முயற்சி திருவினையாக்கும் என்ற இலக்கணத்திற்கேற்ப, வாய்ப்பு வசதிகள் இல்லாமல் போனாலும், படிப்பில் சாதித்துக் காட்ட முடியும் என்று மெய்ப்பித்திருக்கிறார், எ. பானுமதி என்ற தலித் பெண். நடந்து முடிந்த பன்னிöரண்டாம் வகுப்பின் செய்முறைத் தேர்வில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

தன் தந்தை குடும்பத்தை விட்டுப் பிரிந்து போக, தன் தாய் "எக்ஸ்போர்ட்' நிறுவனத்தில் வேலை செய்து, குடும்பத்தை நடத்தி வரும் சூழ்நிலையில் இவருடைய சாதனையைப் பார்த்து "இந்தியன் எஸ்பிரஸ்' நாளேடு இது குறித்த செய்தியை வெளியிட்டது. அந்த செய்தியைப் பார்த்த கோவை கங்கா மருத்துவக் கல்லூரி இயக்குநர் டாக்டர் ராஜசேகரன், இம்மாணவியின் லட்சியக் கனவான நர்சிங் கோர்ஸ் படிக்க, இலவச இடம் கொடுக்க முன்வந்துள்ளார். அந்த மாணவியை சமூக ஆர்வலரான யா. அருள்தாஸ் மற்றும் "இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியாளர் சங்கீதா ஆகியோரின் முயற்சியில் 25.5.10 அன்று கங்கா மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். ஆனால், அந்த மாணவி அங்கு தங்கி படிப்பதற்கான செலவுகளை, நல்ல உள்ளம் கொண்ட எவராவது ஏற்றால், பானுமதியின் நர்சிங் கனவு நனவாகும்.

தொடர்புக்கு : அருள்தாஸ், 98412 33098