பெண்ணுரிமை பாகம் (5)
விலை ரூ.45

"பெண்கள் சிங்காரத்தில் செலுத்துகிற கவனத்தை அறிவில், சமுதாயத்தில் செலுத்துவது கிடையாது. பெண்களின் வாழ்க்கையைப் பாழாக்குவதும், அவர்கள் சுதந்திரத்தைக் கெடுப்பதும் இந்த நகைகள் தான். உலகில் வேறு எங்கும் இதுபோல பெண்கள் நகை அணிவது கிடையாது. பெண்கள் பருவம் வந்ததும் துணைவனுக்காக யோக்கியன் யார் என்று பார்க்க வேண்டுமே ஒழிய, சாதிக்காரனா என்று பார்க்கக் கூடாது. திருமண முறையை மாற்றியது போல வாழ்க்கை முறையையும் மாற்றுங்கள்.''

பெரியார் களஞ்சியம்,
பக். 276,
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்,
சென்னை-7, பேசி : 044-26618163



சாதியும் பால்நிலைப் பாகுபாடும்
விலை ரூ.40

“கடந்த 10-15 ஆண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளில் சாதி மறுப்புப் போராட்டங்கள் வெடித்துள்ளன. வரலாற்றுக் களம் காட்டிய உண்மைகளுக்குச் சான்று பகரும் வண்ணமாக இதே காலகட்டத்தில் சாதி குறித்த ஆய்வுகளும் படைப்புகளும் வெளிவந்தன. பல்வேறு நோக்கு நிலைகளிலிருந்து எழுதப்பட்ட இந்நூல்கள் சாதி குறித்த பட்டறிவை விமர்சன அறிவாக மாற்ற வல்லவையாக உள்ளன.''

உமா சக்கரவர்த்தி,
பக்கங்கள் : 104,
பாரதி புத்தகாலயம்,
சென்னை-18,
பேசி : 044-24332424


சாதி ஒழிப்பு
விலை ரூ.30

"சாதிய சமுதாயத்தில் தலித் மக்கள் தங்களின் விடுதலைக்காக இணைவதையும், ஒடுக்கும் சாதிகள் சங்கமாக இணைவதையும் ஒரே நிலையில் வைத்து பார்க்க முடியாது. ஆதிக்க சாதியினர் இணைவது என்பது தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காகவே என்பது வேரோட்டமான உண்மை. ஆனால், தலித்துகள் இணைவது என்பது தோற்றத்தில் சாதி சங்கம் போல் தோன்றினாலும் குணாம்சத்தில் இது சாதி ஒழிப்பு, தீண்டாமை அழிப்புச் சங்கமே.''

செபமாலை ராசா,
பக். 120, வைகறை பதிப்பகம்,
திண்டுக்கல்-1,
0451-2430464



பெரியார்
விலை ரூ.40

"ஒவ்வொரு தமிழனின், தமிழச்சியின் களிப்பூறும் முகங்களுக்குப் பின்னால் அந்தச் சாமான்யரது வியர்வையின் ஈரம் படிந்து கிடப்பதை தமிழ் வானும் மண்ணும் அறியும். இதோ இந்தத் தருணத்திலும் ஏதோ ஒருவிதத்தில் பெரியார் உங்களைத தொட்டுக் கொண்டு இருப்பதைச் சற்று யோசித்தால் உணர முடியும். ஏனென்றால், ‘பெரியார்’ -சரித்திரத்தில் ஒரு தொடர் செயல், அதில் முற்றுப்புள்ளிகளுக்கே இடமில்லை.''

அஜயன் பாலா,
பக். 96,
விகடன் பிரசுரம்,
சென்னை-2,
பேசி : 044-42634283



குஞ்சிதம்மாள் சொற்பொழிவுகள்
விலை ரூ.30

"இந்து மதமும், சமூகச் சீர்திருத்தமும் ஒன்றுக்கொன்று பொருத்தமற்ற விஷயமாகும். அதனால்தான் மதத்தையே ஒழித்துவிட வேண்டுமென்று நான் கூறுகிறேன். நமக்கு இரண்டே வழிகள் தான் உண்டு. ஒன்று, நாம் இந்த கேவலமான ஜாதி முறையின் கீழ் வசித்து வரவேண்டும், அல்லது, நமது மதத்தையே ஒழித்துவிட வேண்டும். நீங்கள் எந்த வழியைப் பின்பற்ற விரும்புகின்றீர்கள்? கல்வியும் நாகரிகமும் மிகுந்த மற்ற உலகம் சிரிக்கும்படி இருக்க விரும்புகிறீர்களா?''

வாலாசா வல்லவன்,
பக்.80, தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம்,
சென்னை-600 005



இயற்கை : செய்தி, சிந்தனை
விலை ரூ.145

"மானுட சமூக, இலக்கிய, அரசியல் மேம்பாட்டின் ஒரே அடிப்படை இயற்கை வரலாற்று அறிவியல் புரிதல்தான் என்பதை தனி மனிதரும், அரசும் தெரிந்து கொள்ளாததே, சுற்றுச்சூழல் சீரழிவுக்குக் காரணமாகிவிட்டது. மனிதர் அமைதியாக வாழ, இது தவிர வேறு எந்தத் துறையும் உதவாது, இது உறுதி. ஆகவே, "ஊரிலே கல்யாணம் என்றால் மாரிலே சந்தனமாக'' எல்லாராலும் கொண்டாடப்பட வேண்டும் இயற்கை விஞ்ஞானம்!''

ச. முகமது அலி,
பக்.200,
இயற்கை வரலாறு அறக்கட்டளை,
பொள்ளாச்சி,
பேசி : 04259-253252