இந்தியாவை இந்திநாடாக்க அமீத்ஷா தலைமையிலான நாடாளுமன்றக் குழுப் பரிந்துரைத்துள்ளது. தேர்தலில் வடமாநிலங்களின் வாக்குகளைக் குறி வைத்து இந்த அதிரடி நடவடிக்கையில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி இறங்கியுள்ளது. இந்த அறிவிப்பால் தமிழகம் கொந்தளித்துள்ளது.

அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு, முதல் முறையாக 1976ம் ஆண்டில் அலுவல்பூர்வ மொழி சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. இக்குழுவில் மக்களவை எம்பி.க்கள் 20, மாநிலங்களவை எம்பி.க்கள் 10 பேர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

தற்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இக்குழு செயல்படுகிறது. இக்குழு அதன் 11வது அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் கடந்த மாதம் சமர்ப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் வருமாறு:

- விடுதலை இராசேந்திரன்