மக்களுக்கு உழைத்த பெருமக்கள்
விலை ரூ.20

‘‘தமக்கென்று ஓர் கொள்கையை வகுத்துக் கொண்ட பழங்குடி மக்களின் தலைவர்கள், ஏனைய மக்கள் சமுதாயத்தில் தம்மினத்துக்கென்று உயரிய இடத்தையும், அரசியலில் தனி உரிமையையும் தங்கள் திறமையின் மூலம் பெற்றார்கள் என்பதை வலியுறுத்தவும் சிலர் எண்ணுவதைப் போலத் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையைக் கண்டு மனமிரங்கி அளிக்கப்பட்ட உரிமைகளல்ல; நாம் பெற்றவை என்பதை பழங்குடி மக்களின் நினைவுக்குக் கொண்டு வருவதுதான் இந்நூலின் நோக்கமாகும். ''

தொகுப்பாசிரியர் : அன்பு பொன்னோவியம்
பக்கங்கள் : 50
வெளியீடு : அன்பு பொன்னோவியம் நினைவு அறக்கட்டளை,
99, அவ்வை திருநகர்
முதல் தெரு, கோயம்பேடு, சென்னை 92


குற்றவாளிக்கூண்டில் வட அமெரிக்கா
விலை ரூ.35

‘‘நாம் தேசப்பற்று மிக்கவர்கள். ஆனால், நாம் சர்வதேசியவாதிகளாகவும் இருக்கிறோம். இதனை நம் மக்களை விடவும் மேலான முறையில் மெய்ப்பித்த மக்கள் எவரும் இல்லை. உலகின் வேறு பகுதிகளுக்கு கடுமையான உதவிப் பணிகளை மேற்கொள்ள, அய்ந்து லட்சத்திற்கும் அதிகமான மக்களை மனமுவந்து அனுப்பி வைக்கும் திறன் கொண்ட நம்மைப் போன்ற மக்கள் எவரும் இல்லை. நாம் இன்று விதைத்துள்ளதை எவராலும் அழித்துவிட முடியாது.'' -பிடல் காஸ்ட்ரோ

தமிழாக்கம்: அமரந்த்தா, பக்கங்கள்: 72
வெளியீடு: பரிசல், 1, இந்தியன் வங்கி குடியிருப்பு, வள்ளலார் தெரு, பத்மநாபநகர், சென்னை - 600 094, பேசி : 93828 53646


பெரியார் : தலித்துகள் முஸ்லிம்கள்
விலை ரூ.55

‘‘ஜாதியைப் பற்றி பேசுகிறவர் அத்தனை பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனேயாவான். என்னைப் பொறுத்தவரையில், நான் பறையனாக இருப்பதை கேவலமாகக் கருதவில்லை. சூத்திரனாக இருப்பதைவிட, பறையனாக இருப்பதைப் பெருமையாகவே கருதுகிறேன்... தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி அய்யா அவர்கள் (வேலூர் நாராயணன்) அப்படி கருதியிருப்பாரானால், அவர் முன்னேற்றக் கழகத்தில் இருப்பதற்கே லாயக்கற்றவர்தான்... நாம் தமிழர்கள். சூத்திரர்கள் அல்ல, இந்துக்கள் அல்ல.'' – பெரியார்

ஆசிரியர்: அ. மார்க்ஸ், பக்கங்கள்: 112
வெளியீடு: கருப்புப் பிரதிகள், 45ஏ, இஸ்மாயில்
மைதானம், லாயிட்ஸ் சாலை, சென்னை - 5
பேசி: 94442 72500


கொத்தடிமை ஒழிப்பில் உச்ச நீதிமன்றம்
விலை ரூ.125

‘‘உச்ச நீதிமன்றங்களையும், உயர் நீதிமன்றங்களையும் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் நீதி, பச்சாதாபத்தை உள்ளடக்கிய, கருணைக் கலாச்சாரத்தை வழிமுறையாகக் கடைப்பிடியுங்கள் என்பதுதான். கடைகோட்டில் இருப்பவருக்கும், இயலாதவர்களுக்கும் நீதி வழங்குவதே, நமது பெருமைமிகு நீதிமன்றங்கள் செய்யக்கூடிய நற்செயலாகும். இந்தியநீதி, புனிதமானதும், மனிதாபிமானமிக்கதும், சமூக நீதி வழங்கி, சுதந்திர நடவடிக்கையை நிலை நிறுத்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சந்திக்க வேண்டிய பெரும் பொறுப்புள்ளதுமாகும்.'' - வி.ஆர். கிருஷ்ணய்யர்

தொகுப்பாசியர்: மகபூப் பாட்சா, பக்கங்கள்: 232
வெளியீடு: சோக்கோ அறக்கட்டளை, நீதி நாயகம் பகவதி பவன், 143, ஏரிக்கரை சாலை, கே.கே. நகர், மதுரை - 625 020
பேசி: 0452 – 2583962


உணர்வும் உருவமும்
அரவாணிகளின் வாழ்க்கைக் கதைகள்
விலை ரூ.65

‘‘என்னிடம் ஒரு சிலர், ‘‘இந்த ஆராய்ச்சி எதற்கு? இதனால் எங்களுக்கு என்ன பயன்? இதற்கு எவ்வளவு செலவு ஆகும்? அதை உனக்கு யார் கொடுக்கிறார்கள்? எங்களுக்கு ஏதாவது கிடைக்குமா?'' என்று கேட்டனர். இந்தப் பணியால் எனக்குச் சம்பளம் கிடைத்தாலும், ‘‘நம் அரவாணி இனத்தவரைப் பற்றி பொதுமக்கள் வைத்திருக்கும் தவறான கருத்தைப் போக்க வேண்டாமா? நம்டைய உணர்வுகளை அவர்களுக்கு விளங்க வைக்கத்தான் இந்தப் புத்தகம்'' என்று எடுத்துக் கூறினேன். அதன் பிறகு இந்த நூலின் முக்கியத்துவத்தைப் புந்து கொண்டார்கள்.''

தொகுப்பாசியர்: ரேவதி, பக்கங்கள்: 116
வெளியீடு: அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் - 621 310
பேசி : 04332273444


குடிசையில்தான் மானுடம் வசிக்கிறது
விலை: ரூ.10

‘‘இந்தியாவின் மக்களினம் பற்றியும் இங்கு நிலவியிருக்கும் சாதிகளைப் பற்றியும், சாதியமைப்பையே கருவாகக் கொண்டு இயங்கிவரும் இந்துமதம் பற்றியும், இந்து மதத்தின் உயிர் மூலமாய் விளங்கும் சமற்கிருத மொழிச் சாத்திரங்கள் பற்றியும் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார் செயிண்ட் பியர் என்பதே வியப்புக்குரிய செய்தியாகும். தான் விளங்கிக் கொண்ட இந்திய சமூகத்தை மேலையருக்கு உணர்த்திய வகையிலே இப்புதினம் உலகத்தின் முதல் தலித் இலக்கியம் என்னும் சிறப்பையும் பெறுகிறது.''

தொகுப்பாசியர்: ஏபி. வள்ளிநாயகம்
வெளியீடு: ஜீவசகாப்தன் பதிப்பகம், திருமூலர் வீதி, அலமேலுநகர், ச. ஆலங்குளம், மதுரை – 17