• சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மூத்த மூன்று நீதிபதிகள் (கொலிஜியம்) தேர்ந்தெடுக்கும் முறையே உள்ளது. அதில் மூத்த நீதிபதிகள் இருவர் எப்போதும் பார்ப்பனர்களாகவும், பிற மாநிலத்தவர்களாகவுமே உள்ளனர். உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு மாவட்ட நீதிபதி பதவி வரை உள்ளது போல எழுத்துத் தேர்வோ, மூத்த வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு உள்ளதுபோல தகுதி வரையறைகளோ ஏதும் இல்லை. அதனால் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நீதிபதிகள் தேர்வில் தோல்வி அடைந்த ஒருவர் அதே ஆண்டில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆக முடிந்தது.

• தற்போது சென்னை உயர்நீதி மன்றத்தில் மொத்தமுள்ள 60 நீதிபதி பணி இடங்களில் காலியாக வுள்ள 18 பணி இடங்களுக்கு நடை பெறும் தேர்வில், பார்ப்பனர் களுக்கும் ஏற்கெனவே பிரதிநிதித் துவம் பெற்றுள்ள உயர்பிரி வினருக்குமே மீண்டும் வாய்ப் பளிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 பணியிடங்களை ஒரே முறையில் நிரப்பாமல், இரண்டு கட்டங்களாக நிரப்பி, மேலும் பார்ப்பனர்களை நியமனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

• உச்சநீதிமன்றம்கூட, நீதிபதி நிய மனங்களில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காத சமூகத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று (ஆர். காந்தி, எதிர் இந்திய அரசு என்ற வழக்கில்) எடுத்துக் கூறி அனைத்து உயர்நீதி மன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அருந்ததியர், மீனவர், யாதவர், வன்னியர், பொற் கொல்லர், குயவர், வண்ணார், நாவிதர், பழங்குடியர், ஆச்சாரி, சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் போன்ற எத்தனையோ சமூகப் பிரிவினர் இதுவரை உயர்நீதி மன்ற நீதிபதிகளாக வரமுடியாத/இல்லாத நிலையைக் கருத்தில் கொண்டு வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகப் பிரிவினருக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும் என்று இக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

• ஏற்கெனவே தலைமை நீதிபதி, இரண்டாவது நிலையில் உள்ள நீதிபதிகள் உள்பட 7 பேர் பார்ப் பனர்களாக இருக்கும் நிலையில் மேலும் பார்ப்பனர்களையே நியமிப்பது சமூக நீதிக்கு எதிரான தாகும். நீதிபதிகள் நியமனத்தில் பார்ப்பனர்கள் 50 வயதுக்குள்ளாக வும், பார்ப்பனரல்லாதார் 50 வயதுக்கு மேல் உள்ளவர்களாகவும் நியமிக்கின்றனர். இத்தகைய முறை பார்ப்பன நீதிபதிகளை உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி வரை பதவி உயர்வு பெறச் செய்வதற்கும், பிற் காலத்தில் நீதிபதிகளை நியமனம் செய்யும் உச்சநீதிமன்ற கொலிஜி யத்திலும் இடம்பெறச் செய் வதற்குமான திட்டமிட்ட சமூக மோசடியேயன்றி வேறில்லை.

• இத்தேர்வுக்கெதிராக வழக் கறிஞர்கள் சங்கம் தொடுத்த வழக்கு கூட மரபுக்கு மாறாக முன்னரே நடந்த பேச்சு வார்த்தையின்போது பட்டியலை நியாயப்படுத்தியும் வழக்கறிஞர்கள் தங்களது போராட்டத்தையும், வழக்கையும் திரும்பப் பெற வேண்டுமென்று பேசியவரும், இளையவருமான ஒரு பார்ப்பன நீதிபதியிடமே விசாரணைக்கு வருகிறது. வேறு அமர்விற்கு மாற்றக் கோரினாலும் தலைமை நீதிபதியும் மறுக்கிறார். பொது நீதிக்கும், அற நெறிக்கும் எதிராக இவ்வழக்கை நடத்து கிறார்கள் என்ற கேவல நிலையே நிலவுகிறது.

• உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மூன்றில் ஒரு பங்கினர் மாவட்ட நீதிபதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். அதில் 4ஆவது இடத்திலுள்ள சிறு பான்மை சமுதாயத்தினர் ஒருவரை தவிர்ப்பதற்காகவே 9 பேர் பட்டியல் மட்டுமே தயாரித்துள்ளனர். அவரது பதவி ஓய்வுக்காகவும், தாங்கள் விரும்பும் பார்ப்பன பெண்ணுக்கு 45 வயது நிறைவடை வதற்காகவும் காத்திருக்கின்றனர்.

• சமூக நீதிக்கு முன்னோடியாக உள்ள தமிழ்நாட்டில் 150 ஆண்டு களாக சென்னை உயர்நீதி மன்றத்தில் பார்ப்பனர்களும், உயர் பிரிவினருமே நீதிபதிகளாக அதிக எண்ணிக்கையில் இருந்து வரும் நிலையில் இன்றுவரை வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் சமூகப் பிரி வினருக்கும், உரிய பிரதிநிதித்துவம் இல்லாத சிறுபான்மையினர் போன்றோரும் நீதிபதிகள் நியமனத்தில் வாய்ப்களிக்க வேண்டும் என்று சமூகநீதிக்கான கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

Pin It