மருத்துவம்

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் ஏன் புதை படிவ பொருட்கள் போல என்று கூறப்படுகின்றன? இவை இரண்டும் நவீன உலகை படைக்க உதவின. ஆனால் மிதமிஞ்சிய அளவில்...

நதி உதிர்தல்

04 ஜூன் 2026 கவிதைகள்

நட்சத்திரங்களெல்லாம்நெல்மணிகளென்றுநாம் தவறாக கணித்த போதுநள்ளிரவில் தங்க வயல்களெல்லாம்கருமையாக உருகி வழிந்தன ஒரு தேக்கு இலையைஅரசமரத்து இலையென்றுநாம் தவறாக...

மொட்டைமாடி மொட்டைமாடி

04 ஜூன் 2026 கவிதைகள்

1. வீடு: உன் உலகம் வீட்டிற்குள்ளேஉன் சொந்தம் மட்டுமே உலகம்.வீட்டுக்கு மேல்உலகமே உனக்குச் சொந்தம். 2. மடி தேடும் படிகள் வீட்டுக்கு மேலும் மேலும்சாய்ந்துக்...

சிறார் இலக்கியமா நீ?!

04 ஜூன் 2026 கவிதைகள்

வளைவு வரைகண்கள் வாங்கிப் போகும் நதிஅதன் பிறகுஎன் கவிதை வாங்கிப் போவதைஅடுத்தூர் ஆத்துமேட்டுஅனார்கலிகள்படிக்க நேரிடலாம் *ஆசையாய் கட்டிக்கொண்டதுவாட்ச்...

கீற்றில் தேட...

நடுவண் அரசு நடத்தும் பள்ளிகளுக்கான பதினோராம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் அண்ணல் அம்பேத்காரை இழிவுபடுத்தும் கேலிப்படம் இடம் பெற்றிருப்பதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த படம்  பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்படும் என்று அறிவித்த நடுவண் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், அந்த படம் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றதுக்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.

ambedkar_240இது போதாதா பார்ப்பனிய ஆதிக்க கும்பலுக்கு. கருத்து விடுதலையின் மீதான தாக்குதல் இது என விண்ணுக்கும் மண்ணுக்கும் தாவிக் குதிக்கிறார்கள். புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் கே.என்.பணிக்கரில் ஆரம்பித்து இந்து ஆங்கில ஏடு, புதிய தலைமுறை தொலைக்காட்சி அம்பிகள் வரை கேலிப்படத்தை எதிர்த்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பாய்ந்து குதறுகிறார்கள். கேலிப்படம் நீக்கப்பட்டதைக் கண்டித்து தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் [NCERT] தலைமை ஆலோசகர் யோகேந்திர யாதவ்வும் அதன் உறுப்பினர் சுகாசு பால்சிகரும் தங்கள் பதவியை விட்டு விலகி இருக்கிறார்கள்.
 
இவை அனைத்தும் மொத்தத்தில் நமக்கு உணர்த்துவது "இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறாங்க. அதெல்லாம் அந்த காலம். முதல்ல நீங்க இந்த சாதிவாரி கோட்டா ரிசர்வேசன் இதுலேர்ந்து வெளிய வாங்க, எல்லாருக்கும் சம வாய்ப்பு இருக்கணும் சார்" என்று நமக்கு அறிவுரை சொல்லும் யோக்கியர்கள் வாழும் இந்தியாவில் சாதீய கண்ணோட்டம் எந்த அளவுக்கு கெட்டித்து போய் கிடக்கிறது என்பதைத்தான்.

ஆண்டொன்றுக்கு பல லட்சம் உரூவாக்கள் கட்டணம் வசூலிக்கும் மேட்டுக்குடி பள்ளிகளின் மாணவர்களோடு, புழுத்துப்போன அரிசியில் சமைத்துப் போடும் இலவச மதிய உணவை சாப்பிட்டு விட்டு அரசுப் பள்ளி மாணவர்கள் சம அளவில் போட்டிபோட வேண்டும் எனச் சொல்லும் இந்த காரிய கிறுக்கன்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களை இழிவுபடுத்தத் தவறுவதே இல்லை. அந்த வகையில்தான் தான் வாழ்ந்த காலமெல்லாம் பார்ப்பனிய ஆதிக்க கும்பலுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அண்ணல் அம்பேத்கர் பாடப்புத்தகத்தின் வாயிலாக இழிவுபடுத்தப்பட்டுள்ளார்.

சரி. அவர்கள் வாதம்தான் என்னவென பார்ப்போம்.

இது அறுபது ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டது. அப்போது உயிருடன் வாழ்ந்த அம்பேத்கரே எதிர்க்கவில்லை. இப்போது எதிர்க்கலாமா?

அந்தப் படத்தை நீக்குவது கருத்து விடுதலையை பறிப்பதாகும்.

இந்த கேலிப்படம் ஆறு ஆண்டுகளாக பாடத்தில் உள்ளதாம். இவ்வளவு காலம் அமைதியாக இருந்து விட்டு திடீரென எதிர்க்கலாமா?

இதைத்தான் நாக்கை சுழற்றி சுழற்றி, நீட்டி முழக்கிப் பேசியும், பக்கம் பக்கமாக எழுதியும் தள்ளுகிறார்கள்.

நாம் கேட்கிறோம். அய்யா, அறிவாளிகளே!

அறுபது ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்தப் படத்தை கால, இடப் பொருத்தமின்றி பாடத்தின் இடையில் சொருகி இருப்பது கெட்ட உள்நோக்கம் கொண்டதா இல்லையா? இந்த படம் "அரசியல் சட்ட செயல்பாடு" [constitution at work] என்ற பாடத்தில் இடம் பெற்றுள்ளது. அரசியல் சட்டத்தின் செயல்முறைகளை விளக்கும் பாடத்தில் அரசியல் சட்டம் வகுக்கும் பணி மிகவும் 'மெதுவாக' நடந்தது என்று சொல்வது பொருத்தப்பாடு உடையதா என்ன? அம்பேத்கர் குறித்து ஒரு மட்டமான அபிப்பிராயம் மாணவர்கள் மனதில் ஏற்படவேண்டும் என்ற இழிவான நோக்கமின்றி வேறு என்ன காரணத்திற்காக இந்தப் படம் வைக்கப்பட்டிருக்கும்?
 
கருத்து விடுதலையை நாங்களும் மதிக்கிறோம். அந்தப் படத்தை வரைந்த சங்கர் பிள்ளையை யாரும் தகாத சொற்களால் திட்டவில்லை. அந்த கால கட்டத்தில் இருந்த அரசியல் நிலைமை குறித்த ஒரு கருத்தை சொல்லும் கேலிப்படம் என்ற அளவில் அதனை ஏற்கிறோம். ஆனால் அதனை பாடப்புத்தகங்களில் கொண்டு வந்து திணிப்பதைத்தான் ஏற்க முடியாது. இதே போன்று நேருவை, காந்தியாரை, படேலை,
சாவர்க்கரை விமர்சிக்கும் பல கருத்துப்படங்களை நாம் காட்ட முடியும். அவற்றையெல்லாம் அரசியல் பாடத்தில் வைப்பார்களா?

மாட்டார்கள். காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆறு ஆண்டுகள் ஏன் எதிர்ப்பின்றி கழிந்தனவென்றால் அந்தப் படம் தலித் விடுதலையை உண்மையாக நேசிப்போரின் கண்ணில் படவில்லை என்று பொருள். அவ்வளவுதான். இப்போது எதிர்ப்பவர்கள் முன்னர் யாருக்காகவும் அஞ்சி அமைதி காக்க வேண்டிய அவசியம் இல்லை.

அம்பேத்கர் தனது ஆடையையே ஒரு ஆதிக்க எதிர்ப்புக் குறியீடாக பயன்படுத்தினார். மேற்கத்திய உடையை பார்ப்பனமயமாக்கி, பஞ்சகச்சம் டர்பன் மேற்சட்டை [மேல்கோட்டு] என அணிந்த அன்றைய பெரும்புள்ளிகள் நடுவே முழுமையாக மேற்கத்திய பாணியில் ஆடை அணிந்து கால் மேல் கால் போட்டு அவர் அமர்ந்திருக்கும் கம்பீரம் கண் கொள்ளா காட்சியாகும். அவரது இறப்புக்கு முன்னும் பின்னும் அந்த அம்பேத்கர் என்ற சொல்லே சாதி ஆதிக்க எதிர்ப்பின் குறியீடாக திகழ்கிறது. அந்த குறியீட்டின் மீது இழிவை சுமத்த வேண்டும் என்ற வெறியோடு செய்யப்படும் இத்தகைய‌ அடாத செயல்களை உண்மையான தலித் விடுதலையை நேசிப்போர் அனுமதிக்க முடியாது.