1) ஆளுநர்கள் அரசியலமைப்பு சட்டத்தின் ‘புனிதத்தை’ காப்பாற்ற வேண்டும். - பிராணப் முகர்ஜி

 சட்டத்துல இப்படி ஒரு பிரிவு... எந்த அத்தியாயத்தில் எந்தப் பிரிவில் இருக்குதுன்னு தெரியல்லையே, சார்?

2)  மகாமகத்துக்கு முழுக்குப் போட வரும் முக்கிய புள்ளிகளுக்கு தனி ஹெலிகாப்டர் தளங்கள். - செய்தி

 நியாயம்தான்; ‘பாவ மூட்டை’களை ஹெலிகாப்டரில்தான் சுமந்து வரவேண்டும்.

3) சத்தீஸ்கரில் நீதிபதி தோட்டத்தில் மேய்ந்த ஆடு கைது. - செய்தி

சட்டப்படிதான் ஆடு புல் மேய வேண்டும்; சட்ட அறிவே இல்லாமல், இப்படி கண்டபடி ஆடுகள் மேய்வதை சட்டம் ஒரு போதும் அனுமதிக்காது!

4) கும்பகோணம் ‘மகாமக’த்தில் காவல்துறையினர் பக்தர்களுக்கு தொல்லை தராமல் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. - செய்தி

 ‘தொல்லை தராத பாதுகாப்பு’ வீட்டுக்குள்ளே குளியலறையில் முழுக்குப் போட்டுக் கொள்வதுதான்!

5) மத நம்பிக்கைகள் எல்லாவற்றையும் அறிவியல் கொண்டு ஆராய முடியாது.  - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

 அதேபோல, நீதிமன்ற தீர்ப்புகள் எல்லாவற்றையும் சட்டத்தின் அடிப்படையில் ஆராயக் கூடாதுன்னு சொல்லிடாதீங்கய்யா...