ட அரைகுறை ஆடைகளுடன் வரும் பக்தர்களை இந்து கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. - மதுரை உயர்நீதிமன்றம் ஆணை
ஆனால், அர்ச்சகர்கள் மட்டும் மேலாடை இல்லாமலேயே வரலாம்! அதுல நீதிமன்றம் தலையிட முடியாது.
ட கூடங்குளம் முதலாவது அணு உலையில் அடுத்த மாதம் மின் உற்பத்தி தொடங்க வாய்ப்பு. - இயக்குனர் ஆர்.எஸ். சுந்தர்
அமைச்சர் நாராயணசாமி போயிட்டாரேன்னு கவலைப் பட வேண்டாம்; இதோ ஆர்.எஸ்.சுந்தர் வந்துட்டாருல்ல...
ட பாரிசில் நடந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த அரியானாவில் வேதம் ஓதி ‘மகாயாகம்’. - செய்தி
இனிமே சிரியாவுல நடக்குற தாக்குதலுக்கும் யாகம் நடத்து வீங்க போலிருக்கு.
ட பீகார் தோல்வி: பா.ஜ.க.வை குறைகூறும் அதிருப்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். - அமைச்சர் கட்காரி
தாராளமா எடுங்க... ஆனா அதிருப்தி தெரிவித்த பீகார் மக்களை ஒன்றும் செஞ்சுடா தீங்கய்யா.
ட மாட்டிறைச்சி ஏற்றுமதி வர்த்தகம் செய்வோரில் 95 சதவீதம் பேர் இந்துக்கள். - முன்னாள் நீதிபதி சச்சார்
உள்நாட்டுல எவரும் மாட்டிறைச்சியை சாப்பிட்டுவிடக் கூடாதுங்குற நல்ல எண்ணம் தான்.
ட மதத்தையும் பயங்கரவாதத்தை யும் தனியே பிரிக்க வேண்டும்; ஒன்றாக இணைக்கக் கூடாது. - மோடி பேச்சு
அப்படீன்னா, பா.ஜ.க.வையும், ஆர்.எஸ்.எஸ்.சையும் பிரிச்சு வைக்கனும்னு சொல்றீங்க...
ட மகாராஷ்டிரா பா.ஜ.க. ஆட்சி தலித், பழங்குடி குழந்தை களுக்கான கல்விச் சலுகைகளை நிறுத்த முடிவு. - ‘இந்து’ ஏட்டின் செய்தி
கேட்டா, நாங்க அம்பேத்கரை மதிக்கிறோம்னு சொல்வாங்க...
ட முதலமைச்சர் அம்மா உத்தரவால் சேலத்தில் நல்ல அளவு மழை பெய்துள்ளது. - சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர்
மழைய நிறுத்த, எப்ப உத்தரவு வரப் போகுது அய்யா? கொஞ்சம் கருணை காட்டுங்களேன்.