ஒடம்புக்குத் தினம் கீர;
ஒதவாது;
நிக்கீர, மொறக்கீர.

*

போராடி, துன்பதுயர வாழ்க்கை
எதற்கு?
கடைசியில் சாவதற்கு.

*

"நெல்வயல்' என்றால் என்ன?
ஒருநாள் கேட்கும்;
உழவன் வீட்டுக் குழந்தை.

*

உழுத நிலமாய் இருந்த
மருத நிலம்;
இப்போது அழுத நிலம்.

*

அழும் - சிரிக்கும்;
தூக்கத்தில் குழந்தை;
வாழ்க்கையின் முகவரி.

- சு.பொன்னியின் செல்வன்

Pin It