காலா காலத்தில்
மழையும் பெய்தது
தேவைக்கும் மேலாக
வெயிலும் காய்ந்தது
பூ விரியும் பருவத்தில்
பனியும் பெய்தது
மகரந்தம் பரவ
காற்றும் வீசியது
இலக்கினும் மேலாய்
விளைச்சல் வந்தது
வழக்கம்போல் வருமானம்
வட்டிக்கே தீர்ந்தது
விதைத்தவன் வாழ்க்கை
விளையாத பதரானது.

தென்றலுக்குக் கண்ணில்லை

திறந்து வைத்த சன்னலில்
கடந்து வரும் காற்றுக்கு
விளக்கு மாடத்தில் எரிவது
எண்ணெய் தீபமென்று
தெரிவதில்லை.

Pin It