உதவிக்கரம் நீட்டியோர்

திராவிடர் விடுதலைக் கழகம், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இணைந்து நடத்திய நிவாரணப் பணிகளுக்கு உதவிட முன்வந்தோர் பட்டியல்:

flood 2sதிருப்பூர் வணங்காமண் ஆடையகம் சார்பில் ஊமை அழகிரி 150 புதிய சட்டைகள், 150 வேட்டிகள்; மேட்டூர் கழகம் சார்பில் அரிசி மூட்டைகள், தண்ணீர் பாக்கெட், பருப்பு, ரொட்டி, மருந்துகள், தனி வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. சென்னை ஆனந்தன் 225 பெட்சீட்டுகள் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டக் கழகத் தோழர்கள் ஏராளமாக அரிசி மூட்டைகள், ரொட்டி, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை அனுப்பினர். குவைத்திலிருந்து செந்தில் ரூ.50,000; தஞ்சையிலிருந்து மணி வண்ணன் ரூ.25,000; சூலூர் பனிமலர் ரூ.10,000; சென்னை பாண்டியன் ரூ.4000; அமெரிக்காவிலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில் ரூ.44,000. குறிஞ்சி நாடன் ரூ.3,000; வளர் தங்கம் குடும்பத்தார் ரூ.2000.

செந்தில் (எப்.டி.எல்.) வழியாக உதவியோர் ரூ.8,600. தேனி ஆசிரியர் மணிமேகலை ரூ.5000. சுவீட்சர்லாந்து இளம் இராயல் விளையாட்டுக் கழக சார்பில் ரூ.10,000.

தஞ்சை மாவட்டத்திலிருந்து தோழர் மணிவண்ணன் நன்கொடையாக திரட்டி, அரிசி மூட்டைகள், பிஸ்கட், ரொட்டி பாக்கெட்டுகள், எண்ணெய் தாராளமான அளவில் தனி வாகனத்தில் அனுப்பி வைத்தார்.

கரூர் மாவட்ட தமிழர் முன்னணி சார்பில் நைட்டி, லுங்கிகள், பெட் சீட்டுகளை தோழர்கள் அனுப்பினர். பெங்களூர் கலைச் செல்வி ரூ.25,000 பணம் அனுப்பினார். நைட்டிகள், பெட் சீட்டுகள் வாங்கி, மக்களுக்கு அளிக்கப் பட்டன. தொடர்ந்து உதவிக் கரங்கள் நீண்டு வருகின்றன. பட்டியல் தொடரும்.

உதவிய பகுதிகள்

சென்னையில் மயிலாப்பூரில் கணேசபுரம், விசாலாட்சி  தோட்டம்; வேளச்சேரியில் சின்னப்பசேரி, பாலாஜி நகர், பள்ளிக்கரணை ஆகிய இடங்களி லும், சேத்துப்பட்டு, சூளை, ஆயிரம் விளக்கு, புதுவண்ணை, செம்மஞ்சேரி, பிளைண்ட் டிரஸ்ட், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தோழர்கள் உதவிகள் செய்து வருகின்றனர். மேலும் பல பகுதிகளில் சென்று பணியாற்ற தோழர்கள் தயாராகி வருகின்றனர்.

பம்பரமாய் சுழன்ற தோழர்கள்

நிவாரணப் பணிகள், சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தலைமையில் முடுக்கிவிடப்பட்டன. தோழர்கள் சுகுமார், இராவணன், மாரி, நாத்திகன், அருண், தமிழ்ச் செல்வி, சேத்துப்பட்டு வேலு, சிவா, மனோஜ், பூரணாகரன், செந்தில் (எப்.டி.எல்.), அசுரன், ஆனந்த், வீரா, மனோகர், பிரபாகர், பிரவின், தீனா, ராஜேஷ், தமிழ்ச் செல்வன், விமல், மோகன், பிரகாஷ், திவாகர், பூர்ணிமா, இலட்சுமணன், ஆஷா, அங்காடி, முருகன், நந்தா, ஆண்டிமடம் கோபால் உள்ளிட்ட தோழர்கள் செய்து வருகின்றனர்.

சூளைமேடு, நமச்சிவாயபுரம், சேத்துப் பட்டு அப்பாராவ் தோட்டம், திருவல்லிக் கேணி செல்லம்மாள் தோட்டம், எம்.ஜி.ஆர். நகர், ஏரிக்கரை சாலை, காமராசர் சாலை, கொருக்குப் பேட்டை சத்தியவாணி நகர் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினர்.