தலித் முரசு - ஆகஸ்ட் 2006
விவரங்கள்
யாழன் ஆதி
பிரிவு:
தலித் முரசு - ஆகஸ்ட் 2006
வெளியிடப்பட்டது: 01 மே 2010
யாழன் ஆதி கவிதை
அச்சிடுக
சாதியக்கறை படிந்த மானுடத்தின்
காலக்குடுவைகளை
உடைத்தெறிந்துவிட்டு
தயாரிக்கப்படுகிறது
எம் மக்களின் கைகளால்
மனிதர்கள் அனைவருக்குமான
சமத்துவத் தேநீர்