*  ‘கிங்’ ஆக இருப்பதையே எனது கட்சித் தொண்டர்கள் விரும்புகிறார்கள்.         - விஜயகாந்த்

                ஜனநாயகம் - தேர்தல் - கூட்டணி எல்லாத்துக்கும் முழுக்குப் போட்டுட்டு மன்னராட்சிக்கு உங்களை போராட அழைக்கிறாங்க... புரியுதா, கேப்டன்.

*  16,000 முன்னாள் இராணுவ வீரர்கள் ரிலையன்ஸ் அம்பானியின் சொத்துக் களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.       - செய்தி

                அன்று ‘தேசத்தை’ காக்கும் பணி; இன்று தேசத்தின் ‘முதுகெலும்பை’க் காக்கும் திருப்பணி! என்னே தேசபக்தி...!

முதலமைச்சர் வேட்பாளர் பட்டியலில் நானும் இருக்கிறேன்.        - சரத்குமார்

                வாங்க... வாங்க... உட்காருங்க... இதோ, டி. இராஜேந்தர், வந்துகிட்டே இருக்காரு...

ஜெயலலிதா முதல்வராக, சபரிமலை அர்ச்சர்கள் தமிழகக் கோயில்களில் பூஜை.            - செய்தி

                அதுதான், அய்யப்பனுக்கு பெண்கள் என்றாலே ஆகாதே; முதலமைச்சராக மட்டும் அனுமதிச்சிடுவானா?

ஊழலே செய்யாத கட்சியுடன் கேப்டன் கூட்டணி அமைக்க பிரேமலதா கோயிலில் பிரார்த்தனை.       - ‘தினமலர்’

                விஜய்காந்துகிட்ட நேராக சொன்னா நிச்சயம் கேட்க மாட்டாருன்னு அவ்வளவு நம்பிக்கை.

பாகிஸ்தான் பரோட்டா விற்பது - தேசத் துரோகம். வேலூர் அருகே இந்து முன்னணி ஓட்டல் முன் முற்றுகை.  - செய்தி

                அந்த பாகிஸ்தான் பரோட்டாவை ஆத்திரத்தோடு இரும்புக் கரண்டியால் ஓங்கி ஓங்கி அடித்து, கொத்து கொத்துன்னு கொத்தி கொத்து பரோட்டாக்கிட்டா அதைவிட சுவையான தேசபக்தி என்னங்க இருக்கு?

Pin It