"அம்பேத்கரால்தான் நான் பிரதமர் ஆனேன். அவர் இல்லாவிட்டால் நான் எங்கு இருந்து இருப்பேனோ?'' என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 20.04.2015 அன்று புதுதில்லியில் டாக்டர் அம்பேத்கர் பன்னாட்டு மய்ய அடிக்கல் நாட்டு விழாவில் பேசியிருக்கிறார்! அம்பேத்கர் என்ற புரட்சியாளரை – அவர் கொள்கைகளுக்கு நேர் எதிராக இருப்பவர்கள்கூட – புறக்கணித்து விட முடியாது என்பதற்கான சான்று இது!

அம்பேத்கரின் 125 ஆவது பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளுமே இந்த ஆண்டு முழுவதும் அவரைக் கொண்டாட முடிவு செய்துள்ளன. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை ஒருங்கிணைத்து, தலித் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை விவாதிக்க வேண்டும் என்று சி.பி.எம். கட்சி வலியுறுத்தியுள்ளது. சாதிப்பாகுபாடு எனும் இனவெறியை முடிவுக்கு கொண்டுவர அய்ரோப்பிய நாடாளுமன்றம் விவாதங்களை நிகழ்த்தி (10.10.2013) தீர்மானங்களை நிறைவேற்றும்போது, இந்திய நாடாளுமன்றம் இதை விவாதிக்க முன்வராமல் அம்பேத்கரை வானளாவப் புகழ்வது மோசடியே.

சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்மங்களை ஒருபுறம் உமிழ்ந்து கொண்டு, தலித் மக்களின் வாழ்வாதாரங்களை ஒவ்வொன்றாகத் தடைசெய்து கொண்டு வரும் இந்து வெறி கட்சியான பா.ஜ.க. ஏன் அம்பேத்கரை புகழ்கிறது? அம்பேத்கர் லண்டனில் வாழ்ந்த வீட்டை 40 கோடி ரூபாய்க்கு வாங்கும் பா.ஜ.க. அரசு, அவருடைய விலைமதிப்பற்ற நூல் தொகுதிகளை வெளிவராமல் முடக்குகிறது. தலித் மக்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்கும் அவர்களை இந்து மதத்திலேயே நீடித்திருக்கச் செய்வதற்கும் அம்பேத்கரை ஒரு புறம் புகழ்ந்து கொண்டே மறுபுறம் அவர் மறுதலித்த – இந்து மதம், கருத்தியல், பண்பாடு, அரசியல் என அனைத்தையும் – இந்துத்துவ ஆட்சி செயல்படுத்துவதில் என்பதை இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் உணர வேண்டிய தருணமிது.

அதன் ஒரு முக்கிய செயல்திட்டம்தான் "கர்வாப்சி' (தாய் மதம் திரும்புதல்).இந்து மதத்தை மறுதலித்த மக்களையும் இந்துக்களாக்கும் செயல்திட்டம். தேவாலாயங்களையும், மசூதிகளையும் தாக்குவது; இந்து குறியீடுகளுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களை தேச விரோதிகளாக சித்தரிப்பது, இதற்கு ஆதரவாக ஊடகங்களும் நீதிமன்றங்களும் செயல்படுகின்றன.

இவர்களின் செயல்திட்டத்தை எல்லாம் பெரும்பான்மை மக்களின் நலனுக்கு எதிரனதாக இருப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது. இந்த பெரும்பான்மைவாதம், தேசியம் நலன் என்பதைத் தகர்க்க வேண்டும் எனில், இந்துக்கள் பெரும்பான்மையினர் என்ற கருத்தியல் தகர்க்கப்பட வேண்டும், தலித், பிற்படுத்தப்பட்ட, மதச் சிறுபான்மை மக்கள் என்ற நேர்மறையான அடையாளங்கள்தான் முன்வைக்கப்பட வேண்டும். பெரும்பான்மை மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள "இந்து' அடையாளம் தகர்க்கப்பட வேண்டும், சட்ட ரீதியாக, பண்பாட்டு ரீதியாக, கருத்தியல் ரீதியாக

நேர்மறையான அடையாளத்தை முன்னிறுத்தியே "இந்து பெரும்பான்மை' வாதம் தகர்க்கப்படவேண்டும். இவையெல்லாம் தொடர்ச்சியாக மக்களிடையே பரப்புரையாக மேற்கொள்ளப்படாததால்தான் இன்றைக்கு சமூக நீதிக்குப் பேர்போன தமிழ்நாட்டிலேயே தாங்கள் விரும்பாத ஆணாதிக்க, பெண்ணடிமைத்தனமான, இந்து அடையாளத்துடன் கூட தாலியை அகற்றுவதற்குகூட இங்கு உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கர் பிறந்த நாளில் பொதுமக்கள் இணைந்து வெளிப்படையாக தாங்கள் விரும்பும் மாட்டிறைச்சையை உண்பதற்குக்கூட உரிமை மறுக்கப்பட்டுள்ளது. எழுதுவதற்கும் பேசுவதற்குக்கூட உரிமை இல்லை என்று கிளர்ந்தெழும் அறிவிஜீவிகள்கூட இவ்வளவு வெளிப்படையான கருத்துச் சுதந்திர மீறல் குறித்து கிளர்ந்தெழவில்லை.

மாட்டிறைச்சியை உண்ண பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அரசு தடைவிதித்திருக்கிறது எனினும் கருத்துச் சுதந்திரவாதிகளின் குரல், தடையை மீறி செயல்படவில்லை. தலித் மக்கள் விரும்பி உண்ணும் உணவை திண்பதற்கு தடை, மனிதன் உண்ணக்கூடாத மலத்தையும், சிறுநீரையும் வாயால் திணிக்கும் கொடூரம் அரங்கேறிய போதுகூட, அதற்கு எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை என்று எதைக் காட்டுகிறது?

கருத்துச்சுதந்திரம் பற்றி விரிவாகப் பேசப்படும் காலமிது. இந்நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய அத்துமீறல் / கட்டாய மதமாற்றம் எதுவென்றால் இந்துக்கள் அல்லாத பெரும்பான்மை மக்கள் மீது இந்து அடையாளத்தை திணித்ததுதான். அதை எதிர்த்து நடைபெறும் போராட்டம்தான் இந்தியாவில் அடிப்படை வரலாறு. இந்த போராட்டத்தின் தொடர்ச்சிதான் கிதணிtஞு அட்ஞஞுஞீடுச்ணூ ஏடிணஞீத கீச்டீடீச்இது பார்க்கப்பட வேண்டும். நிலம் / உலக மயம் / தனியார் மயம் / ஏகாதிபத்தியம் இவற்றுக்கு ஆதரவாக இருப்பவர் யார்? எதிராக இருப்பவர் யார்?

இந்து ராஜ்ஜியம் நடைமுறைக்கு வந்தால் எவ்வித சந்தேகமுமின்றி இந்நாட்டிற்கு மிகப்பெரிய பிரளயமாகும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவக் கொள்கைக்கு அது கேடு விளைவிக்கும்.அது ஜனநாயகத்துடன் பொருந்திப்போகாது.இந்து ராஜ்ஜியம் எப்பாடு பட்டாகிறலம் தடுக்கப்பட்õக வேண்டும்.’ என்று எச்சரித்தார் அம்பேத்கர். இதுதான் இன்று நம்முன் இருக்கும் மிகப்பெரிய சவால். இந்துத்துவ திட்டங்களை முறியடிக்க மதச்சார்பற்ற, ஜனநாயகமிக்க அரசமைப்புச் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தியாக வேண்டிய நெருக்கடியில் நாம் நிற்கிறோம்.