கிழிந்துபோன பழைய புத்தகமது
அட்டையின் வசீகரத்தால்
வாசிக்கும் வெறியில் நீ...
விடைத்தாள் திருத்தும்
ஆசிரியரின் வேகத்தோடு
புரட்டுகிறாய் அதன் பக்கங்களை...
வேகத்தின் உக்கிரத்தில்
சாயம் இழந்து கொண்டிருந்தது
அதன் வண்ணங்கள்.
இறுதியாய்...
முடித்துவிட்டாய் நீ.
உன் கையோடு வந்துவிட்டது
முடிவை சுமந்திருந்த தாள்கள்.
இனி ஒருவரும்
வாசிக்க முடியாது
அவள் புத்தகத்தை.

- நிலவின் மகள்