டாக்டர் அம்பேத்கர் - வாழ்க்கைக் குறிப்புகள்
விலை ரூ.50

‘‘அம்பேத்கரின் வாழ்க்கை படிக்கின்றவர்களிடம் பலவிதமான உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்யும் ஆற்றல் உடையது. இளமைக்காலம் முதல் இறக்கும் வரை அவருடைய வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளும், கல்வி, அரசியல் மற்றும் அவரது எழுத்துப் பணியின் சாதனைகளும் மலைப்புக்குள்ளாக்குகின்றன. அம்பேத்கரின் சிந்தனைகள் தலித் விடுதலை நோக்கில் விவாதிக்கப்பட வேண்டும் என்கிற முயற்சியின் வெளிப்பாடே இந்நூல்.''

ஆசிரியர் : அன்புசெல்வம்
பக்கங்கள் : 118
வெளியீடு : தலித் ஆதார மய்யம், 32, பாரதிதாசன் சாலை, அரசரடி, மதுரை - 625 016
பேசி : 0452 - 2302199


சாதிய ஒடுக்குமுறை
விலை ரூ.5

‘‘பா.ஜ.க. மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது முஸ்லிம்கள், தலித்துகள், ஆதிவாசிகள் மீதான வன்கொடுமைகள் பெருமளவில் அதிகரித்தன. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை, வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களுடன் ஒன்றிணைக்க வேண்டியது அவசியத் தேவை. அதே சமயத்தில், வர்க்கப் போராட்டம் என்பது சாதிய முறையை அழிப்பதற்கான போராட்டத்தையும், அனைத்து விதமான சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதுவே ஜனநாயகப் புரட்சியின் மிக முக்கியப் பகுதியாகும்.''

பக்கங்கள் : 20
வெளியீடு : பாரதி புத்த காலயம், 421, அண்ணா சலை, தேனாம்பேட்டை, சென்னை - 18
பேசி : 044 - 2433 2424


மறியல்
விலை ரூ.275

‘‘சாதிக்கு அப்பாற்பட்ட சங்கம்னு ஏற்படுத்துனா அது நல்லதுதானடா. நல்லதுதான். ஆனா அத ஒசந்த சாதிக்காரன் ஏற்படுத்தணும். அதுல எல்லாரும் வந்து சேர்ந்தா அதப் பாராட்டலாம். ஏன்னா அந்த உசந்த சாதிக்காரன், தான் சார்ந்த சாதி கொடுக்கிற அந்தஸ்த விட்டுட்டு, அது கொடுக்குற மதிப்பயும் மரியாதயயும் விட்டுட்டு வாறான். ஆனா இவன் விஷயத்துல இதுக்கு நேர் மாறாவுல இருக்கு. சாதியில்லா அமைப்ப ஏற்படுத்துறேன்னு இவஞ் சொன்னா, தன் சாதிய மறைச்சி அது கொடுக்குற இழிவயும், அவமானத்தையும் மறைச்சி தன்ன ஒசந்தவன்னு காட்டிக்கிட நெனக்கானுதான அருத்தம்.''

ஆசிரியர் : மாற்கு
பக்கங்கள் : 450
வெளியீடு : கலகம், 1/7, அப்பாவு தெரு, எல்லீசு சாலை, சென்னை 600 002


தமிழ் நாடகச் சூழலில் தலித் அரங்கு
விலை ரூ.80

‘‘ஆளும் வர்க்கத்தின் கையில் உள்ள மொழியும் இலக்கியமும் மேலாண்மை பண்பாட்டிற்குரிய சமூக ஒழுக்கப் பெருமானங்களை மீள வலியுறுத்தும் என்பதை உணர்ந்த கிராம்ஸ்கி, இதற்கு மாற்றாக ஒடுக்கப்பட்ட மக்களின் கையில் உள்ள மொழியும் இலக்கியமும் புதிய பெறுமானங்களைத் தோற்றுவிக்க வேண்டுமென்றார். அறிவியல், அறவியல். அரசியல், பொருளியல், பண்பாட்டியல் ஆகிய அனைத்தின் மீதும் ஆதிக்கம் புரியும் வர்ணாசிரமமே பார்ப்பனியம். இந்திய பார்ப்பனியத்திலிருந்து அடிமை வகுப்பினர் விடுபட வேண்டும் என்றார் அறிஞர் அம்பேத்கர் அவர்கள் .''

தொகுப்பாசிரியர் : கு. சின்னப்பன்
வெளியீடு : வழிகாட்டி, 16, 2ஆவது குறுக்குத் தெரு, கம்பன் நகர், பாண்டிச்சேரி 605 010


முகம்மத் அப்சல் குரு தூக்கிலிடப்படத்தான் வேண்டுமா?

விலை ரூ.25

‘‘பழிக்குப் பழி, வன்முறைக்கு வன்முறை, சட்ட பூர்வமற்ற வழிமுறைகளை அரசே மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட முடியாது. கண்ணுக்குக் கண் என்றால் இறுதியில் குருடர்கள் மட்டுமே உலகில் எஞ்சுவர் என்றார் காந்தி. இந்த அநீதிகளை எத்தனை காலத்திற்கு நாம் சகித்துக் கொள்ளப் போகிறோம்? ஒரு நாடு அதன் குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு என்னவிதமான வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது என்பதை வைத்தே அதன் பண்பாட்டுத் தரத்தை மதிப்பிட முடியும்.''

தொகுப்பு : அ. மார்க்ஸ்
பக்கங்கள் : 64
வெளியீடு : கருப்புப் பிரதிகள், 45ஏ, லாயிட்ஸ் சாலை, சென்னை - 5
பேசி : 94442 - 72500


தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005
நன்கொடை ரூ.15

‘‘இச்சட்டத்தின் சிறப்பு அம்சங்களை மக்கள் தெரிந்து வைத்திருந்தால் மட்டுமே, இச்சட்டம் மக்களுக்குப் பயனுள்ள சட்டமாக அமைய முடியும். தகவல் என்பது மக்களின் பலம். எந்த அளவு தகவல் அறிவோடு மக்கள் இருக்கிறார்களோ, அந்த அளவிற்கு பலம் பெற்றவர்களாக, அரசின் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக மக்கள் இருப்பார்கள் என்பது உறுதி.''

ஆசிரியர் : செபமாலை ராசா
பக்கங்கள் : 72
கிடைக்குமிடம் : அய்டியாசு மய்யம், 26அ, வாழைத்தோப்பு, சிந்தாமணி சாலை, மதுரை - 1