ஆறு அறிவுடன் பிறந்தவர்கள் மனிதர்கள். மற்றவைகள் பகுத்தறிவு இல்லா உயிரினங்கள். மனிதர்களுக்கு கூடுதல் அறிவு என்பது பகுத்தறிவே. எதையும் பகுத்தறிவதுதான் மனித குணம். அனைத்துச் செயல்பாடுகளும் பகுத்தறிந்து தான் செயல்படுகின்றன. உறவு முறைகள் வைத்து வாழ்வது மனிதர்கள். எதை, எப்படிச் செய்யலாம், அதனால் என்ன நடக்கும் என்பதை அறிந்தே செயல்படுகின்றனர் மனிதர்கள்.

கடவுள் என்பது கற்பனையே. கடவுளால் எதுவும் நடக்காது. மன அமைதிக்காகக் கோவில்களை மையமாக வைத்து குறைகளைப் பலர் முறையிட்டு, எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார் என்று நினைத்து மன அழுத்தமின்றி செயல்படு கின்றனர். சிலர் மருத்துவர்களிடம் முறையிட்டு மன அமைதி அடைகின்றனர். மன அமைதியுடன் பகுத்தறிந்து செயல்பட் டால் நன்மைகள் பல கிடைக்கும். இதை உணர்ந்தவர்கள் தான் நாத்திகர்கள்.

குறிசொல்பவன் தொடர்ந்து குறிசொல்லிக்கொண்டு மற்றவர்களின் வாழ்வை உயர்த்துவதாகவும் வளமடையச் செய்வதாகவும் கூறி, கூலி வாங்கி வாழ்க்கை நடத்துகிறான். குறிசொல்லிகள் எப்படி எல்லாம் குறி சொன்னால் கேட்பார்கள் என்பதை அறிந்து குறிசொல்கின்றனர். பொய்யான குறிகளைச் சொன்னால் வருமானம் கிடைக்கும் என்பதால், தொடர்ந்து சொல்கின்றனர். குறிசொல்பவன் பணத்திற்காகச் சொல்கின்றான் என்பதை உணர்வதே பகுத்தறிவு.

கரடுமுரடான கல்லை ஒரு சிற்பி அழகான சிற்பாகச் செதுக்குகின்றான். அப்படிச் செதுக்கப்பட்ட சிற்பங்களைக் கடவுளாய் வைத்து மக்களிடம் காணிக்கை என்ற பெயரில் தொடர்ந்து பறித்து, தின்று கொழுத்து வருகின்றனர். பார்ப்பனர்கள் ஆனால் காணிக்கை கொடுத்தவன் கொழுக்கவில்லை. ஆடு, மாடு, பன்றி, ஒட்டகம் மேய்த்துக் கொண்டு அப்படியே உள்ளனர்.

கோயில்களில் இப்பொழுது பணம் கொடுத்தால் சிறப்புச் சலுகை கிடைக்கின்றது. கோவில்களில் பூசாரிகள், நிர்வாகிகள் செய்யும் சிலைத் திருட்டு, பொருட்கொள்ளை, பொய்க்கணக்கு, பாலியல் தொல்லை, கொலைகள் போன்ற செயல்களில் ஈடுபடும் இவர்கள் தண்டனை பெறுவதில்லை. இதை உணர்ந்து பொது மக்கள் கோயிலைவிட பள்ளிக்கூடத்தையே வளர்த்தெடுக்க வேண்டும். கல்வியறிவையும், மனிதநேயத்தையும் வளர்த்தெடுப்பதே பகுத்தறிவு, பகுத்தறியும் அனைவரும் நாத்திகர்களே.

Pin It