மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

நீட் தேர்வு நடத்தும் அமைப்பின் படுதோல்விகள்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

ஊழலில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய மோடி ஆட்சி! 2026 மே 3 அன்று, இந்தியாவின் ஒருங்கிணைந்த மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான...

தமிழ்நாட்டில் மாடு வெட்டத் தடையா?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது....

பாஜகவின் மும்மொழித் திணிப்பை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது!

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பி.எம்., சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் வழியாக ஒன்றிய ஆட்சி திணிக்கும் மும்மொழிக் கொள்கையை தவெக ஆட்சி ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம்...

'திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்' ஆவணப்படத்திற்கு தடை ஏன்?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

மத நல்லிணக்கத்தை பேசும் "திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்" ஆவண படத்தை புதுக்கோட்டையில் திரையிட காவல்துறை மறுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. வீதி கலை இலக்கிய...

ஆலங்குளம் அருகே ஜாதிவெறி தாக்குதல்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

தமிழ் நாடு அரசு மவுனம் கலைக்க வேண்டும்! 29.05.2026 அன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் கிராமத்தில் பட்டியல் இனத்தவர் இல்ல திருமணத்திற்கு...

சமூக மாற்றத்துக்கான சவால்கள் கருத்தரங்கம்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பாபா சாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார், மார்க்ஸ் அறிவு மேடையின்சார்பாக சமூக மாற்றத்தின் இன்றைய தேவைகளும், எதிர்கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பில் 24.05.2026...

காங்கிரஸ் பிளவு - மூன்று இடங்களில் அலங்கோலம்

05 ஜூன் 2026 பெரியார்

வீரவாகு பிள்ளையும் பிரிந்தாராம் எங்கும் காங்கிரசுக்கே வெற்றியென்று கூறப்பட்டாலும் காங்கிரஸ் வெற்றியின் யோக்கியதை இப்பொழுதுதான் வெளிவரத் தொடங்குகிறது....

பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழ் மின்னூல் வடிவில்...

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

    பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.    

தமிழ்நாட்டில் வளர்ச்சி அரசியலா? கவர்ச்சி அரசியலா?

04 ஜூன் 2026 கட்டுரைகள்

தமிழ்நாடு இப்போது பதட்டமான நிலையில் இருக்கிறது. ஊடகங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்று குற்றச் செய்திகளாகவே வருகின்றன. மின்வெட்டு, தண்ணீர்ப்...

மேற்கத்திய மார்க்சியம், கலாச்சார அதிகாரம் மற்றும் அல்காரிதமிக் மேலாதிக்கத்தின் காலம்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

மேற்கத்திய மார்க்சியம் என்பது மார்க்சியச் சிந்தனையின் ஒரு விலகலா அல்லது அதன் மறுமலர்ச்சியா என்பது குறித்த விவாதம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வருகிறது....

தத்துவ அறிவியல்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

முனைவர் பட்டம் என்பதே கல்வியில் மிக உயர்ந்த பட்டமாக திகழ்கிறது. எந்தத் துறை சார்ந்த ஆராய்ச்சி கல்வியில் ஈடுபட்டாலும் தத்துவத்தின் மாமேதை என்றுதான் முனைவர்...

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் புதை படிவ எரிபொருட்களும்

04 ஜூன் 2026 பொது மருத்துவம்

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் ஏன் புதை படிவ பொருட்கள் போல என்று கூறப்படுகின்றன? இவை இரண்டும் நவீன உலகை படைக்க உதவின. ஆனால் மிதமிஞ்சிய அளவில்...

நதி உதிர்தல்

04 ஜூன் 2026 கவிதைகள்

நட்சத்திரங்களெல்லாம்நெல்மணிகளென்றுநாம் தவறாக கணித்த போதுநள்ளிரவில் தங்க வயல்களெல்லாம்கருமையாக உருகி வழிந்தன ஒரு தேக்கு இலையைஅரசமரத்து இலையென்றுநாம் தவறாக...

மொட்டைமாடி மொட்டைமாடி

04 ஜூன் 2026 கவிதைகள்

1. வீடு: உன் உலகம் வீட்டிற்குள்ளேஉன் சொந்தம் மட்டுமே உலகம்.வீட்டுக்கு மேல்உலகமே உனக்குச் சொந்தம். 2. மடி தேடும் படிகள் வீட்டுக்கு மேலும் மேலும்சாய்ந்துக்...

சிறார் இலக்கியமா நீ?!

04 ஜூன் 2026 கவிதைகள்

வளைவு வரைகண்கள் வாங்கிப் போகும் நதிஅதன் பிறகுஎன் கவிதை வாங்கிப் போவதைஅடுத்தூர் ஆத்துமேட்டுஅனார்கலிகள்படிக்க நேரிடலாம் *ஆசையாய் கட்டிக்கொண்டதுவாட்ச்...

கீற்றில் தேட...

தமிழீழ விடுதலையும் தமிழீழ இன அழிப்பும்: சர்வதேச அங்கீகாரமும் தமிழகத் தமிழர்களின் முன்னெடுப்பும்

மூன்று ஆண்டுகள் முடிந்தும் தமிழீழத்தில் இன அழிப்பு தடுக்கப்படவில்லை. விடுதலைப் போரில் தமிழர்களைக் காத்த போராளிகளுக்கு எதிராக சர்வ தேசம் தனது சட்டங்களைப் பயன்படுத்தி அந்த மக்கள் கொன்று குவிக்கப்பட மறைமுகமாகவும், நேரடியாகவும் துணை செய்து, தற்போது தனது சுய லாபங்களுக்காக இலங்கையுடனும், இலங்கைக்கு எதிரான அணி என்றும் பிரிந்து நிற்கிறது. இரு அணிகளுமே தமிழர்களின் விடுதலைப் போரினை அங்கீகரிக்கவில்லை என்பது மட்டுமல்ல தனது நகர்வுகளில் தமிழர்களுக்கான உரிமையைப் பற்றிய குறிப்புகளை தவிர்த்தே வருகின்றன. தமிழீழத் தமிழர்கள் தங்களது அரசியல் கோரிக்கைகளை முன்னெடுப்பதில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு இருக்கக்கூடிய இந்த காலத்தில் கூட்டு செயல்பாட்டு வழிமுறைகளையும், சர்வதேச அளவில் இவ்வாறு பாதிக்கப்பட்ட இனங்கள் தாங்கள் முன்னெடுத்த வெற்றிகரமான வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படுவதும் அவசியமாகிறது. குறிக்கோள் ஒன்று என்றபோது பல்வேறு அமைப்புகளாக பிரிந்து நிற்பது என்பதை உண்மையிலேயே பிளவாகக் கருதமுடியாது. தங்களது குறிக்கோளிற்காக பல தளங்களில் தாங்கள் நம்பும் வழிமுறைகளில் நமது சமூகம் முன்னேறுகிறது என்றே நாங்கள் கருதுகிறோம்.

ஒற்றைக் குறிக்கோளாகிய 'தமிழீழ விடுதலை'யை மேலும் கூர்மையான போராட்டங்களின் வழியே நாம் முன்னெடுப்போம். இவ்வகையில் தமிழீழத்தில் நடைபெற்றது இன அழிப்பு என்பதையும், அதனூடே நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனப்படுகொலையையும் சர்வதேச மக்கட் சமூகத்தின் கவனத்தில் பதிய வைத்தல் அவசியம். இது சர்வதேச அரசுகளை மட்டுமே கணக்கில் எடுக்கும் செயல் அல்ல. 2009இல் இந்தியாவில் காங்கிரஸ் அரசு பதவியேற்ற கணத்தில் மன்மோகன் சிங்கும், சோனியாவும் சீக்கிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காய் பகிரங்க மன்னிப்பு கோரினர். அப்போது சீக்கிய சமூகத்தின் குரலாக பதியப் பெற்றது, ‘சீக்கியர்களுக்கு நிகழ்ந்தது ஒரு இனப்படுகொலையே என்கிற அங்கீகாரமே நாங்கள் எதிர் நோக்கும் கோரிக்கை’ என்றார்கள்.

ஏப் 24, 1915இல் தங்களுக்கு நேர்ந்தது ஒரு இனப்படுகொலை என்று அங்கீகரிக்கப்படுவதற்காக ஆர்மீனியர்கள் இன்றும் போராடுகிறார்கள். இதன் தொடர்ச்சியாகவே இந்த வருட துவக்கத்தில் பிரான்சு நாட்டு அரசாங்கத்தில் இதைப் பற்றிய விவாதங்கள் நடைபெற்றன. ஆர்மீனியர்கள் கடந்த 95 வருடங்களாக போராடுகிறார்கள். http://www.nytimes.com/2012/01/24/world/europe/french-senate-passes-genocide-bill-angering-turks.htmlhttp://www.nytimes.com/2012/02/29/world/europe/french-bill-on-armenian-genocide-is-struck-down.html

இவை அனைத்தும் தங்களுக்கு நிகழ்ந்த வரலாற்று அநீதியை நிரூபிக்கவும் தங்களது விடுதலை கோரிக்கையை வலுப்படுத்தவும் நடைபெறும் போராட்டங்களாகும். தமிழர்களாகிய நாமும் இந்த சூழலில் இன்று சர்வதேச அளவில் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். குறிப்பாக தமிழகத் தமிழர்கள், இந்திய அரசு இந்த இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்குதலும் அதன் மூலமாக சிங்களம் தாண்டி இந்த இனப்படுகொலையில் பங்கெடுத்த அனைவரையும் சிறைப்படுத்துதலை வென்றெடுப்பதும் அவசியமும், கட்டாயமும் ஆகிறது.

நாசிக்களின் ஆட்சியில் யூதர்களுக்கு நடைபெற்றது இனப்படுகொலையல்ல என ஐரோப்பிய நாடுகளில் பேசுவது சட்டப்படி குற்றமாக்கப்பட்ட சட்ட இயற்றலை நாம் அறிவோம். இதே போன்றதொரு சட்டமியற்றலுக்காக ஆர்மீனிய மக்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதே வகையில் தமிழர்களும் போராடுதல் அவசியம். தாங்கள் குடியிருக்கும் நாடுகளில் இத்தகைய சட்டங்களைக் கொண்டு வருவதற்கு நாம் போராட வேண்டும். அந்த வகையில், தமிழீழத்தில் இனப்படுகொலை நடைபெறவில்லை எனப் பேசுவது, எழுதுவது, பதிவு செய்வது சட்டப்படி தண்டனைக்குரிய செயலாக மாற்றும் வகையில் சட்டங்களை அந்த நாடுகள் நிறைவேற்ற செயல்புரிய வேண்டும். (http://en.wikipedia.org/wiki/Laws_against_Holocaust_denial).

சட்டங்களை விட விவாதத்தின் மூலம் வென்றெடுத்தல் அவசியம் என்றாலும் தற்போதைய நமது பாதுகாப்பிற்கு உத்திரவாதமற்ற நிலையிலும், அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலும் இத்தகைய சட்டங்கள் நமக்கு பெரிதும் உதவியாக அமையும். இந்தவகையில், இனப்படுகொலை நடந்த மே மாதத்திய நமது போராட்டங்கள் முக்கியமானவையாக மாறுகின்றன. வரும் மூன்றாமாண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள் சம்பிரதாயங்களாக மட்டுமே நிகழ்ந்துவிடாமல் இந்த 'இன அழிப்பு' அங்கீகாரத்தை நோக்கியதாகவும், தமிழீழ வாக்கெடுப்பினை மையப்படுத்தியதாகவும் அமையவேண்டும். ஏனெனில் நமக்கு நடந்த இனப்படுகொலையும்-இன அழிப்பும் என்பது நாம் விடுதலையை வேண்டிப் போராடியதால் நிகழ்ந்ததே ஆகும். எனவே நமது விடுதலைக் கோரிக்கையை நினைவுபடுத்துவதும் இன அழிப்பினை குறிப்பதுமாக இருக்கும் பட்சத்தில் தமிழர் வரலாற்றுச் சின்னங்கள், மொழி உள்ளிட்டவைகளை சிங்கள அரசின் அழிப்பில் இருந்து மீட்க பேருதவியாக அமையும்.

சென்ற ஆண்டில் ஜூன் 26 ஐ.நாவின் சித்திரவதைக்கு எதிரான தினத்தில் சென்னையில் ஐ.நாவினதும் ஏனைய நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்காகவும் சென்னை மெரினா கடற்கரையில் பெரும் நினைவேந்தல் நடத்தப்பட்டது. கிட்டதட்ட 50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், உணர்வாளர்கள், தலைவர்கள், வேற்று மொழி மக்கள் கலந்து கொண்டு தமிழீழத்தில் நடைபெற்றது ஒரு இனப்படுகொலை என்பதான கோரிக்கைக்கு வலுசேர்த்தார்கள். இதனடிப்படையில் இந்த ஆண்டு இனப்படுகொலை வாரத்தில் மே மாதம் 20ஆம் நாள் சென்னை மெரினாவில் பொதுமக்கள் பங்கேற்கும் நினைவேந்தல் கீழ்வரும் இரண்டு கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெறவேண்டும் என விரும்புகிறோம்.

1. தமிழீழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை உள்ளிட்ட இன அழிப்பே.

2. தமிழீழ விடுதலைக்கான ஐ.நாவின் பொது வாக்கெடுப்பு உடனடியாக நடைபெற வேண்டும், குற்றவாளிகள் சர்வதேசத்தால் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படல் வேண்டும். இதுவே சர்வதேசம் நேர்மையாக தமிழர்களிடத்தில் நடந்து கொள்வதன் அடிப்படை. ஆகவே உடனடியாக வாக்கெடுப்பை நடத்தி செயல்படு.

இந்த கருத்துப் பதிவுகளை மக்கட் சமூகங்களிடயே ஏற்படுத்தவும், அரசுகள் கவனத்தில் எடுக்கவும், அறிவுச்சீவிகள்-கலைஞர்கள் இந்த கோரிக்கைகளை மேலும் கூர்மைப்படுத்தவும் இந்த நினைவேந்தல் சென்னை மெரினாவில் மே 20 ஆம் தேதி நடைபெறுதல் அவசியமாகிறது. இந்த நிகழ்வு மே பதினேழு இயக்கம் மட்டுமே நட்த்துகிற நிகழ்வாக அமையாமல் அனைத்து தோழமை இயக்கங்களும் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டில் இருந்து மேற்கண்ட கோரிக்கைகள் உள்ளடக்கிய முழக்கங்களை முன்வைத்து இந்த நினைவேந்தலில் பங்களிக்க வேண்டுகிறோம்.

இந்த நிகழ்வை தங்களுடைய சொந்த நிகழ்வாக மாற்றி, தங்களுடைய இயக்கத்தின் பெயரிலேயே அதற்கான பரப்புரைகளை மேற்கொள்ளுதலை வரவேற்கிறோம். மே பதினேழு இயக்கம் ஒழுங்கமைவுப் பணிகளை மேற்கொள்ளக் கூடியதாக செயல்படும். மேலும் விருப்பமுள்ள அமைப்புகள் எங்களது ஒழுங்கமைப்பு பணிகளில் பங்கெடுத்து, பணியை மேலும் செழுமை பெறச்செய்ய உதவுமாறும் வேண்டுகிறோம். 2009 இல் தமிழீழ மக்களின் ரத்தம் கலந்த அதே வங்கக்கடலின் கடற்கரையில் மே 20, 2012 ஆம் நாள் மாலையில் கண்ணகி சிலையின் அருகே ஒன்று கூடி நமது வணக்கங்களை தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கும், பொது மக்களுக்கும் செலுத்துவோம். நாம் இணைவோம்.

மே பதினேழு இயக்கம்.
தொடர்பு: 9444146806