கோட்சே சிலை எதிர்ப்பு மாநாடு!

தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் பார்ப்பன மதவாத சக்திகளை எதிர்கொள்ள பார்ப்பனரல்லாத இயக்கங்கள், சமூக நீதி இயக்கங்கள், ஒடுக்கப்பட்டோர் அமைப்புகள் தயாராகி வருகின்றன.

 24-01-2015 சனிக்கிழமை அன்று ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள மல்லிகை அரங்கில் காந்தியை படுகொலை செய்த “நாதுராம் கோட்சே சிலை எதிர்ப்பு” மாநாடு நடைபெற்றது. நாட்டின் பன்முகத்தன்மையைத் தகர்த்தெறிந்து இந்துத்துவ நாடாக்கும் முயற்சியை அணிதிரண்டு முறியடிப் போம் என்ற முழக்கத்தோடு மதவெறி எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற இந்த மாநாடு பிற்பகல் 2-30 மணி முதல் இரவு 10-00 மணி வரை இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது.

முதல் அமர்விற்கு தமிழக பசுமை இயக்கம் தலைவர் டாக்டர் வெ.ஜீவானந்தம் தலைமை ஏற்றார். தமிழினப் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் கி.வே.பொன்னையன் தொடக்கவுரை ஆற்றினார். உயர் நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி, காந்தி பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் முனைவர். மார்க்கண்டன், தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சட்ட ஆலோசகர் வழக்கு ரைஞர் ப.பா.மோகன், சமூக நீதி வழக்குரைஞர்கள் நடுவம் ஒருங்கிணைப் பாளர் மூத்த வழக்குரைஞர் இரத்தினம், தமிழ்த்தேச நடுவம் நிலவன், திராவிடர் கழகம் பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து, தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம் தலைவர் மதிவண்ணன் கிருஸ்துவ லீக் ஈரோடு தலைவர் டி.விஜயகுமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இரண்டாம் அமர்விற்கு மதவெறி எதிர்ப்பு கூட்டமைப்புத் தலைவர் மூத்த வழக்குரைஞர் பி.திருமலைராஜன் தலைமை ஏற்க, மக்கள் சிவில் உரிமைக் கழகம் தமிழகத் துணைத் தலைவர் கண.குறிஞ்சி தொடக்கவுரை ஆற்றினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் தா.பாண்டியன், ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.இராம கிருஷ்ணன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் இரா.அதியமான், த.மு.மு.க பொதுச்செயலாளர் அப்துல் சமது, எஸ்.டி.பி.ஐ பொதுச்செயலாளர் நெல்லை முபாரக், தமிழக மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பொழிலன், தமிழ் மாநிலக் காங்கிரஸ் விடியல் சேகர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சு.ப.இளங்கோவன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். ஈரோடு ப.இரத்தினசாமி நன்றி கூறினார்.

சென்னையில்..

சென்னையில் மதவாத பாசிச பார்ப்பன சக்திகளுக்கு எதிராக கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது குறித்து ஜன.23ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் தியாகராயர் நகர், வெனின்சுலா விடுதி அரங்கில் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், எஸ்.டி.பி.அய். கட்சித் தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி ஆகியோர் - இந்த ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமைக் குழு உறுப்பினர் தபசி. குமரன் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு, சமூக நீதி பேரவைத் தலைவர் பேராயர் எஸ்ரா. சற்குணம், தமிழ் மாநில காங்கிரஸ் செயலாளர் பீட்டர் அல்போன்ஸ், ம.தி.மு.க. சார்பில் மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குணசேகரன், தமிழர் வாழ்வுரிமை கட்சி சார்பில் கொற்றவை மூர்த்தி, மக்கள் விடுதலை கட்சி சார்பில் மீ.த. பாண்டியன், இளந்தமிழர் இயக்கம் சார்பில் செந்தில், பூவுலகின் நண்பர்கள் சார்பில் நெடுஞ்செழியன், மே 17 இயக்கம் சார்பில் திருமுருகன், தியாகு மற்றும் பாப்புலர் பிரன்ட், மில்லி கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதிகள், கிறிஸ்துவ அமைப்பினர் என 30க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சார்ந்த 150 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு அமைப்பு சார்பில் கருத்துகள் முன் வைக்கப்பட்டன. பார்ப்பன எதிர்ப்பு - பெரியார் - அம்பேத்கர் சிந்தனைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பலரும் வற்புறுத்தினர்.

பெரியார் முன் வைத்த பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் முரண்பாடுகளை மீண்டும் மக்கள் மன்றத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே பெரும்பாலோர் கருத்தாக இருந்தது. பார்ப்பன மதவாத சக்திகளை எதிர்கொள்வதற்கான பரப்புரை அணுகுமுறைகள் குறித்தும் பரப்புரைத் திட்டங்கள் குறித்தும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன் வைத்த கருத்துகளை பலரும் வரவேற்று வலியுறுத்தினர். முதல் கட்டமாக பிப்ரவரி இறுதி வாரத்தில் சென்னையில் மதவாத பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

Pin It