நேபாளம், ‘இந்துஅடையாளத்தை ஒழிக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து, மோடி ஆட்சி, ‘இந்துநாடாகவே நீடிக்க திரைமறைவு முயற்சிகளை மேற்கொண்டது. இது பற்றி ஏற்கெனவேபுரட்சிப் பெரியார் முழக்கம்தலையங்கம் தீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மேலும் சில செய்திகள்:

நேபாள அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட் டிருப்பதை வரவேற்பதில் இந்தியா முதலாவதாக இருந்திருக்க வேண்டும். மாறாக, மோடி அரசாங்கம் ஓர் எதிர்மறை அணுகுமுறையை பின்பற்றி இருக் கிறது. ஒரு தேவையற்ற தலையீடும் நிலைப்பாட்டை யும் எடுத்திருக்கிறது. அரசியல் நிர்ணய சபையில் அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, இரு நாட்களுக்குப்பின் மோடி அரசாங்கம் தன் அயல்துறை செயலாளர் ஜெய்சங்கரை, குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பெரிய அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து, அரசமைப்புச் சட்டம் முறையாகப் பிரகடனம் செய்ய நிச்சயிக்கப் பட்டிருக்கிற செப்டம்பர் 20 அன்று அவ்வாறு நடைபெறாமல் நிறுத்துவதற்காக காத்மண்டுக்கு அனுப்பியது.

நேபாளத்தின் இறையாண்மை விஷயங்களில் மிகவும் கேடுகெட்ட முறையில் தலையிடுவதற்கு அது கூறும் காரணம், இப்போது நிறைவேற்றப்பட்டிருக்கிற அரசமைப்புச் சட்டம் மாதேஷி மக்களுக்குப் போதுமான அளவிற்கு பங்களிப்பினைச் செய்திடவில்லை என்றும், அதன் விளைவாக மாதேஷி மக்கள் மத்தியில் ஓர் ஆழமான அமைதியின்மை ஏற்பட்டிருக்கிறது என்பதுமாகும். அரசமைப்புச் சட்டம் முறையாகப் பிரகடனம் செய்யப்பட்டதற்குப் பின்னர், இந்திய அயல்துறை அமைச்சகம் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப் பட்டதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள் மற்றும் வன்முறை குறித்து கவலை தெரிவித்திருக்கிறது. இதற்கு அடுத்து இரு நாட்களில் இந்திய அரசின் சார்பில் இரு அறிக்கைகள் வெளி யாகி இருக்கின்றன. அவற்றில் டெராய் மண்டல நிலைமைகள் குறித்து கவலை தெரிவித்திருப்பதுடன், அரசமைப்புச் சட்டத்தைப் பொறுத்து மாதேஷி மக்களின் கவலைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது. நேபாளத்திலுள்ள இந்தியத் தூதர் கலந்தா லோசனைகள் செய்வதற்காக அழைக்கப்பட் டிருக்கிறார். நேபாளம் குறித்து, இந்திய ஆட்சி யாளர்கள் ஒரு பெரிய அண்ணன் அணுகுமுறையை அடிக்கடி கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்.

வரைவு அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகளில் ஒன்று, நேபாள அரசை ஒரு மதச்சார்பற்ற அரசு என்று வரையறுத்திருப்பதாகும். நேபாளத்தில் சில பிரிவினர் இதனைக் கடுமையாக எதிர்த்து வந்தார்கள். மன்னர் ஆதரவு இராஷ்ட்ரிய பிரஜாதந்திர கட்சியும் மற்றும் பல்வேறு இந்துத்துவா குழுக்களும் நேபாளம் முழுவதும், நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரி கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன. அரசியல் நிர்ணய சபையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இக்கோரிக்கையை நிராகரித்துவிட்டனர்.

நேபாளத்தை இந்து இராஷ்ட்ரமாக அறிவிக்க வேண்டும் என்று நேபாளத்திற்குள் செயல்பட்டு வரும் சக்திகளுக்கு இந்தியாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் இந்துத்துவா சக்திகள் அனைத்தும் அனைத்து விதமான உதவிகளையும் செய்தன. பா... நாடாளுமன்ற உறுப்பினர் . வைத்தியநாதத், நேபாளத்தை இந்து இராஷ்ட்ரமாக அறிவிக்க வேண்டும் என்று நேபாளக் குடியரசுத் தலைவருக்கும், அரசியல் நிர்ணய சபையின் தலைவருக்கும் கடிதங்கள் எழுதி இருந்தார்.

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங், பா... தலைவர் என்ற முறையில் 2010 மார்ச்சில் மறைந்த பிரதமர் ஜி.பி.கொய்ராலாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நேபாளத்திற்குச் சென்றிருந்தார்.அந்த சமயத்தில் அவர், “உலகிலேயே நேபாளம் மட்டுமே இந்து இராஜ்ஜியமாக இருந்ததில் நாங்கள் மிகவும் பெருமிதம் கொண்டிருந்தோம். நேபாளம் மீண்டும் இந்து அரசாக மாறும் எனில் நாங்கள் மிகவும் மகிழ்வோம் (ஐஏஎன்எஸ், மார்ச் 22, 2010) என்று பேசியிருந்தார். நேபாளத்தில் இந்து இராஷ்ட்ரம் அமைய வேண்டும் என்று நடைபெற்று வரும் பிரச்சாரங்களில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்துத்துவா அமைப்புகளின் சாதுக்களும் தலைவர்களும் இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

நேபாளம் இந்து நாடாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதும், நேபாளம் ஒரு மதச்சார்பற்ற குடியரசாகத் திகழும் என்று கூறியிருப்பதும்தான் இந்தியாவில் இயங்கும் இந்துத்துவா சக்திகளை ஆத்திரம் கொள்ளச் செய்திருக்கிறது. பா...வும் இதனை வெளிப்படையாகக் காட்ட முடியாவிட்டாலும், இந்தக் கோபத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறது. மோடி அரசாங்கத்தால் எதிர்மறையான நிலைப்பாடு எடுக்கப்பட்டிருப்பதற்கு அநேகமாக இதுதான் காரணமாகும்.

(‘பீப்பிள்ஸ் டெமாகரசிதலையங்கத்தின் சில பகுதிகள்)

நேபாளத்தை இந்து நாடாகவே நீடிக்க சங்பரிவாரங்களின் திரைமறைவு சதிகள்

Pin It