நாள்தோறும் தலித் மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளைப் பதிவு செய்யவும்; இது தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும்; எளிதாக அறிக்கைகளை உருவாக்கவும்; நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும்; வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்கவும் Atrocity Tracking and Monitoring System (ATM)  என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. "வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்துவதற்கான தேசியக் கூட்டமைப்பு'  (NCSA) மற்றும் "நீதிக்கான தேசிய தலித் கூட்டமைப்பு' (NDMJ) ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து என்ற இந்த இணையதளத்தை நடத்துகின்றன.

www.annihilatecaste.in – மாவட்டம், வன்கொடுமை நடைபெற்ற இடம், காவல் நிலையம், வன்கொடுமை நிகழ்வு) டைப் செய்து 98989 15455 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.

இந்த இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்த, உறுப்பினராக உள்ள மனித உரிமை அமைப்பு / நிறுவனத்திற்கு இத்தகவல் சென்றடையும். அந்த அமைப்பு வன்கொடுமை நிகழ்வை உறுதிப்படுத்தி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முறையாக நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்துப் பதிவு செய்யும்.

இணையதளத்தில் வன்கொடுமைச் சம்பவ வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு, முறையான பிரிவுகளுடன் வழக்குப் பதிவு செய்யாதது, குற்றவாளிகள் கைது செய்யப்படாதது, பாதிப்புற்ற தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படாதது, நிவாரணம் வழங்கப்படாதது போன்றவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்புடைய காவல் அதிகாரிகளுக்கு (டி.ஜி.பி. முதல் எஸ்.பி. வரை) எச்சரிக்கை (alert) குறுஞ்செய்தி இந்த இணைய தளத்திலிருந்து தானாகவே சென்றடையும்.

மேலும், பதிவு செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனாலோ, குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டாலோ மேல் முறையீடு செய்ய உயரதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வகையிலும் இவ்விணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது, வன்கொடுமை நிகழ்வு நடைபெற்றது முதல் இறுதியாக நீதிமன்றத்தில் வழக்கு தீர்ப்பு அளிக்கப்படுகின்ற வரையில் – எங்கெல்லாம் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லையோ, அங்கெல்லாம் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளுக்கும் – எச்சரிக்கை குறுஞ்செய்தி (alert message ) தானாகவே சென்றடைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும்.

மேலும் இந்த இணையதளத்தில் உண்மை அறியும் குழு அறிக்கைகள், வழக்கு ஆய்வுகள், வன்கொடுமைகள் மற்றும் சட்டங்கள் குறித்த ஆய்வறிக்கைகள், சாதி ஒழிப்புப் பிரச்சார செயல்பாடுகள் போன்றவையும் பதிவிடப்பட்டு வருகின்றன.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

இந்தியாவின் எந்தப் பகுதியில் தலித் மக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நிகழ்ந்தாலும் தகவல் தரலாம். தமிழகத்தில் தற்பொழுது "இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மய்யம்' மட்டுமே உறுப்பினராக இருந்து வழக்குகளைப் பதிவேற்றி வருகிறது. பிற அமைப்புகளும் ஆர்வலர்களும் உறுப்பினராக இணைந்து இப்பணியினைச் செய்யலாம். www. annihilatecaste.in  என்ற இணையதளத்தில் இணைந்து செயல்பட விரும்புகிற அமைப்புகள் / தனிநபர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதள முகவரியில் contact us  இல் தொடர்பு கொள்ளலாம். மேலும் National Dalit Movement for Justice, 7/58, 1st floor, South Patel Nagar, New Delhi-110 008, Phone : 011 25843569, email : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

Pin It