ஜூன் 25 1950 லிருந்து ஜூன் 27 1957 வரை நீடித்த கொரிய யுத்தமானது இரணடாம் உலகப் போருக்குப் பிறகு மிகக் கொடூரமான முறையில் நடத்தப்பட்ட யுத்தமாகும். கொரிய யுத்தத்தின்மூலம்தான் அமெரிக்காவின்  பனிப்போர் உச்சக்கட்டத்தை தொடங்கி வைத்தது. கொரிய யுத்தத்தில் ஈடுபட்ட அமெரிக்கா போர்காலத்தில் வடகொரியாவும் சீனாவும் பல மனித உரிமைகளை மீறி செயல்பட்டன என தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. என்றாலும் உண்மையில் அமெரிக்காதான் அத்தகைய மனித உரிமைகளை மீறி செயல்பட்டது என தற்போது வெளிப்படத் துவங்கியுள்ளது. அமெரிக்கா கொரிய தீபகற்பத்தில் 1950 ஆம் ஆண்டு நடத்திய போரில் பல அப்பாவி மனிதர்களை படுகொலை செய்தும், கைது செய்த நபர்கள் மீதுகாட்டு மிராண்டித்தனமான சித்திரவதைகளையும்,தென்கொரியா அரசுடன் சேர்ந்து கொண்டு அமெரிக்க ராணுவம் செய்துள்ளதை தற்போது ஆதாரப் பூர்வமாக வெளிப்பட்டு உள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் தலைமையின் கீழ் அப்பாவி பொதுமக்களை ரகசியமாக படுகொலைகளை அமெரிக்கா செய்ததை யுத்தம் நடத்திய போது எடுத்த புகைப்படங்களை கடந்த வருடம் வாஷிங்டனில் அமெரிக்க ராணுவம் வெளியிட்டது. அந்தப் புகைப்படங்களில் சிறைக் கைதிகளை வெள்ளைத் துணியினால் உடல் முழுவதும் மறைக்கப்பட்டு பின்புறமாக கைகள் கட்டப்பட்டு தலை குனிந்த நிலையில், யுத்த பதுங்குகுழியின் சுவர் பக்கமாக நிற்க வைத்து, தென் கொரிய கொலையாளிகள் கைதிகளின் பின்தலையில் சுட்டு கொல்லும் போது அந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளன. வின்னிங்ஸ்டன் என்ற இங்கிலாந்து பத்திரிகை நிருபர் அமெரிக்கா கம்யூனிஸ்ட் தினசரி பத்திரிகையான டெய்லி ஒர்க்கரில் இந்த படுகொலைகள் தென்கொரிய நகரமான டோவோன்ஜோனில் 1950இல் நடந்ததை யுத்தகாலத்தில் எழுதிய போது யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. ஆனால் உண்மைகள் நீண்டகாலத்திற்கு பிறகு தற்போது வெளிவந்து, ஆலன் வின்னிங்ஸ்டன் எழுதியது உண்மைதான் என நிருபணமாகி உள்ளது.

2002 ஆம் ஆண்டிற்கு பிறகு தென்கொரிய நகரமான தைபூனில் ஏராளமான ரகசிய சவக்குழிகள் இருப்பது எதேச்சையாக கண்டுபிடிக்கப்பட்டது. தென்கொரியாவிலிருந்து வருகின்ற பத்திரிகை செய்திகளின்படி டோவோன்ஜோனில் அமெரிக்க ராணுவம் கொரிய யுத்தத்தின் போது அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்து புதைத்த பல சுடுகாடுகள் தற்போது தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. 1990ஆம் ஆண்டுக்கு பிறகு, பாதிக்கப்பட்டவர்கள் வெளியே வந்து சாட்சியங்கள் அளிக்க ஆரம்பித்து உள்ளதால் பல்வேறு விஷயங்கள் தற்போது வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது.

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரோ மூ ஷீயூன் மூலம் 2006இல் அமைக்கப்பட்ட வட,தென்கொரிய உண்மை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு குழுவின் மூலம் புதிய ஆதாரங்கள் பல கிடைத்துள்ளன. அவரின் பதவிக்காலம் முடிந்து செல்லும் போது கும்பல் படுகொலைகளை செய்தவர்களுக்கு பொது மன்னிப்பும் கும்பல் படுகொலைகள் தென்கொரிய அரசின் ஆதரவுடன் தான் நடந்துள்ளன எனவும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

1950இல் அமெரிக்காவின் கைப்பாவை அரசு 30,000 தென்கொரிய விவசாயிகளை கம்யூனிஸ்ட் ஆதரவு உள்ளவர்கள் எனக் கூறி அவர்களை சிறையில் அடைத்தது. யுத்தகாலத்தில் தென்கொரிய அரசு உருவாக்கிய தேசிய வழிகாட்டும் குழுவின் உதவியுடன் வாழ்விடங்களிலேயே சிறை வைத்து அவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து கட்டுப்படுத்தி வந்தது. கொரிய தீபகற்பம் போர் முடிந்தவுடன் தேசிய வழிகாட்டுக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரையும் தென்கொரிய அரசு கொன்றுவிட்டது என ஆதாரங்களுடன் உண்மை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு குழு வெளியிட்டுள்ளது.

1950களில் கோடைகாலத்தின் போது தென்கொரிய நகரமான டோவோன்ஜோனில் தென் கொரிய pamm_ppoபடைகள் பத்தாயிரக் கணக்கான கம்யூனிஸ்டுகளையும், விவசாயிகளையும் கொன்ற தோடு, பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் கும்பல் கும்பலாக படுகொலைகள் செய்துள்ளது. இந்தப் படுகொலைகளில் ஈடுபட்ட சிறைகாவலாளியின் கூற்றின்படி சுட்டுக் கொல்லப்பட்ட சாதாரண கைதிகள் யாரும் கம்யூனிசத்தைப் பற்றியோ, கம்யூனிஸ்டுகளின் திட்டங்களைப் பற்றியோ எதுவும் அறியாத அப்பாவி தென்கொரிய விவசாய பொதுமக்கள்என பத்திரிகை சந்திப்பின் போது கூறியுள்ளனர். மறு ஆய்வு செய்யப்பட்ட பத்திரிகை செய்திகளின் படி அமெரிக்க ராணுவ அதிகாரிகள் பல கொடூரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட மனித உடல்களை எந்தவிதமான இறுதிச் சடங்கும் செய்யாமல், பதுங்கு குழிகளிலும், பயன்படாத சுரங்கங்களிலும், கடல்களிலும் வீசியெறிந்துள்ளனர் என தென்கொரிய தொலைக்காட்சி பல மனித உடல்களின் எச்சங்களை கண்டுபிடித்ததன் வாயிலாக வெளி உலகத்திற்கு தெரிய வந்தது.

இந்தப் படுகொலைகளை அமெரிக்க அரசும் அதன் ராணுவமும் செய்துள்ளதால் இதில் ஈடுபட்டுள்ளவர்களை விசாரணை நடத்தி தண்டனை கொடுக்கப்பட வேண்டும். என தென் கொரிய ஆய்வாளர்கான்மான்கில் தெரிவித்துள்ளார்.

அதிக துன்பமளித்ததும் மிகக் கொடூரமானது மான 1950களின் முற்பாதியில் நடந்த தீபகற்ப கொரிய யுத்தம். அதில் சிதிலமடைந்த மனித உடல்கள் இன்னும் நாம் காட்டுமிராண்டிகளின் காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பதாக உள்ளது என உண்மை பரஸ்பர ஒத்துழைப்பு குழுவின் உறுப்பினர் கிம்தோங்சேன் கூறியுள்ளார்.

இருபது லட்சம் தென்கொரியர்கள் படுகொலை:

இரண்டு கோடி ஜனத்தொகை கொண்ட தென்கொரியாவில் 1,00,000 பேர்கள் போரினால் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என உண்மை பரஸ்பர ஓத்துழைப்பு குழு முடிவு செய்துள்ளது. ஆனால் கிம் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்து இது மிக பழைய கணக்கு எனவும் யுத்தத்தில் இதைவிட அதிகமான நபர்கள் கொல்லப்பட்டிருப்பதாக கூறுகிறார். 2150 வழக்குகளை விசாரித்த குழு அமெரிக்க ராணுவம் தென்கொரிய பொதுமக்களை கொன்றதாக குற்றம் சாட்டியிருக்கிறது. அமெரிக்கப் படைகளை தலைமை தாங்கி நடத்திய ஜெனரல் டக்ளஸ் மெக் ஆர்கர் இது தென்கொரியாவின் உள்நாட்டு விவகாரம் எனக் கூறி இத்தகைய குற்றச்சாட்டுகளை மறுத்தே வந்து உள்ளார்.யுத்தகாலத்தில் தென்கொரியப் படைகள் மெக்ஆர்தரின் தலைமையில் மேற்பார்வை இடப்பட்டு இயங்கி வந்ததும் தற்போது தெரிய வந்துள்ளது. தென்கொரியாவின் அமெரிக்க தூதரும் 1950களில் இருந்தவர் கடந்த ஆண்டு தான் எழுதிய கட்டுரை ஒன்றில் அமெரிக்க ராணுவம் தென்கொரிய பொதுமக்களை சுட்டுக்கொல்வதை கொள்கையாகவே வைத்து செயல்பட்டு வந்தார்கள் எனகாலம் கடந்தேனும் எழுதியுள்ளார். மேலும், அமெரிக்க ராணுவ நிலைகளுக்கு எதிராக யார் வந்தாலும் சாதாரண பொதுமக்கள் வந்தாலும்கூட அவர்களை சுட்டுக்கொன்றதை அமெரிக்க அரசு துணை செயலருக்கு தான் அப்போது

எழுதியகடிதம் கண்டு கொள்ளப்படவில்லை எனவும் எழுதியுள்ளார். முன்னாள் அமெரிக்க விமானப்படை உளவுத்துறை அதிகாரி டோனால்டு நிக்கோலஸ் தனது கொரிய போர் நினைவு குறிப்புகள் புத்தகத்தில் தென்கொரிய வவோன் நகரில் 1800 நபர்கள் கொல்லப் பட்டத்தை தன்னால் மறக்க முடியவில்லை என கூறுகிறார்.

வடகொரிய படைகள் 1950 களில் நோகன்ரா நகரிலிருந்து திரும்பி சென்ற உடனே அமெரிக்க pamm_poபடைதளத்திற்கு அருகே தென்பட்ட தென்கொரிய பொதுமக்கள் நூற்றுக் கணக்கில் குறிப்பாக பெண்களையும், குழந்தைகளையும் அமெரிக்க ராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது. அமெரிக்க ராணுவத்தின் 25வது டிவிசன் கமாண்டர் தன் படை வீரர்களுக்கு தென்கொரிய குடிமகன் யாராக இருந்தாலும் அவர்களை எதிரியாக முடிவு செய்து கொல்லப்பட வேண்டும் என உத்தரவு இட்டிருந்தார் எனவும் தெரிய வந்துள்ளது. எடுத்துக்காட்டாக 1950 செப்டம்பர்  1 இல் அமெரிக்க கப்பற்படை தென்கொரிய போஆங் அகதி முகாமின் மீது தாக்குதல் நடத்தி அதில் இருந்த 200க்கும் மேலான அகதிகளை கொன்றுகுவித்துள்ளது.

அதோடு அல்லாமல் நோ கன் ரா அகதிகள் முகாமிலிருந்த 300 நபர்களை அமெரிக்க படை தலைவரின் உத்தரவின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஓய்வு பெற்ற ராணுவ எழுத்தாளர் கூறியுள்ளார். தென்கொரியாவில் போரில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் இழப்புகளுக்கு நஷ்டஈடு கேட்டு 1960களில் வழக்கு தொடர்ந்த போது சியோலில் உள்ள அமெரிக்க ராணுவ தலைமை அலுவலகம் அவர்கள் போரினால் கொல்லப்படவில்லை எனவும் போரின் போது அவர்கள் காணாமல் போய்விட்டார்கள் எனவும் கூசாமல் பொய் கூறி தப்பித்துக் கொண்டது. மீண்டும் 1997இல் வழக்கு தொடர்ந்த போது அமெரிக்க ராணுவம் 1950களில் அங்கு செல்லவே இல்லை எனவும் அங்கு ராணுவம் முகாமிடவில்லை எனவும் சாதித்து வருகிறது.

அமெரிக்காவின் கரங்கள் தென், வட கொரியா யுத்தத்தினால் ரத்தமயமாகிப் போனதை வரலாறு கூறுகிறது. வியட்நாம், ஈராக் போர்களுக்கு முன் ஆப்கன் சோதனை முயற்சியாக தென்கொரிய ஆயுதமற்ற பொதுமக்களை குறி வைத்து கொல்வது என்பது அமெரிக்கப் படையின் நடைமுறையாக இருந்துள்ளது. மூன்று வருடம் நடந்த யுத்தத்தினால் 20 லட்சம் தென்கொரிய பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின் அமெரிக்கப் படைகள் மிக மிக அதிக அளவில் வெடிகுண்டுகளும், துப்பாக்கி குண்டுகளையும் பயன்படுத்தி உள்ளது. முதன் முதலாக நாபாம் குண்டுகளை கொரிய யுத்தத்தில் தான் அமெரிக்கா பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தி உள்ளதும் தற்போது வெளிவந்துள்ளது. வடகொரியாவில் உள்ள எந்த ஒரு நகரமும் குண்டு வீச்சுகளிலிருந்து தப்பக்கூடாது எனவும், அதன் பொதுமக்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என தனது படைகளுக்கு முன்னாள் அமெரிக்க விமானப்படை தலைவர் கர்ட்டீஸ் லெமே உத்தரவிட்டுள்ளதும் ஆய்வு முடிவுகளின் மூலம் தகவல்கள் வெளி வந்துள்ளன.

கிம் மேன் சிக் கொரிய யுத்தத்தின் போது 1950 களில் தென்கொரிய ராணுவகாவல்துறையின் சார்ஜன்டாகப் பணிபுரிந்தவர் கடந்த ஆண்டு தி நியூயார்க் டைம்ஸ் நாளேடு அவரை பேட்டி எடுத்தபோது அவர் கூறியதாவது “ஒருவரை கம்யூனிஸ்ட் என சந்தேகப்பட்ட உடனே அவரை ராணுவ டெலிபோன் ஒயரால் கட்டி அவருடன் பத்து, இருபது நபர்களை இணைத்து கட்டிய பிறகு துப்பாக்கியால் சுட தொடங்கினால் துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பிக்க நபர்கள் முயலும் போது டெலிபோன் ஒயர்களில் கட்டப்பட்ட அவர்களின் மணிகட்டுகள் அறுந்து விழுவதையும் இரத்தம் அவர்களின் வெள்ளை சட்டைகளின் மீது தெரித்து விழுவதையும் பார்த்து ரசிப்போம்’’ என கூறியுள்ளார். மேலும், அவர் உண்மை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு குழுவிடம் கம்யூனிஸ்ட் கட்சி குடும்பங்களை அமெரிக்க ராணுவம் சுட்டுக்கொன்றதாக சாட்சியமும் அளித்துள்ளார்.

உண்மை மற்றும பரஸ்பர குழுவின் உறுப்பினர் கிம் வாங் என்பவர் தி கொரியா டைம்ஸ் பத்திரிகையில் எழுதுகிறார். போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஓன்றிணைந்து சங்கமாகி நஷ்ட ஈடு கோரி போராடினால் அவர்களுக்கு நல்ல வேலையோ பொதுத்துறை,காவல்துறை, ராணுவத்திலோ அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளை தென்கொரிய அரசு தொடர்ந்து மறுத்தே வருகிறது எனவும் அவர்களின் பிள்ளைகள் பள்ளிகளில் புறக்கணிக்கப்பட்டு வருவது தொடர்கிறது எனவும் எழுதியுள்ளார்.

புதிதாக பொறுப்புக்கு வந்த புதிய பழைமை வாதிகளின் தென்கொரிய அரசு குழுவிடம் முடிவுகளை ஏற்றுக் கொள்ள மறுத்ததோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈடு தொகையும் வழங்க மறுத்துவிட்டது. தென்கொரியாவில் உள்ள வலதுசாரிகள் குழுவின் முடிவுகள் பழைய குப்பைகளையே மீண்டும் மீண்டும் கிளறி வருவதாகவும், அதனை தவிர எதுவும் இல்லை என கூறிவருகின்றனர்...

நன்றி.....

WWW. FRONT LINE.COM

WWW. DPRK GOVT.COM

WWW. SOUTH KOREA GOVT.COM

-ஆர்.இரவி

Pin It